வாசகப்பெருமக்களுடன் ஏறத்தாழ இரு வருடங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் உண்மையின் பக்கத்தின் மூலமாக அடுத்த சில மாதங்களுக்கு விஷுவல் பேசிக் (Visual Basic) என்னும் நிரலாக்க மொழி பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
நேரடியாக Visual Basic கற்கைகளினுள் செல்வதற்கு முன்பாக கணினி வரலாற்றில் நிரலாக்கம் பற்றிய சிறிய அறிமுகத்துடன் உட்செல்லலாம் என எண்ணுகிறேன்.
பொதுவாக கணினி மொழிகள் என்பவை சில விதிமுறைகளுக்கு வரையறுக்கப்பட்டு சில நியமச்சொற்களுடன் உருவாக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் மென்பொருள் தான். ஆனால் பல்வேறுபட்ட அறிவுறுத்தல்களுக்கேற்றவாறு செயற்பட வேண்டும் என்பதைக்குறித்து நிற்கக்கூடிய மென்பொருள் என்று கூறலாம்.
1957 ம் ஆண்டில் COBOL நிரலாக்க மொழி உருவாக்கப்பட்டதில் இருந்து காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட வளர்ச்சிகளுடன் ஒவ்வொரு மொழிகளும் உதயமாகத்தொடங்கின. அந்த வகையில் VisualBasic , 1991 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
இதில் Basic என்ற சொற்பதம் மொழி அபிவிருத்தியை மையமாகக்கொண்டு 1960களிலேயே தோற்றம் பெற்றது. உயர்நிலை நிரலாக்க மொழிகளை கொண்ட குடும்பமாக இதனை கூறலாம். அதற்கான விரிவாக்கம்
B – Beginner’s
A – All-Purpose
S – Symbolic
I – Instruction
C – Code
இதன் அடிப்படையில் ஆரம்பகாலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள் விஞ்ஞானிகளாலும் கணித அறிவில் மேம்பட்டவர்களாலும் மாத்திரம் பயன்படுத்தப்படக்கூடிய நிலை Micro Computers இன் வருகை மூலம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்காணப்பட்டது.
Micro Computer இற்கான முதலாவது Basic Language, Bill Gates மற்றும் Paul Allen என்பவர்களால் எழுதப்பட்டது. இவற்றிலும் காலப்போக்கில் பல்வேறுபட்ட மாற்றங்கள் மூலம் 1991ம் ஆண்டளவில் Visual Basic அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் Visual Basic இல் GUI அமைப்பு காணப்படுவதால் மற்றைய நிரலாக்க மொழிகளை விட இதனை கையாளுவது மிகவும் இலகுவாக இருக்கும்.
அறிமுகத்திற்கு இவ்வளவு தகவல்களும் போதும் என எண்ணுகிறேன். அத்துடன் இவை சார்ந்ததான மேலதிகமாக தகவல் அல்லது தெளிவின்மைகள் காணப்படுமிடத்து அவற்றை விமர்சனம் மூலமாக கேட்கலாம்.
இப்போது கற்கைகளினுள் செல்ல்லாம் என எண்ணுகிறேன்.
Visual Basic இனை நீங்கள் Start à All Programs à Microsoft Visual Basic 6.0 என சென்று குறித்த மென்பொருளினை திறக்கும் பொழுது
மேற்கண்டவாறு ஒரு Window வில் Standard EXE என்பதை தெரிவுசெய்து அதனை Open செய்யவும்.
Open பண்ணியவுடன் மேற்கண்டது போன்ற ஒரு Window வினை நீங்கள் காணலாம்.
பொதுவாக Visual Basic இல் நாம் குறித்த Coding களை எழுதி வடிவமைத்தவுடன் அவை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிய கீழ்க்கண்டவாறு செல்லலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் சிவப்பு மையினால் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள Start Button இனை அழுத்தும் போது
இன்னொரு பகுதிக்கு தாங்கள் அழைத்து செல்லப்பட்டு மேற்கண்ட அமைப்புள்ள ஒரு window வினை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.
பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு
Stop Button இனை அழுத்துவதன் மூலம் திரும்பிடலாம்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் Start Button இனை அழுத்தும் போது நாம் எழுதிய Coding களில் ஏதேனும் பிழை காணப்படின் மேற்படி Programme வெற்றிகரமாக செயல் படுத்தப்படாது. (Compile ஆகாது)
இவை சம்பந்தமாக தெளிவின்மைகள் காணப்படுமிடத்து விமர்சனங்கள் வாயிலாக வினாவலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
பார்வைகள் தொடரும்.....
பகிர்விற்கு நன்றி...வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நண்பரே...
ReplyDelete