Skip to main content

Posts

Showing posts from 2011

THE QUEEN OF HILLS – OOTY

Ooty also known as Udhgamandalam is the “queen of hill stations”. It is the capital of Nilgiris district. It is one of the most popular tourist resorts in India. We mention below some of the places you should see if you travel to Ooty some day in your life. OOTY: 1.     Botanical Garden. This is maintained by the Horticulture Department of the Government of Tamil Nadu. If you visit there, you can see there.. ·        well maintained beautiful lawns ·        rare tree species ·        20 million year old fossilized tree ·        an Italian style garden boardering a pool. ·        Wide variety of flowering bushes and plants. ·        Fern house 2.     Rose Garden. This covers around ten acres of land and has a collection of more than 1000 varieties of roses in this garden. Some of the highlights are.. ·        Miniature roses ·        Hybrid tea roses ·        Ramblers and floribunda ·        Rose

எழுந்த அறிவு - தமிழன் டா!!!

படப்பிடிப்பு தொடங்கிய கணத்தில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை தந்த படங்களில் ஏழாம் அறிவும் ஒன்றாய் இருந்தது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் திரைப்படம் சார்பாக படக்குழுவினரால் வெளியிடப்படும் கருத்துகளும் சற்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தன என்றால் மறுப்பதிற்கில்லை. குறிப்பாக கதாநாயகன் சூர்யா , போதிதர்மனாக காட்டப்படும் சில புகைப்படங்களும் சாதாரண எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே எமது எண்ணங்களை குவியச்செய்த வண்ணம் இருந்தன. முடிவில் படமும் வந்தது. பார்த்தோம். மேற்கொண்டு இதனூடே பயணிக்கும் முன்னர் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இது “ ஏழாம் அறிவு ” எனும் திரைப்படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்பதிப்பின் உருவாக்கம் ஏழாம் அறிவின் பாதிப்பினால் தோன்றியது என்றே கூறவேண்டும். உலக இயக்கம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனது பாரம்பரியங்களாகட்டும் அவனது கலாசாரங்களாகட்டும் அவன் வாழ்ந்த விதிமுறைகளாகட்டும் அனைத்தும் தற்பொழுது பார்க்கும் பொழுது எம்மால் சற்றே “ எப்படி இதெல்லாம் இருந்தது ??!!” என்பது போன்ற கேள்விகளைச்சரங்களை மனதிலே எழுப்பிய வண்ணம் வேறு

சொற்கள் வடிவமைப்பு - 2 (பார்வை-06)

அனைவருக்கும் வணக்கங்கள் இந்தப்பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியாக தான் இருக்கப்போகிறது. விபரம் தேவையானவர்கள் சென்ற பதிப்பினை பார்த்துவிட்டும் வரலாம். சென்ற பதிப்பிற்கு செல்லும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. "http://unmayinpakkam.blogspot.com/2011/10/05.html” இன்று சொற்கள் வடிவமைப்பில் சொற்களுக்கு Color மாற்றுதல், Font Name மாற்றுதல் மற்றும் Alignment இனை கையாளும் முறை பற்றி பார்க்கலாம். முதலில் மேற்படி முறைமை வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட Coding களை பார்த்துவிட்டு அவற்றினுள் சில விடயங்களை ஆராயலாம். Dim X, Y, z As Integer Dim l As Integer Private Sub Command1_Click() Text5.FontName = "Arial" End Sub Private Sub Command2_Click() Text5.FontName = "MS Sans Serif" End Sub Private Sub Command3_Click() Text5.FontName = "Monotype Corsiva" End Sub Private Sub Command4_Click() Text6.Alignment = 0 End Sub Private Sub Command5_Click() Text6.Alignment = 2 End Sub Private Sub Command6_Click() Text6

சொற்கள் வடிவமைப்பு (பார்வை - 05)

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்... கடந்த பதிப்பின் இறுதியில் அடுத்த பதிவாக Check Box மற்றும் Option Button போன்றவற்றின் பயன்பாடுகளை பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவற்றினை கொண்டு பயிற்சிகளை செய்யும் முன்னர் மேலும் அடிப்படை அறிவினை இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். இன்னும் ஓரிரு பதிவுகளின் பின்னர் Check Box மற்றும் Option Button இனை நோக்குதல் சாலப்பொருத்தமாக இருக்கும்... அந்த வகையில் இன்றைய பதிப்பின் ஊடாக குறிப்பிட்ட சொல்லினை தட்டச்சு செய்தபின்னர் அவற்றினை வடிவமைக்கும் விதங்களை பார்க்கலாம். அதாவது Bold, Italic, Underline மற்றும் Font Size. இவை அடங்கிய ஒரு முறைமையினை இங்கு இணைத்துள்ளேன்... (</span><span class="Apple-style-span" style="line-height: 17px;">Private Sub Command1_Click() Text1.FontBold = True End Sub Private Sub Command2_Click() Text1.FontItalic = True End Sub Private Sub Command3_Click() Text1.FontUnderline = True End Sub Private Sub Command4_Click() Text1.FontSize = "10" End Sub Private Sub Command5_Click

மாறிகள்( Variables) - (பார்வை -04)

அனைவருக்கும் வணக்கம் .. நீண்ட கால இடைவெளியுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்ற பதிப்பின் மூலம் Command Buttons மற்றும் Text Box என்பவற்றின் அறிமுக பயன்பாட்டினை சிறியதொரு முறைமை (System) மூலமாக பார்த்தோம்.  அதில் முதன்முறையாக Variable ஒன்றினை உருவாக்கியிருந்திருந்தேன். “Dim x As Integer” .... அடுத்த பகுதிகளினுள் செல்வதற்கு முன்னர் Variables பற்றிய அறிமுகத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம். பொதுவாக எங்கள் அனைவருக்கும் பெயர் உண்டு. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரினை கொண்டு காணப்படுவதால் தான் அவர் மற்றவர்களால் இலகுவாக இனங்காணப்படுகிறார். அதே போல நாம் கணினியினுள் பதிவு செய்யும் குறிப்பிட்ட தரவுகளையும் தற்காலிக அல்லது நிரந்தர தேவையினை நோக்காக கொண்டு நினைவகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பெயர் வைத்து அந்த பிரதேசத்தில் மேற்படி தரவுகளை சேமிப்போம். அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட பகுதிகள் தான் Variables. Variable என்பது நினைவகத்தில் (Memory) காணப்படக்கூடிய ஒரு சிறிய பகுதியினை வரையறுக்கலாம். (Small Section in the memory). பொதுவாக நூலகசாலைகளில் அங்கத்தவர் அட்டைகளை சேமித்து

Visual Basic - Use of Command buttons and Text Box (பார்வை - 3)

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் சென்ற பதிப்பில் "Hello World" என்ற வாசகத்தை எவ்வாறு Print பண்ணுவது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பின் மூலம் Text Box இனையும் Command Buttons சிலவற்றினை கொண்டு தரவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம். அதற்கு முன்னர் Visual Basic IDE(Integrated Development Environment) இல் சில பயிற்சிகளை நாம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கு காணப்படும் Tool Box , Properties Window , Form Layout , Properties Window , Project Explorer.. இவற்றில் ஏதாவது ஒன்று Close பண்ணுப்படலாம். அவற்றினை மீண்டும் தளத்திற்கு கொண்டுவருவதற்கு   Menu --> View என்று செல்வதன் அவற்றை மீண்டும் பெற்றிடலாம். அத்துடன் அவற்றை இலகுவான வழியில்(Short cut) மீள கொண்டு வருவதற்கான வழியும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக Properties Window இனை மீண்டும் பெற்றுக்கொள்ள "F4" அழுத்தினாலே போதும். இன்றைய பதிப்பின் மூலம் நாம் அறியவேண்டியது இது தான்.... அதாவது எமது பெயரினை எழுதி அவற்றினை கீழே காட்டப்பட்டுள்ள இரு Command Buttons மூலமாக எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கலாம

நிரலாக்க மொழிகள் (Programming Languages)

அனைவருக்கும் வணக்கம் இன்றைய உலகம் பல்வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயலாக்கங்கள் என்பவற்றின் முதலீட்டில் கணத்திற்கு கணம் அங்கீகரிக்கப்படும் கண்டுபிடிப்புகளுடன் வேகமாக வளர்ச்சி பெற்ற வண்ணம் உள்ளது . ஒவ்வொருநாளும் புதுப்புது அனுபவங்கள் அவற்றின் வாயிலாக புதுப்புது பரிமாணங்களுடன் மனிதனும் கால மாற்றத்திற்கு இசைவாக்கப்பட்டவனாய் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகிறான் . மாற்றங்களுக்கேற்ப மாறுபவன் எதிர்வரும் சூழலை சமாளித்தவண்ணம் எதிர்ப்படும் சவால்களை முறியடித்தவண்ணம் முன்னேறிக்கொண்டிருக்கிறான் . மாற்றங்களுக்கு முரணானவன் காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்படுகிறான் . இந்த உலகில் பல்வேறுபட்ட பாதைகளில் மாற்றங்களுடன் பலரும் பயணித்துக்கொண்டிருந்தாலும் தகவல் தொழில்நுட்பவியலுடன் தொடர்பு பட்டவர்கள் தமது வேலைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக அன்றாடம் உலகில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை அவதானித்துக்கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாதது . நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளில் நாட்டம் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக