Skip to main content

கண்ணம்மா 05


குமரேசனோ தன் அக்கா படும் சிரமத்தை தடுக்க முடியவில்லையே என உள்ளத்தால் நொந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒருவாறு அந்நாள் கழிந்தது.

திங்கட்கிழமை - காலைப்பொழுதினில் தன் தம்பிக்கு தேநீர் தயாரித்து கொடுத்த பின்னர் செல்லம்மா வீட்டிற்கு சென்று வருவதாக வெளியேறினாள், வீட்டை விட்டு. அவள் கால்கள் செல்லம்மா வீட்டையும் கடந்து சென்றன. செல்லம்மா வீட்டை தாண்டி எங்கேயோ சென்றன..
அக்கால்கள் ஈற்றில் சிவப்பு ''சக'' குறியீட்டை நாடியது.. 'வைத்தியசாலையை' அடைந்து அங்கு இரத்ததானம் கொடுக்கும் இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அளவு கொடுத்த பின்னர் அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அடகுவைக்கும் இடத்திற்கு சென்று காதுகளில் மினுங்கிக் கொண்டிருந்த இரு தோடுகளினையும் அடகு வைத்து போலித்தோடுகளை அணிந்து கொண்டு அயலவர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தைப் பெற்று அமைதியாக வீட்டினுள் வந்து சேர்ந்தாள். குமரேசன் புறப்பட தயாராக இருக்கும் வேளையில் காசைக்கொண்டு வந்து குமரேசனிடம் கொடுத்து,

"தம்பி கவனமாப்படீடா நீ எனிவரும் போது ஒரு டொக்டராத்தான் வரணும் அப்பத்தான்டா எல்லாரும் நம்மள மதிப்பாங்க""

என்று தளதளத்த குரலில் கெஞ்சிய முகத்துடன் தன் தம்பியை கேட்டுக்கொண்டாள்.

"அக்கா நிச்சயம் ஒரு டொக்டரா வந்து உன்ன ஒரு மகாராணி மாதிரி வச்சிருப்பன்.. அதோட நம்ம ஊரு மக்களுக்கு அலவச மாக மருத்துவமும் பாப்பன் . நீ இருந்து இதையெல்லாம் பாக்கத்தான போறாய்"

என்று கூறி கண்ணம்மா நெஞ்சில் பாலை வார்த்தான்.


பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிய போகிறோம் என்று எண்ணி ஒருவரை ஒருவர் நோக்கியபடி மனத்தினால் குமுறினார்கள்;கதறினார்கள் ; கண்ணீர் மல்கினர்;
என்ன செய்வது இவர்களைத்திருப்திப்படுத்த யார் உள்ளார்கள் இந்தப்பூவுலகில்?  யாரும் இலலையே? ஈற்றில் கண்ணம்மா ஒருவாறு குமரேசனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாள். இவ்வாறு அவள் தனது உடலை வருத்தி வேலை செய்யச் செய்ய அவளது உடலும் பலவீனப்பட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது.

இவ்வாறு மாதாந்தம் உழைத்து அரைவாசியினை தனது தம்பிக்கும் மீதியை அடகு வைத்தவற்றை மீட்பதற்கும் பயன்படுத்தினாள். மனஞ்சோர்வுறும் கணங்களில்

"கண்ணம்மா இவ்வளவு காலம் பொறும காத்த மாதிரி இன்னுங் கொஞ்ச காலந்தான பொறுத்திரு. தம்பி நல்ல டொக்டரா வரட்டும். அப்புறம் நீ மகாராணிதானடி. என்று மனத்தால் கூறி தன்னைத் தேற்றிக் கொள்வாள் "    இவ்வாறு மாதங்கள் பல உருண்டோடின.

குமரேசன் பட்டப்படிப்பு முடிக்க ஒரு வருடம் தான் உள்ளது. இவ்வாறு இருக்கையில் தபால்காரனின் சைக்கிள் மணி
 “கிணிங் கிணிங் ” ஒலியெழுப்ப
“கண்ணம்மா! உன்ர தம்பி குமரேசனிட்ட இருந்து ஒரு தபால்“
என்று தபால்காரன் ஒலியெழுப்பியதும் கண்ணம்மா ஓடி வந்து எல்லை அற்றதோர் சந்தோசத்தால் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுக்க அதை வாங்கி ஆவலுடன் படித்தாள்......

தொடரும்.....

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...