எனது ஆய்வின் முடிவை நோக்கிய பாதை ஆய்வின் முடிவிற்கான சாத்தியம் உலகில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் மிகச்சிறிய துணிக்கைகள் தொட்டு பெரிய உயிரினங்கள் வரையானவற்றின் சிறு சிறு அசைவுகளுக்கும் என்று அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் விஞ்ஞான அடிப்படையிலான விளக்கத்தை வழங்கிட முடியும். இது வரை காலமும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவியலாளர்கள் என்று பலரும் வகுத்துச்சென்ற கொள்கைகள் சூழலின் நடைமுறைப்போக்கை தெளிவாக ஆராயவும் துல்லியமாக எதிர்வுகூறவும் எளிதான பல வழிகளை எமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றன. அவர்கள் எமக்கு காலத்திற்கு காலம் வழங்கிச் சென்றிருக்கின்ற பல விதிகள் காரணமாக கடந்த காலத்தில் விஞ்ஞானத்தின் பல துறைகளிலும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். பல தெளிவுகளை கண்டிருக்கிறோம். ஆச்சரியமாக தெரிந்த விடயங்கள் கால ஓட்டத்தில் அடங்கியிருப்பதை அனுபவ வாயிலாக அறிந்திருக்கிறோம். ஆகவே எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதற்குரிய அடிப்படை கட்டமைப்பும் அது சமூகத்தில் உண்டு பண்ணும் விளைவும் விஞ்ஞானத்தின் அம்சங்களில் சார்ந்திருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். நடைமுறைவாழ...