பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வுகளில் இதுவரை எழுந்துள்ள சவால்கள்
இன்றுவரை இம்முக்கோணம் உலகின் பல ஆராய்ச்சியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டே சென்றுள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த திகில் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முற்பட்டவர்கள் மேலும் பல முடிச்சுக்களை உருவாக்கிவிட்டது தான் விந்தையாக உள்ளது. சிக்கல்களின் சிகரமாக திகழும் இம்முக்கோணத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அடுத்து வரும் ஆய்வாளர்களுக்கு விடை தெரியாத பல வினாக்களை விட்டுச் செல்வதே வழமையாகி விட்டது. ”மர்மத்திற்கான தீர்வு” என்ற பெயரில் வெளிவந்து பல லட்சம் டொலர்களை சம்பாதிக்கின்ற நூல்களின் எண்ணிக்கை மட்டும் நீண்டு செல்கிறது.
எனவே இவ்வாய்வினை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லலாம் என எண்ணுகிறேன். இவ்வாய்வு தொடர்பான சவால்களை ஆராய்ந்த பின்பு காரணங்களை அலசலாம் என முயல்கிறேன். சரி இப்பிரதேசத்தை நோக்கிய ஆய்வில் புரியாத புதிர்கள் பல தோன்றுவதற்கான காரணம் என்ன?
- அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை
- பல்வேறு சம்பவங்களின் போதும் தடயங்களைப் பெருமளவில் பெற முடியாமல் போனமை
- நவீன அறிவியலையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளின் தாக்கம்
அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை
குறிப்பிட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ளும் போது அவ்வாய்வின் நிலவரங்களை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு துல்லியமான முறையில் ஆய்வுகளை தொடர்வது இன்றியமையாதது. இதற்கு அவ்வாய்வின் சம்பவங்கள் குறிப்பிட்ட சீரான கால இடைவெளியிலோ அல்லது சம காலத்திலோ நடைபெறக்கூடியவையாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.
ஒரு ஆய்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் இத்தகைய தேவை பெர்முடா முக்கோணத்தை பொறுத்த வரையில் சாத்தியமற்றதாகி விட்டது. அது ஏன்?
நாம் அலசி ஆராய்ந்து வந்த பெர்முடா முக்கோணம் என்பது பலரும் நினைப்பது போன்று எல்லா நேரமும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு பகுதியல்ல. இந்த பிரதேசமானது முழு நேரமும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியல்ல மக்கள் நடமாட்டத்திற்கு உத்தியோகபூர்வமான முறையில் தடைவிதிக்கப்பட்ட பகுதியுமல்ல. இப்பகுதியூடு பயணித்து சிறு சேதமும் இன்றி கடந்து செல்பவர்கள் பலர் உள்ள நிலையில் நாள் தோறும் மக்களைப் பழி வாங்கும் பிரதேசமுமல்ல.
இவ்வாய்வின் ஆரம்பத்தில் அமைவிடம் தொடர்பான பகுதியில் குறிப்பிடப்பட்ட இந்தப்பெர்முடா முக்கோணத்தின் வரையறைகளானது இங்கு இடம்பெற்ற சம்பவங்களின் ஒட்டுமொத்த எல்லைகளே ஆகும். தனித்தனியான சம்பவங்களின் வீச்சு என்பது அதற்குள் இடம்மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இது எதிர்காலத்தில் தற்போது குறிப்பிட்டிருக்கின்ற எல்லைகளைத்தாண்டியும் மர்ம விளையாட்டுக்களின் பட்டியல் நீளப்போகின்றது என்பதைக் காட்டியும் கூறுவதாகவே அமைகிறது. ஒரு வேளை இன்று பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மாயாஜால மர்மங்களின் மறைவிடம் பெர்முடா சதுரம் என்றோ பெர்முடா வட்டம் என்றோ அழைக்கப்படக்கூடிய சாத்தியங்களும் தோன்றலாம்......
மாயங்கள் இனி நீங்கும்.........
......உங்கள் உண்மையின் பக்கத்தில்...............
சிறப்பான பதிவு ரவி வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிகள் புதுவை சிவா அவர்களே!!!
ReplyDelete