ஆழ்கடலின் சுரங்கங்கள் தொட்டு விண்ணிலே தரித்து நிற்கும் அரங்கங்கள் வரை இப்பூவுலகில் மனிதனின் வளர்ச்சி வியாபித்துள்ளது. வியக்கத்தக்க துகள்களையும், விசாலமான பால்வீதிகளை விட பெரிய பிரபஞ்சத்தையும் எளிதாக இனங்கண்டு அவற்றின் முக்கால போக்குகளையும் துல்லியமாக கூறும் வகையில் கொள்கைகள் பலவற்றை உண்டாக்கியுள்ள மனிதனின் அறிவு வளர்ச்சி என்பது அளப்பரியது தான். ஆயினும் இவ்வளர்ச்சிகள் மக்களின் மனதில் உண்டாக்கிய உவகையை மூடுமளவிற்கு பல உலகியல் திகில் சம்பவங்களும், பிரதேசங்களும் இருப்பது என்பது மறக்கமுடியாத உண்மை.
ஆனாலும் ஆய்வாளர்களின் விளக்கவுரைகள் உலகின் பல்வேறு சம்பவங்களுக்கும், அச்சம்பவங்களின் திகிலின் தரத்தை குறைப்பதற்குமான நியாயத்தை உண்டாக்குவதுமுண்டு. சிலவற்றிற்கு அது முடியாமல் போவதுமுண்டு. இவற்றில் உலகின் அறிவியல் மற்றும் இராணுவ வல்லாதிக்கத்தில் சிகரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவை அண்டிய பிரதேசத்தில் உள்ள பெர்முடா பேய் முக்கோணம் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.

தொடரும் .......
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..........
Comments
Post a Comment