Skip to main content

Posts

Showing posts with the label கண்ணம்மா

கண்ணம்மா 10

“அக்கா நான் நிச்சயமா ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்! “ ”நீ என்ர புள்ளடா என்ர ஒவ்வொரு அசைவும் என்ன சொல்லுதுண்டு எனக்குத் தெரியும்.“ கடந்தகால வார்த்தைகள் குமரேசனின் உள்ளத்தில் கூரிய அம்புகளென பாய்ந்து தொடர் வலிகளை உண்க்கிய வண்ணம் இருந்தன. மெழுகுதிரி பிறருக்கு இருள் அகற்றி ஒளி கொடுத்து தன்னை அணுஅணுவாய் உருக்குலைப்பது போல தன் அக்காளும் சிறு வயதில் இருந்து தான் அனுபவிக்கவேண்டிய அனைத்து ஆசாபாசங்களையும் புறந்தள்ளி எனக்காக எனது ஆசாபாசங்களுக்காக எனது ஒளிமயமான கௌரவ வாழ்க்கைக்காக தன்னை உருக்குலைத்த்தை எண்ணி எண்ணி விழிகளில் கண்ணீர் குளம் எனத்தேங்காமல் வற்றாத அருவியாக பாய பாய கதறினான் மௌன மொழியில்……பின் தன்னைத்தானே தேற்றியபடி “ நோ ! இவ்வளவு காலம் நான் எனக்காகவே வாழ்ந்துட்டன்.இனியாவது எனது அக்காவுக்காக வாழணும்.அவங்க கண்ணில இருந்து கண்ணீர பாக்கணும்னா அது புன்னகை மிகுதியால தான் வரணும்” என்று எண்ணியபடி கதிரையில் அமர்ந்திருந்தான். மெல்லத்திறந்த்து கதவு. “டொக்….. டொக்……டொக்….” கதவு திறப்பதையும் வைத்தியரின் சப்பாத்து ஒலியையும் அவதானித்து உடன் எழுந்து “சார் இப்ப அக்கா...

கண்ணம்மா 09

........அக்கா என கதறி அரவணைப்பான் என எண்ணி, ஏங்கிக்கொண்டிருந்த அவள் இதைச்சற்றும் எதிர்பாராது கதறினாள். இவ்வாறு இவள் அழ மனம் சஞ்சலப்பட்டு குமரேசன் ஒருமுறை மீண்டும் திரும்பிப்பார்த்து அவ்விடத்தில் சிறிது நேரம் செய்வதறியாது நின்றான். அப்போது அவனருகே வந்த யுவதி ஒருவர், ”அண்ணே, இது ஒரு பைத்தியம்! அஞ்சாறு மாசமா இங்கதான் கிடக்குது! எப்ப பாத்தாலும் ஒரே அழும்! நீங்க உட்டுட்டு உங்கட வேலயப்பாருங்கோ “. குமரேசனும் இவ் யுவதி கூறியதைக் கேட்டும் தன் அக்காவைக் காணவேண்டும் என்ற அவா காரணமாகவும் அவ்விடத்தை விட்டு நீங்கினான். தன் தம்பியே தன்னைப் பிச்சைக்காரி என்று எண்ணிவிட்டானே ! என எண்ணி நெஞ்சம் வருந்தினாள். ”சாமி ! நான் என்ன தான் குத்தம் செஞ்சன்? ஏன் எனக்கு மட்டும் இப்புடி ஒரே தும்பங்கள் வரூது? நான் உசிர் வாழுற காரணமே என் தம்பி தான! அவனே என்னப்பிச்சக்காரி எண்டு சொல்லுற அளவுக்கு என்ர நிலை வர்றதுக்கு காரணந்தான் என்ன? சாமி ! நான் எனியும் இந்த உலகில வாழ்ந்து என்னதான் பயன்?” என்று கல்நெஞ்சும் கனிய கதறினாள். இவ்வேளை குமரேசன் தான் குடியிருந்த வீட்டை அடைகிறான். வீட்டுக்கதவு மூடப்பட்டு இருக்கிறது. கதவைத் தட்ட...

கண்ணம்மா 08

பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைகளுடன் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்……. கண்களைத் திறந்தபடியே….. இங்கு கண்ணம்மா அணிவதற்கு ஓர் மாற்றுப்புடவை இல்லாது, வசிப்பதற்கு ஓர் வீடு இல்லாது, கதைப்பதற்கு ஓர் உறவு இல்லாது, நெஞ்சம் மகிழ ஓர் குடும்பம் இல்லாது, உண்பதற்கு ஓர் உணவில்லாது, தெருவோரத்தில் வீழ்ந்து கிடக்கிறாள் அடியற்ற மரம் போல………………!!!!! பஸ் ஊரில் வந்து பஸ் தரிப்பிடத்தில் நிற்க, குமரேசன் கீழே இறங்கி, கண்ணம்மா வீழ்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடைக்கு, தன் உயிரிலும் மேலான அக்காவிற்கு இனிய தின்பண்டங்களை வாங்கவென வந்து பொருட்களை வாங்கி தன் (பழைய) வீட்டை நோக்கி நகர்கிறான். வீழ்ந்து கிடந்த கண்ணம்மா அவ்வாறே தற்செயலாக அவனை நோக்குகிறாள். ஆம் ! ஆம் ! இத்தனை காலமாக தன் புண்பட்ட மனதில் சுமந்த அந்தக்குமரேசன் தான். கண்ணீர் அருவி போல் பாய மெல்ல மெல்ல எழுகின்றாள். அவனை நோக்குகின்றாள்……..! “ஐயா ….. தம்பி….!!” தன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்த குமரேசன் மெல்ல தன் தலையை திருப்பி கண்ணம்மாவை நோக்குகிறான். அவளை நோக்கி ஒரு பெருமூச்சு விட்டபடி வருகிறான். கண்ணம்மாவின...

கண்ணம்மா 07

நாட்கள் கடந்தோடின. அங்கு குமரேசன் நடந்த பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெற்றதனால் தங்கப்பதக்கம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகளும் பொது அமைப்புகளும் பாராட்டி பரிசில் பல வழங்கி கௌரவித்தன.இவ்வாறு கௌரவித்தவர்களில் ஒரு தொழிலதிபர் எழுந்து “மிஸ்டர் குமரேசன் உங்க முயற்சி இன்றைக்கு பலராலும் வரவேற்கப்படும் ஒரு உன்னத நிகழ்வாக காணப்படுகிறது. பல மாணவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரண மாணவனாக இந்நாட்டில் வலம் வருகிறீர்கள். உங்கள் சூழல் எப்படிப்பட்டது? உங்களின் இந்த நிலைக்கு யாராவது உதவியதுண்டா?..... ப்ளீஸ் ரெல்...” குமரேசன் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து மேடை தனில் ஏறி மைக் முன்னால் நின்று முதலில் எந்தப்போட்டியாயினும் அதில் வெற்றிகொள்ள எவ்வாறு எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கூறி அடுத்ததாக தன் வாழ்க்கை ஒளிமயமாக காரணமாகிய தன் அன்புத் தெய்வம் தாய் தந்தை அண்ணா அக்கா தம்பி தங்கை நண்பி என பல்வேறு வடிவங்களிலும் இருந்து தன் துயரங்கள் அனைத்தையம் அவளே தாங்கி தன்னை ஒரு குறையம் இல்லா...

கண்ணம்மா 06

குமரேசனுக்கு இறுதி ஆண்டுக்கு மேலதிக பணம் மூன்று இலட்சம் வேணுமாம். இதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம். கண்ணம்மா தன் அன்பு உடன்பிறப்பிடம் இருந்து கிடைத்த மடலை வாசித்து முடித்ததும் பணம் பெறக்கூடிய வழிகள் குறித்து யோசிக்கலானாள். உடனே கண்ணம்மா, கிராமத்தலைவன் முனியாண்டி இடம் சென்று தான் வசித்த வீட்டை விற்க இருப்பதாகவும் ஆதலால் அதனை இயலுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்றுத்தருமாறும் வேண்டினாள். துர்-அதிஷ்டம்!!!அக்காணி ஒரு இலட்சம் ரூபாவிற்கே விற்கப்பட்டது. மீதி இரண்டு இலட்சங்களையும் எவ்வாறு பெற்றுக்கொள்வதென்று பல வழிகளிலும் யோசிக்கலானாள். இறுதியில் சாதகமான தலையசைப்புடன் எழுந்தாள். எழுந்து எங்கோ செல்லலானாள். ஆம் அவ்வழி ஏற்கனவே ஒரு தடவை பழக்கப்பட்ட வழிதான். ஈற்றில் தன் அயல்வீடுகளிடம் சென்று தன் தம்பியின் தேவைபற்றி குறிப்பிட்டு அதற்கு சிறிதளவாயினும் பணம் கடனாக தரும்படி கேட்டுக் கொண்டாள். எத்தனை வீடுகளில் கேட்டும் அத்தனை வீடுகளிலும் பாதகமான எதிர்பார்ப்புகளே கிடைத்தன. மேலதிக பணத்தை வேறு எவ்வாறு பெறுவது என யோசித்தாள். தலையிடி எமன் என வரும் அளவுக்கு வந்தும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்...

கண்ணம்மா 05

குமரேசனோ தன் அக்கா படும் சிரமத்தை தடுக்க முடியவில்லையே என உள்ளத்தால் நொந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒருவாறு அந்நாள் கழிந்தது. திங்கட்கிழமை - காலைப்பொழுதினில் தன் தம்பிக்கு தேநீர் தயாரித்து கொடுத்த பின்னர் செல்லம்மா வீட்டிற்கு சென்று வருவதாக வெளியேறினாள், வீட்டை விட்டு. அவள் கால்கள் செல்லம்மா வீட்டையும் கடந்து சென்றன. செல்லம்மா வீட்டை தாண்டி எங்கேயோ சென்றன.. அக்கால்கள் ஈற்றில் சிவப்பு ''சக'' குறியீட்டை நாடியது.. 'வைத்தியசாலையை' அடைந்து அங்கு இரத்ததானம் கொடுக்கும் இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அளவு கொடுத்த பின்னர் அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அடகுவைக்கும் இடத்திற்கு சென்று காதுகளில் மினுங்கிக் கொண்டிருந்த இரு தோடுகளினையும் அடகு வைத்து போலித்தோடுகளை அணிந்து கொண்டு அயலவர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தைப் பெற்று அமைதியாக வீட்டினுள் வந்து சேர்ந்தாள். குமரேசன் புறப்பட தயாராக இருக்கும் வேளையில் காசைக்கொண்டு வந்து குமரேசனிடம் கொடுத்து, "தம்பி கவனமாப்படீடா நீ எனிவரும் போது ஒரு டொக்டராத்தான் வரணும் அப்பத்தான்டா எல்லாரும் நம்மள மதிப்பாங்க...

கண்ணம்மா 04

எவ்வாறோ கஸ்டப்பட்டு ஐந்தாறு வீடுகளில் நாள்தோறும் சட்டி பானைகளை கழுவவும் உணவு சமைக்கவும் அனுமதிக்கப்பட்டாள். வேலைக்கேற்ப கூலி கிடைப்பதில்லை. நியாயம் கேட்டால் வேலையை விட்டு தூக்கிவிடுவார்களோ என அஞ்சி கண்ணம்மாவும் அடக்கி வாசித்தாள். வேலை செய்யும் போது ஏற்பட்ட பல்வேறு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு தனது சொந்த அக புறப்பற்றுக்களை களைந்து தனது அன்புத்தம்பிக்காக தனது தம்பியின் ஒளிமயமானதோர் எதிர்காலத்திற்காக தன்னை வருத்தி கடின உழைப்பினில் மூழ்கினாள். அன்று வெள்ளிக்கிழமை. தம்பியை பாடசாலைக்கு அனுப்பியதன் பின் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி அதன்பின்னர் சின்னம்மா வீட்டிற்கு வேலை செய்யவென சென்றிருந்தாள். '" ஏண்டி மாடு கழுத உனக்கு நேரங்காலத்தோட வரத்தெரியாதாடி? வீட்டுல என்னடி செய்யிறாய்? வா வந்து உடன சட்டி பானய கழுவு!!!எல்லாம் நாறுது!!!வாடி சொல்லச்சொல்ல அங்கேயே குத்துக்கல்லாட்டா நிக்குறாய்!!!".    என லாவா சீறும் எரிமலை என சீறித்தள்ளினாள். சின்னம்மா பேச்சை எல்லாம் வாங்கிக்கொண்டு தனது பெற்றோரை மனதில் எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டு வேலையைச் செய்யலானாள். "குமரேசன் மட்டும் பெரிய பட...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

கண்ணம்மா 02

கண்ணம்மா 02 அதிகாலையில் நீராடி சீருடை அணிந்த சிறுவர்களை சாப்பிட அழைத்த செல்லம்மா திண்ணையின் பக்கம் சென்று, “என்னங்கோ!!! பிள்ளயள் வெளிக்கிட்டிட்டினம், வாருங்கோவன் அத்தான் சாப்பிடுவம்“ என தனது கணவனை அழைத்தாள். திண்ணையில் அமர்ந்து ஆயிரம் கனவுகளில் மூழ்கியிருந்த கணேசனுக்கு செல்லம்மாவின் வரிகள், கனவுகளிலிருந்து அவனை மீட்டன. சோகம் குன்றாத ஒடுங்கிய முகம் தனது உதடுகள் அசைத்து   ” நீ போய் சாப்புடு புள்ள நான் இப்ப வந்துர்றன்” என்று கூறி வெறுப்பின் கண் மனம் வைத்து ஆமை வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான். கணேசன் -   கட்டையான பருத்த உடல் கொண்டு,  சுருள் தலைமயிர் கொண்டு, குறுந்தாடி கொண்டு, நெற்றியில் அடிமட்டம் வைத்து வரைந்தது போல மூன்று தடித்த கோடுகளை உடையதும்- பசும்பாலின் வெண்மையை உடையதுமான திருநீற்றை அணிந்து கொண்டு, அதன் நடுவே மஞ்சள் சந்தனத்தால் வட்ட வடிவமான பொட்டுடனும், சற்று அழுக்கான வேஷ்டியையும் அணிந்த உருவம் செல்லம்மாவை கண்டதும் ஒரு வரண்ட புன்முறுவல். செல்லம்மாவும் சிறிய புன்னகையால் மறுமொழி கூறி சமையலறைக்கு சென்று, உணவை கோப்பைகளில் இட்டு வெளியே கொண்டு வர அனைவரும் வட்ட ...

கண்ணம்மா 01

கண்ணம்மா காரிருள் அகன்று சூரியன் கிழக்கு திசையில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தியவண்ணம் செங்கதிர்கள் கொண்டு ஒளிபரப்ப, குயில்கள் கீச்சிட, சேவல் கூவிட வழமை போல அன்றைய தினமும் உயிர் பெற்றது - அந்த ரம்மிய காலைப்பொழுதுடன்..... பச்சிளங்குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்த கண்ணம்மாவையும் , அவளது தம்பி குமரேசனையும் நோக்கி அவர்களது தாயான செல்லம்மா, செல்லமாய்,   " கண்ணுக்குட்டி, குமரேசா எழும்புங்கோடா!!!, என்ர  ச்செல்லங்களெல்லோ !!! பள்ளிக்கூடத்துக்கு போவோணும் இல்லயோ? எழும்புங்கோடா!!! , என்ர ராசாத்தியள்!!!"   உள்ளத்தில் உள்ள அன்பு நிறைந்து ஒழுகிற்று என்று சொல்லும் அளவிற்கு பாசத்தை வாரி இறைத்து, தன் இரு கண்களென எண்ணி வளர்க்கும் அவள் புதல்வர்களை எழுப்பினாள். பிள்ளைகள் இருவரும் குளிக்கவென எடுத்த வைத்த வெந்நீர் அடங்கிய பானையை அவர்களிடம் கொடுக்கவும் செல்ல எரிச்சலுடன் தம் தாயின் முகம் பார்த்த மொட்டுக்கள், சிணுங்கிய வண்ணம் குளியலறை செல்ல  அவர்கள் தலையை தடவிவிட்டு சமையலறை நாடினாள் செல்லம்மா. செல்லம்மா - வீங்கிய கண்கள், ஒடுங்கிய கன்னங்கள், வட்ட முகம், பொதுநிறமேனி, அளவான கூந்தல...