Skip to main content

கண்ணம்மா 06

குமரேசனுக்கு இறுதி ஆண்டுக்கு மேலதிக பணம் மூன்று இலட்சம் வேணுமாம். இதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம். கண்ணம்மா தன் அன்பு உடன்பிறப்பிடம் இருந்து கிடைத்த மடலை வாசித்து முடித்ததும் பணம் பெறக்கூடிய வழிகள் குறித்து யோசிக்கலானாள்.
உடனே கண்ணம்மா, கிராமத்தலைவன் முனியாண்டி இடம் சென்று தான் வசித்த வீட்டை விற்க இருப்பதாகவும் ஆதலால் அதனை இயலுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்றுத்தருமாறும் வேண்டினாள். துர்-அதிஷ்டம்!!!அக்காணி ஒரு இலட்சம் ரூபாவிற்கே விற்கப்பட்டது. மீதி இரண்டு இலட்சங்களையும் எவ்வாறு பெற்றுக்கொள்வதென்று பல வழிகளிலும் யோசிக்கலானாள்.

இறுதியில் சாதகமான தலையசைப்புடன் எழுந்தாள். எழுந்து எங்கோ செல்லலானாள். ஆம் அவ்வழி ஏற்கனவே ஒரு தடவை பழக்கப்பட்ட வழிதான். ஈற்றில் தன் அயல்வீடுகளிடம் சென்று தன் தம்பியின் தேவைபற்றி குறிப்பிட்டு அதற்கு சிறிதளவாயினும் பணம் கடனாக தரும்படி கேட்டுக் கொண்டாள். எத்தனை வீடுகளில் கேட்டும் அத்தனை வீடுகளிலும் பாதகமான எதிர்பார்ப்புகளே கிடைத்தன. மேலதிக பணத்தை வேறு எவ்வாறு பெறுவது என யோசித்தாள். தலையிடி எமன் என வரும் அளவுக்கு வந்தும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.
கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாத குற்றாலம் என வழிந்து கொண்டிருந்தது. தன் தம்பியின் படிப்பு நிறைவுறும் தருணத்தில் இவ்வாறு பிரச்சினை வருகிறதே என்று மனத்தால் எண்ணி கடவுளை தன் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்தாள்.
செய்வதறியாது கால்களில் பலம் இருக்கும் வரை சென்று உதவி கேட்கலாம் என்ற நோக்குடன் ஆங்காங்கே கேட்டுக்கொண்டே சென்றாள். உதவி இல்லை....
கடைசியில் செல்லும் இடம் அறியாமல் மீண்டும் பழக்கப்பட்ட இடத்தை நாடினாள். மீண்டும் அதே “குறி“ கொண்ட கட்டிடம். வைத்தியாசாலை தான் பெயர்.மீண்டும் இரத்தம் கொடுக்க நாடினாள்.ஆனால் அவளை பரிசோதித்த வைத்தியர் குறிப்பிட்ட காலஇடைவெளியில் அதிக தடவை இரத்தம் எடுக்கமுடியாது என கூறிவிட்டு அவளின் நோக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். மிகுதிப்பணம் திரட்ட வேறு வழியில்லாமல் ஈற்றில் தன் கண்ணாக கருதி வந்த தன் குமரேசனைக் காக்க - அவன் நலம் பெற - அவன் கனவுகள் நனவுகளாக  தன் கண், சிறுநீரகம் போன்றவற்றை விற்றால் மட்டுமே மேற்படி தேவையான அளவு பணத்தைப்பெற முடியும் என எண்ணி வைத்தியரை அணுகி இதைப்பற்றி கதைத்து சிகிச்சைக்கு தயாரானாள்.

சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவேறியது. ஒரு கிழமை வைத்தியசாலையிலேயே தங்கினாள். கிடைத்த பணத்தை தனது நம்பிக்கை மிகுந்தவரிடம் கொடுத்து அதனை தன் தம்பிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

தொடரும்.......

Comments

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...