அமைவிடம்
- பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த பெர்முடா முக்கோணம் என்பது தான் என்ன?
- அது ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசமா?
- கற்பனையாக அமைக்கப்பட்ட அமைவிடமா?
- முழு நேரமும் மனிதர்களின் நடமாட்டமற்ற பகுதியா?
மத்திய அத்திலாந்திக் தீவான பெர்முடாவையும், அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையோர எழில்மிகு நகரான புளோறிடாவையும், சன்யுவான் பியூட்ரோறிகா எனும் சிறிய தீவுப்பகுதியையும் முக்கிய 3 முனைகளாக கொண்டதாக கற்பனையில் இனங்காணப்பட்டது தான் இந்தப் பெர்முடா (பேய்) முக்கோணம்.
மின்காந்தவியல் தத்துவத்தைப் பொய்யாக்கிய பெருமையும் இப்பிரதேசத்திற்கு உண்டு. பொதுவாக ஒரு மின்காந்த திசையறிகருவி காந்த வடக்கையே காட்டுவதுண்டு. ஆனால் உலகின் இரு பிரதேசங்களில் மின் காந்த திசையறிகருவி ஏமாற்றும் வகையில் உண்மை வடக்கையே காட்டும். அவற்றுள் ஒன்று இந்த பெர்முடா முக்கோணம்!!!!
- சரி இந்த அமைவிடம் இவ்வளவு தூரம் முக்கியம் பெறுவதற்கான காரணங்கள் என்ன?
- 1950களின் ஆரம்பத்தில் மக்களால் உச்சரிக்கப்பட ஆரம்பித்த பெர்முடா முக்கோணம் இன்றும் பலரையும் திகிலோடு நோக்க வைப்பதன் மர்மம் தான் என்ன?
- திகில் என்றால் முதலில் ஞாபகம் வருகின்ற பேய் இந்த முக்கோணத்தின் புனைபெயராக அமைந்தமையின் அடிப்படை என்ன?
- உலகின் பல்வேறு ஆய்வாளர்களையும் செய்வதறியாமல் திகைக்க வைத்தது.
இக்கேள்விகள் அனைத்திற்கும் பதில்களாக வரக்கூடிய சில சம்பவங்களை எடுத்து நோக்குவதனூடாக அதன் காரணங்களை அலசலாம் என முயல்கிறேன்.
மாயங்கள் தொடரும்...... ஆனால்
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!!
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.......
Comments
Post a Comment