Skip to main content

Posts

Showing posts from November, 2011

எழுந்த அறிவு - தமிழன் டா!!!

படப்பிடிப்பு தொடங்கிய கணத்தில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை தந்த படங்களில் ஏழாம் அறிவும் ஒன்றாய் இருந்தது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் திரைப்படம் சார்பாக படக்குழுவினரால் வெளியிடப்படும் கருத்துகளும் சற்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தன என்றால் மறுப்பதிற்கில்லை. குறிப்பாக கதாநாயகன் சூர்யா , போதிதர்மனாக காட்டப்படும் சில புகைப்படங்களும் சாதாரண எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே எமது எண்ணங்களை குவியச்செய்த வண்ணம் இருந்தன. முடிவில் படமும் வந்தது. பார்த்தோம். மேற்கொண்டு இதனூடே பயணிக்கும் முன்னர் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இது “ ஏழாம் அறிவு ” எனும் திரைப்படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்பதிப்பின் உருவாக்கம் ஏழாம் அறிவின் பாதிப்பினால் தோன்றியது என்றே கூறவேண்டும். உலக இயக்கம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனது பாரம்பரியங்களாகட்டும் அவனது கலாசாரங்களாகட்டும் அவன் வாழ்ந்த விதிமுறைகளாகட்டும் அனைத்தும் தற்பொழுது பார்க்கும் பொழுது எம்மால் சற்றே “ எப்படி இதெல்லாம் இருந்தது ??!!” என்பது போன்ற கேள்விகளைச்சரங்களை மனதிலே எழுப்பிய வண்ணம் வேறு