குறுகிய நாட்கள் இடைவெளியின் பின்னர் மீண்டும் வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி................
மாய ராஜ்ஜியம் - ஓர் ஆய்வு -07
STAR ARIEL
ஆண்டு :- 1949
மாதம் :- 01
திகதி :- 17
விமானத்திலிருந்தவர்கள் :- 15 பயணிகள், 7 சிப்பந்திகள்
பெற்றோல் நிரப்பிய இடம் :- பெர்முடா தீவு
புறப்பட்ட நேரம் :- காலை 7.45
விமானி கடைசியாக தொடர்பு கொண்ட நேரம் :- காலை 8.30
தெரிவித்த தகவல் :- காலநிலை மிகவும் நன்றாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பயணத்தை பூர்த்தி செய்து விடுவோம்.
மறைந்து போன நேரம் :- காலை 8.32 இற்குப்பின்
தேடுதல் முயற்சி :- 72 விமானங்கள் , 2 விமானந்தாங்கி கப்பல்கள் மொத்தமாக 150 000 சதுர பரப்பளவிற்கு
தடயங்கள் :- இல்லை
இதன்பின்பு 1949 இல் மட்டும் 9 விமானங்கள் மறைந்து போயின...
DOUGLUS DC3
ஆண்டு :- 1948
மாதம் :- 12
திகதி :- 28
பயணப்பாதை :- சான்ச்சுரவானில் இருந்து மியாமி வரையானது
பயணிகளின் எண்ணிக்கை :- 36
விமானி பேசிய நேரம் அதிகாலை :- 4.15
தெரிவித்த தகவல் :- ”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.”
சம்பவம் :- இதன்பின் தொடர்புகள் இல்லை. விமானம் காணாமல் போனது.
தேடுதல் முயற்சிகள் :- பல விமானங்கள் மற்றும் கப்பல்கள்.
தடயம் :- எதுவும் இல்லை.
இரு KC 135 ரக JET விமானங்கள்
ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 28
விமானி தெரிவித்ததகவல் :- ”காலநிலை தெளிவாக உள்ளது”
சம்பவம் :- பின்னர் 2 விமானங்களும் மறைந்து போயின. இச்சம்பவத்தின் போது பல நூற்றுக்கணக்கான பயணிகளும் காணாமல் போயினர்.
தடயங்கள் :- எதுவும் இல்லை
C-132 கார்கோமாஸ்டர் விமானம்
ஆண்டு :- 1963
மாதம் :- 09
திகதி :- 22
விமானியின் இறுதித்தகவல் :- ”விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது”
சம்பவம் :- விமானம் சிறிது நேரத்தில் மறைந்து போனது.
தடயம் :- எதுவும் இல்லை
FLYING BOX CAR
ஆண்டு :- 1965
மாதம் :- 06
திகதி :-05
சம்பவம் :-10 பேருடன் மறைந்து போனது.
மறைந்த இடம் :- பஹாமஸ் இற்கு அருகாமையில்
தடயங்கள் :- எதுவும் இல்லை
YC 122
ஆண்டு :- 1967
மாதம் :- 01
திகதி :-11
சம்பவம் :- 4 பேருடன் மறைந்து போனது.
மறைந்த இடம் :- இற்கு அருகாமையில்
தடயங்கள் :- எதுவும் இல்லை
இவை தவிர 1940 முதல் 2000 வரையான காலப்பகுதியில் மட்டும் சுமார் 100 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இப்பகுதியில் மறைந்து போயிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் எதுவித தடயமும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
அடுத்த பதிவில் மாயராஜ்ஜியம் விழுங்கிய கப்பல் தொகுப்பைக் காணலாம்.....
மாயங்கள் தொடரும்
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!!
Comments
Post a Comment