நவீன அறிவியலையும் தாண்டி செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளின் தாக்கம்
மனிதனின் சமகால அறிவியல் வளர்ச்சி என்பது மிகவும் பிரமாண்டமானது. மனித இன வரலாற்றில் விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேக போக்கைக் கொண்ட காலத்தில் உள்ளோம். தற்போதுள்ள சாதனங்களுடன் ஒப்பிடுகையில் 5-10 வருடங்களின் முன் பயன்படுத்தப்பட்ட சான்றுகள் கூட வேடிக்கையானவை என்று எண்ணும் வகையில் மனிதனின் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி குறுகிய காலத்தில் பல மடங்காக அதிரித்துச் செல்கிறது. அடுத்து வரும் காலங்களிலும் இவ்வேகத்தில் அல்லது இதைவிடக்கூடிய வேகத்தில் அபிவிருத்தி அடைந்து செல்வோம் என்பது கண்கூடு.
ஆனாலும் மனிதனின் அறிவியல் வளர்ச்சியாலும் முற்றாக விடை காணப்படாத மர்மங்களான கருந்துளை மர்மங்கள், அண்டத்தில் நிலவும் நிலையற்ற காலத்தன்மை போன்று பல குறிப்பிடக்கூடிய அம்சங்களின் செல்வாக்குகளும் இதற்கு காரணமாக வரக்கூடியசாத்தியப்பாடுகளும் உண்டு. இவ்வாறான இனங்காணப்படாத பல காரணிகளின் செல்வாக்குகளும் தாக்கங்களும் இம்முக்கோணத்தின் மர்மத்தொடர்கதைகளுக்கு வழிசமைப்பனவாகவே இருக்கும். ஆகவே நவீன அறிவியலையும் தாண்டிய இக்காரணிகளின் பாதிப்பு இம்முக்கோணம் பற்றிய பல வினாக்களை மேலும் தூண்டியுள்ளது என்பது நிதர்சனமாகும். எதிர்காலத்தில் அடையக்கூடிய இவ்வளர்ச்சிகள் பற்றிய விரிவான அறிக்கையை ஆய்வின் அடுத்து வரும் பகுதிகளில் அலசலாம் என நினைக்கிறேன்.
தொடரும்.................
Comments
Post a Comment