Skip to main content

Visual Basic - Hello World (பார்வை - 2)


அனைவருக்கும் வணக்கம்….

சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம்.
பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக….
நாம் நாளை பாடசாலை சென்றேன்.
இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும்.
இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட வண்ணம் உரையாடும் போது அங்கு பிழைகள் அற்ற பல்வேறு செயற்திட்டங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அந்த வகையில் இப்போது Operators பற்றிய சில தகவல்களை இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

1.Relational Operators
     1.1   <          -     less than
     1.2   <=         -     less than or equal to
     1.3   >          -     greater than
     1.4   >=         -     greater than or equal to
     1.5   =          -     equal to
     1.6   <>         -     not equal to
2.Logical Operators
     2.1   And
     2.2   Or
     2.3   Not
     2.4   Xor
இங்கு முதல் மூன்றும் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருபவை ஆகும்.

3. Arithmetic Operators
     3.1   ^          -     Exponentation
     3.2   -          -     Negation
     3.3   *          -     Multiplication
     3.4   /          -     Divison
     3.5   \          -     Integer Division
     3.6   Mod        -     Modulo
     3.7   +          -     Addition
     3.8   -          -     Substraction.

இவற்றின் உதவியுடன் Visual Basic இல் சில விடயங்களை பார்க்கலாம்.
அடுத்த செயன்முறையாக Visual Basic இல் Form இல் ”Hello World” எனும் வாசகத்தை இடம்பெறச்செய்வோம்.

Form 1
முறை 01….
                                                                              
Tool Box
இடது பக்கமாக காணப்படும் Tool Box இல் Label Tool இனை click செய்து பின்னர் Form click செய்தவண்ணம் cursor ஐ இழுத்துசெல்லும்போது செவ்வக வடிவம் பெறப்படுவதை அவதானிக்கலாம். இந்நிலையில் mouse இலிருந்து கையை எடுத்து Form 1 காட்டியவண்ணம் அதனை நிறுவுங்கள்.

பின்னர் வலது பக்கமாக காணப்படும் Properties Window இல் Caption என்ற பகுதியில் ”Label 1” என்று காணப்படுவதை ”Hello World" என்று மாற்றிவிட்டால் போதும்.
அதற்கான படங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
Properties Window
Form 2



Properties Window இல் காணப்படும் மற்றையவைகளையும் மாற்றி முயற்சி செய்து பார்க்கவும். குறிப்பாக AutoSize, BackStyle, Font, ForeColor.... 

முறை 02

இது சற்று வித்தியாசமானது. வழமை போல இப்போது Tool Box இலிருந்து Button Tool இனை click செய்து குறித்த Form இல் Button ஒன்றை நிறுவுதல். பின்னர் Properties Window மூலமாக Button என்ற பெயரை Ok என்று மாற்றிகொள்ளுங்கள்(விரும்பிய ஒரு Caption ஐ இட்டுக்கொள்ளுங்கள்). பின்னர் Button இனை Double Click பண்ணும் போது வரும் Page இல் print "Hello World" என்று தட்டச்சு செய்யுங்கள். அதற்கான படங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. 
படம் 02
படம் 01



படம்03
                                         



படம் 04
 இங்கு படம் 03 இல் காட்டப்பட்டவாறு Coding  இனை எழுதிய பின்னர் முன்னைய பதிவில் காட்டப்பட்ட Start Button இனை Click செய்து இயங்கு நிலைக்கு மாறிய பின்னர் படம் 04 இல் காட்டப்பட்டுள்ளதைப்போன்று Ok Button இனை Click செய்ய படம் 05 இல் காட்டப்பட்டுள்ளதைப்போன்று Form இல் வாசகம் print பண்ணப்படுகிறது. 
படம் 05

பார்வைகள் தொடரும்.....

Comments

  1. Keep up the Good Work....
    Thanks for this post.

    ReplyDelete
  2. Thanks for the comment and your visit, Ramesh.

    ReplyDelete
  3. படிக்க வச்சிருவீங்க போல..

    ReplyDelete
  4. (ம்ம்ம்.... நம்மளால முடிஞ்ச அளவுக்கு நாம ற்றை பண்ணலாம்னு தான்....)

    பொதுவாக இப்படியான விளக்கங்கள் (தமிழில்) இணையப்பக்கங்களில் அரிதாக காணப்படுவதை அவதானித்த பின்னர் தான் தமிழில் எழுத வேண்டும் என்ற அவா உதயமானது...

    ReplyDelete
  5. மிகவும் நன்றி..
    நானும் உங்களுடைய பதிவை படித்து

    அதன் படி செய்து வருகிறேன்.

    தொடரட்டும் உங்கள் பொன்னான பனி ....!

    ReplyDelete
  6. தங்களின் விமர்சனத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் நண்பரே...
    தெளிவின்மைகள் காணப்படுமிடத்து அவையும் எதிர்பார்க்கப்படுகின்றன...
    நன்றிகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...