- அவ்விமானங்கள் அப்போது எங்கே பறந்து கொண்டிருந்தன?
- அதுவரை தொடர்ச்சியாக பறப்பதற்கு அவற்றிற்கான எரிபொருள் வசதியை எங்கிருந்து பெற்றன?
- சூழவிருந்த பல நாட்டு ராடர்களை ஏமாற்றிவிட்டு அவை பறப்பது நடைமுறையில் எவ்வாறு சாத்தியம்?
போன்றவை இன்று வரை விடைக்காக ஏங்கும் வினாக்களாகவே உள்ளன!!!
மறுநாள் காலையில் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மாபெரும் தேடுதல்வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 240 விமானங்களும், 18 கப்பல்களும், 2 நீர்மூழ்கிக்கப்பல்களும் நேரடியாக ஈடுபட்டிருக்க மேலும் 67 விமானங்களுடன் கூடிய விமானந்தாங்கிக் கப்பலும் தயாராக இருந்தது.4100 மணி நேரங்களாக 380 000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு தேடுதல் நடைபெற்றபோதும் ஒரு சிறிய தடயத்தைக்கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை.
அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் 1945 டிசெம்பர் 6ம் திகதி பத்திரிகை விற்பனையில் சடுதியான அதிகரிப்பிற்கு காரணமான இந்த உரையாடல்கள் இன்று வரை சரியான காரணம் கண்டறியப்படாமல் மர்மமாகவே உள்ளன!!!
மர்மங்கள் தொடரும்!!!!
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!!!!
Comments
Post a Comment