இன்றைய காலகட்டத்தில் உலகவர்த்தகமானது தரைமார்க்கம், கடல்மார்க்கம், ஆகாயமார்க்கம் என்ற மூன்று பகுதிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொருளாதார விருத்தியிலான வர்த்தக செயற்பாடுகளை நோக்கும் போது கடல் மார்க்கத்திலான செயற்பாடுகளே அதிகமுக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன.
அதிலும் கடல் மார்க்கத்து இயந்திரங்களாக கருதப்படக்கூடியவையான கப்பல்களும், கப்பல்களின் வேகங்களும் கடல்மார்க்க வர்த்தக நிலைகளில் பாரிய செல்வாக்கினை வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது. கப்பல்கள் கடலில் பயணிக்கும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க கப்பலினை பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு செலவுகள் அதிகரிக்க,அதிகரிக்கப்படும் செலவுகள் கப்பலின் மீது ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாகிறது. இது உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளைக் குறைக்கும் பொருட்டு கப்பல் கப்டன்கள் தாமதமின்றி கப்பலை செலுத்துதல் மற்றும் மிகவும் குறுகியதான பாதைகளை வரைந்து அதன் வழியே கப்பல்களை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இவ்வாறான பொருட்களின் விலையேற்றத்தை குறைத்துக்கொள்கின்றனர்.
மற்றைய விடயம் கப்பல்பயணத்தின் போது வரையப்படுகின்ற பாதைகள் குறுகியதாய் இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கப்பலின் கப்டன்களால் வரையப்படும் பாதையின் வீச்சினுள் கடற்கொள்ளையர்கள் உலவும் பிரதேசங்கள் இல்லாமையும் சர்வதேச கடல்சார் நிறுவகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதையாகவும் இருத்தல் அவசியம்.
இது ஒருபுறம் இருக்க முன்னரே குறிப்பிடுள்ளதைப்போன்றே பயணகாலத்தை குறைப்பதன் பொருட்டு பல்வேறு உத்திகளை பல்வேறு நாடுகள் கையாண்டு ஆரோக்கியமான கடல்மார்க்க வர்த்தகத்தை மேற்கொள்கின்றன. இதன் அடிப்படையில் அமெரிக்க வல்லுனர்களின் சிந்தையை ஆட்கொண்ட சவாலே பனாமாக்கால்வாயின் தோற்றத்திற்கு காரணமாகியது.
Comments
Post a Comment