Skip to main content

எழுந்த அறிவு - தமிழன் டா!!!


படப்பிடிப்பு தொடங்கிய கணத்தில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை தந்த படங்களில் ஏழாம் அறிவும் ஒன்றாய் இருந்தது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் திரைப்படம் சார்பாக படக்குழுவினரால் வெளியிடப்படும் கருத்துகளும் சற்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தன என்றால் மறுப்பதிற்கில்லை.

குறிப்பாக கதாநாயகன் சூர்யா, போதிதர்மனாக காட்டப்படும் சில புகைப்படங்களும் சாதாரண எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே எமது எண்ணங்களை குவியச்செய்த வண்ணம் இருந்தன. முடிவில் படமும் வந்தது. பார்த்தோம்.

மேற்கொண்டு இதனூடே பயணிக்கும் முன்னர் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இது ஏழாம் அறிவுஎனும் திரைப்படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்பதிப்பின் உருவாக்கம் ஏழாம் அறிவின் பாதிப்பினால் தோன்றியது என்றே கூறவேண்டும்.

உலக இயக்கம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனது பாரம்பரியங்களாகட்டும் அவனது கலாசாரங்களாகட்டும் அவன் வாழ்ந்த விதிமுறைகளாகட்டும் அனைத்தும் தற்பொழுது பார்க்கும் பொழுது எம்மால் சற்றே எப்படி இதெல்லாம் இருந்தது??!!” என்பது போன்ற கேள்விகளைச்சரங்களை மனதிலே எழுப்பிய வண்ணம் வேறு சிந்தனைக்குள் மூழ்குவதென்பது நம்மவர்களின் மங்காத பழக்கவழக்கங்களுள் முக்கியதொன்றாக காணப்பட்டது என்றால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எமது தமிழ்மொழியாகட்டும் நாம் நெறி கொண்ட மதமாகட்டும் அனைத்தின் ஆரம்ப கட்டுப்பாடுகளுக்கும் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கும் எவ்வித வேறுபாடு காணப்படாதபோதும் அதை கடைப்பிடிக்கும் எம்மவர்களில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றனவே. காலம் செல்லச்செல்ல அக்கரைக்கு இக்கரை பச்சைஎன்ற வரையறைக்கு விதிவிலக்கில்லாமல் வாழ்ந்துவரும் மாந்தர்களாக நாமும் காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்ட வண்ணம் உள்ளோம்.

கிட்டத்தட்ட 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் பிரதேசமாய் குமரி கண்டம் இருந்தது என்பதுவும் தமிழர்களின் மிகச்சிறந்த தொழில்நுட்பங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை வரையறைகள் என தமிழனின் சொத்துக்கள் பலவும் பாரியதொரு கடற்கோளால் அழிக்கப்பட்டதுவும் நம்முள் பலரும் அறியாததே.

தமிழர்கள் எனப்படுபவர்கள் ஆயகலைகள் 64 இலும் அட்டமாசித்திகளிலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்று மணிமேகலை கூறுகிறது. சிவனை பரம்பொருளாக வழிபடும் சித்தர்கள் தமிழின் சொத்துக்கள். நாம் செய்யும் ஒவ்வொன்றும் இயற்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நாம் காணும் உண்மை. இயற்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது அவை எம்மவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது சித்தர்கள் அறிந்த உண்மை. அவர்கள் செல்லும் பாதையும் கூட. இவர்கள் அறியாத எது பூமியில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த உலகம் தோன்றியது முதல் இன்று நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. இவற்றை இன்று சமன்பாடுகளை வைத்து விஞ்ஞானம் எனக்கூறி சமன்பாட்டின் அடிப்படையில் நிகழ்வுகளை அவதானிக்கிறோம். இவை அனைத்தையும் ஞானத்தால் அறியப்பெற்றவர்கள் எங்கள் முன்னோர்களேஅவர்கள் தமிழர்களே.  தமிழன் என்ற வார்த்தை உள்ளடக்கியிருந்த அர்த்தம் மிகவும் உயரியதாக காணப்பட்டதாகவே வரலாறுகள் எமக்கு சொல்லிக்கொடுக்கின்றன. ஒரு தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்பட்டவிதம் மட்டுமே போதுமே பழந்தமிழன் பலத்தினை எடுத்துரைக்க

இவ்வாறு மிகவும் சிறந்த ஒரு முகவரியை நாமே ஒவ்வொரு நாளும் தொலைத்தவண்ணம் உள்ளோம் என்றால் அது ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயமே

சரிஇப்போது ஏழாம் அறிவு என்கிற படைப்பிற்கு வருவோம்தமிழர்களிற்கு உணர்ச்சியை ஊட்டவல்ல படங்களுள் தற்காலத்தில் நான் பார்த்த திரைப்படம் என்று இதை கூறலாம். பொதுவாக இன்றைய காலகட்டத்து திரைப்படங்கள் 2-3 மணிநேரத்தினை செலவிடுவதற்கே அல்லது பொழுது போக்குவதற்கே என்று ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் சிந்திப்பதற்கு, எம் முகவரிகளை ஞாபகமூட்டுவதற்கு 2-3 மணித்தியாலம் பயன்பட்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக படம் ஆரம்பித்ததில் போதிவர்மன் காட்டப்பட்ட விதம். பின்னணி இசைகளுடன் போதிவர்மன் பிரவேசிக்கும் காட்சிகள் அனைத்தையும் பார்க்கும் போது எம்மையறியாமலே நம்மவன்என்கிற நெஞ்சத்து துடிப்பு நம்மை ஆழ்கிறது. மற்றும் அட்டமா சித்திகளில் ஒன்றான வசித்துவத்தை போதிதர்மனாக வரும் சூர்யா பயன்படுத்தும் விதம், அது திரையில் காட்டப்படும் விதம் அனைத்தும் குறுகிய நேரத்தில் இருந்தாலும் அது எம்மவரின் திறமைகள், தமிழனின் சொத்து என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு தமிழன் அங்கு காட்டப்பட்டு இருக்கிறான். சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட நோக்குவர்மம்”, எம்மவர்களின் நிரந்தர சொத்துக்களில் ஒன்றாக காணப்பட்டதுவும் குண்டலினி சக்தியினை ஒவ்வொரு தமிழனும் கையாளத்தெரிந்தவன் என்பதுவும் வரலாற்றின் மூலம் மட்டும் காணக்கூடியதாகி விட்டது. “7ம் அறிவு” இல் நோக்கு வர்மம் என்ற அந்த திறமை தான் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இது நம்மவர்களுள் பலருக்கும் படத்தினை பார்க்கும் போது தான் முதன் முதலாக அறிகிற வாய்ப்பு காணப்பட்டு இருக்கிறது என்றால் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மையே

கடைசியில் கூறப்படும் ஒரு வார்த்தை. சமயம்னு சொல்லிக்குடுக்காதீங்க சயன்ஸ்னு சொல்லிக்குடுங்க.இந்த தனி ஒரு வாசகத்தினால் பதியப்பட்ட அர்த்தங்கள் ஏராளம்.

சிறந்த தத்துவவியலாளரான புத்தர்இறைவனாக்கப்பட்டதும் அவரது கொள்கைகள் அனைத்தும் புத்த சமயம் என்ற வரையறையினுள் அடங்கிவிட்டது. ஆனால் அரிஸ்ரோட்டில், பிளாட்டோ அவர்கள் இன்றும் அனைவராலும் கவனிக்கப்படுகிறார்கள் காரணம் அவர்களை மதம் என்ற பிரிவுக்குள் மக்கள் மட்டுப்படுத்தி வைக்கவில்லை. தமிழர் கைக்கொண்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே விஞ்ஞானமே. நோக்குவர்த்தினால் திருமணமான பெண்கள் கவரப்படக்கூடாது என்பதற்காக சிவப்பு பொட்டு வைப்பது முதல் குளிர்ந்த சந்தனத்தை நெற்றியில் வைத்து நரம்பு மண்டலத்தை குளிரச்செய்த்து முதல் அனைத்துமே விஞ்ஞானம். ஆனால் சமயமாக்கப்பட்டுவிட்டன. காலங்கள் கடக்க அவை நாகரிகம் என்ற பெயரால் அழிக்கப்பட மீண்டும் ஆரம்ப நிலையை நோக்கியவண்ணமே நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயமே….

அதாவது 7ம் அறிவு எனும் திரைப்படம் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம். இவ்வாறு சிந்திக்க வைக்கும் திரைப்படங்கள் காலத்திற்கு காலம் வரும் பொழுது அவற்றை கணங்கள் சிலவற்றிற்கு இரையாக்கிவிட்டு மீண்டும் மீண்டும் நாளாந்த கடமைகளில் ஒன்றித்து விட்டால் இவ்வாறான திரைப்படங்கள் வந்து பயன் ஒன்றும் இனங்காணப்படாதேஅத்துடன் இத்தனை சவாலான திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்படும் என்று எதிர்பார்ப்பதுவும் தவறே..

மாற்றம் ஒன்று வேண்டும். மீண்டும் மீண்டும் இப்படி சிந்திக்கவைக்கும் திரைப்படங்களை பார்த்து தமிழன் என்று மார்தட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லையேமாறாக, தமிழனாக வேண்டும். மீண்டும் நாம் தமிழர்களாக மாறவேண்டும். அது தான் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எங்களுக்கு கிடைத்த வெற்றி

தமிழனின் கலைகள் 64ம் அட்டமா சித்திகளும் கீழே….
இப்படி இருந்தோம் என்று மார்தட்டிக்கொள்ளவாவது பயன்படட்டுமே.

எழுத்திலக்கணம், எழுத்தாற்றல், கணிதவியல் ,மறைநூல், தொன்மம், இலக்கணவியல், நயநூல், கணியக்கலை, அறத்துப்பால், யோகக்கலை, மந்திரக்கலை, நிமித்தகக்கலை, கம்மியக்கலை, மருத்துவக்கலை, உறுப்பமைவு, மரவணப்புவனப்பு, அணியியல், இனிதுமொழிதல், நாடகக்கலை, ஆடற்கலை, ஒளிநுட்பஅறிவு, யாழியல், குழலிசை, மத்தளநூல், தாளயியல், வில்லாற்றல் , பொன்னோட்டம், தேர்ப்பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம், மணிநோட்டம், மண்ணியல் , போர்ப்பயிற்சி, கைக்கலப்பு, கவர்ச்சியியல், ஓட்டுகை, நட்புப்பிரிக்கை, மயக்குக்கலை, புணரும் கலை, வசியக்கலை, இதழியற்கலை, இன்னிசைப்பயிற்சி,பிறஉயிர் மொழி, மகிழுருத்தம், நாடிப்பயிற்சி, கழுலம், இழப்பறிகை, மறந்த்தையறிதல், வான்புகுதல், வான்செய்கை, கூடுவிட்டு கூடு பாய்தல், தன்னுருகறத்தல், மாயம், பெருமாயம், நீர்க்கட்டு , அழற்கட்டு, வளிக்கட்டு, கண்கட்டு , நாவுக்கட்டு, விந்துக்கட்டு , புதையற்கட்டு, வாற்கட்டு, சூனியம்

 பிரம்மிக்க வைக்கும் அத்தனை கலைகளும் தமிழனின் சொத்துக்களாக இருந்தன. இன்று இவை தான் அவைஎன்று தமிழன் என்ற போர்வையில் இருக்கும் எங்களால் உணரப்படுகின்றன. அத்துடன் தமிழ் தந்த சித்தர்களின் சொத்துக்களாகிய அட்டமா சித்திகள்.

1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்….

எமது முகவரிகள் இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன என்று எண்ணுகையில் உள்ளம் கொண்டாடுதே!!! மாறுவோம்மாற்றுவோம்….

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...