பனாமா கால்வாயின் தோற்றத்தினை நோக்கும் போது அதில் செயற்கையாக அமைக்கப்பட்ட கட்டூன் வாவியும் குறிப்பிட்டதொரு இடத்தை வகிக்கிறது. சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீரினை மையப்படுத்தி கட்டூன் வாவி அமைக்கப்பட்டது. காலம் செல்லச்செல்ல சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீர் கட்டூன் அணைக்கட்டு மூலமாக சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது நாளடைவில் அணைக்கட்டினை அண்டி ஆறு மூலமாக மண்ணும் அடித்து வரப்பட்டு அணைக்கட்டினை அண்டிய பிரதேசத்தில் விடப்படுவதால் ஆணைக்கட்டின் பலமும் அதிகரிக்கப்பட்டது. 1.5 மைல் தூரம் நீளமும் அடிப்பரப்பில் அண்ணளவாக 0.5 மைல் தூரம் அகலமுமாக அமைக்கப்பட்டது. நீளத்தின் வழியே இருவேறுபட்ட சுவர்களுக்கு இடையிலானதாக மேற்படி வாவி அமையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தத்து. மேலும் மேற்படி சுவர்களின் மேற்பரப்பு ஒருவகையான கிளேயினால் உருவாக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல கிளேயும் காய்ந்து கடினமானதாக மாறி கட்டூனின் அணைக்கட்டு மென்மேலும் உறுதியாகியது. இந்த அணைக்கட்டானது அண்ணளவாக 16.9 மில்லியன் கனமீட்டர் அளவு மண்ணாலும் ( மலையின் பகுதி ) கிளேயினாலும் உருவாக்கப்பட்டதாகும். மற்றும் பனாமா கால்வாயின் மொத்த அளவுடன் ஒப...