Skip to main content

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய,

"டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர்.
அங்கு கணேசன்,

"ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண".
என விழி அருவி சொரிய மொழிந்தான்.

"இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!!
நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...."
என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்டு சென்றான்.

நேரம் ஒன்றரையைத்தாண்டியது. பாடசாலை சென்ற கண்ணம்மாவும் குமரேசனும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வீட்டினை நெருங்கியதும் இருவருக்கும் ஒரே திகைப்பு. குழப்பம்  வீட்டில் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணம் இருந்தன. வீட்டில் இருந்த கூட்டத்தை ஒவ்வொன்றாக விலக்கி உள்ளே சென்றனர்.........!!!!

"ஐயோ!!!! அம்ம்ம்ம்ம்மா.............அப்ப்ப்ப்பபா..........எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே. அப்பா அம்மா வாங்க எங்கள விட்டுட்டுப் போயிடாதீங்க..... நாங்க என்னண்டு தனியா இருக்கிறது....... வாங்கப்பா.............ஐயோ!!! கடவுளே!!!! " என்று விண்தனில் இடிகள் முழங்கியது போல இரு சின்னஞ்சிறு பிஞ்சுகளும் விழி அருவி பாய கதறினர். 'என்ன பயன்!!! எவ்வளவுதான் கதறினாலும் இந்த உயிரினும் மேலான இன்னுயிர்களை மீண்டும் மீட்கவா முடியும் இல்லையே .. பிரிவுத்துன்பத்தின் நிழலைக்கூட அறியாத அந்த சின்னஞ்சிறு வண்ணப்பிஞசுகள் எங்ஙனம் தான் வேதனைப்பட்டிருக்குமோ? தாய்தந்தையற்று அநாதைகளாகிய இவர்கள் எனிவரும் காலங்களில் எப்படித்தான் வாழப்போகிறார்களோ' என்ற கேள்வியே கூடி நின்றவர்களின் உள்ளங்களில் தோன்றி இருக்கும்.

கிரியைகள் அனைத்தும் முடிவடைந்தன. வீட்டினில் ஒரே நிசப்தம். ஒரு மூலையில் குமரேசனும் மறுமூலையில் கண்ணம்மாவும் எதையோ தீவிரமாக யோசித்தவண்ணம் இருந்தனர். நேரமும் கடந்து கொண்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீரும் நின்ற பாடில்லை. ஈற்றில் கண்ணம்மா பெருமூச்சு விட்டபடி கண்களில் கண்ணீர் குளம் எனத் தேங்கி நிற்க, தளதளத்த குரலில்,

"தம்பி! அப்பாவும், அம்மாவும் எங்கள விட்டுட்டு கடவுளிட்ட போயிட்டினம். எங்களுக்கு சொந்த பந்தம் எண்டு எனி வேற யாரும் இல்ல.  அதால.....
அதால....??? என வினாவெழுப்பிய குமரேசனுக்கு 
அதால நீ எனிப்படி நான் வேலைக்குப்போறன், நீ உன்ர அக்கா மேல நெசமா பாசம் வெச்சிருந்தா இதுக்கு இல்ல எண்டு சொல்லாத" 
எனக் கூற முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் ஈற்றில் தனது அக்காவின் வற்புறுத்தலால் சம்மதித்தான்.

மறுநாள் காலை அக்காவும் தம்பியும் நித்திரையில் இருந்து எழுந்து காலைக்கடன்களை முடித்தனர்.கண்ணம்மா தேநீர் தயாரித்து குமரேசனிடம் கொடுத்து தானும் அருந்தியபின்னர் தான் அறிந்த சமையல்கலை வல்லமையால் உணவுசமைத்து தம்பியை உண்ணவைத்து அவனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் தானும் வேலைக்கு செல்லலானாள்

தொடரும்.........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...