........அக்கா என கதறி அரவணைப்பான் என எண்ணி, ஏங்கிக்கொண்டிருந்த அவள் இதைச்சற்றும் எதிர்பாராது கதறினாள். இவ்வாறு இவள் அழ மனம் சஞ்சலப்பட்டு குமரேசன் ஒருமுறை மீண்டும் திரும்பிப்பார்த்து அவ்விடத்தில் சிறிது நேரம் செய்வதறியாது நின்றான். அப்போது அவனருகே வந்த யுவதி ஒருவர்,
”அண்ணே, இது ஒரு பைத்தியம்! அஞ்சாறு மாசமா இங்கதான் கிடக்குது! எப்ப பாத்தாலும் ஒரே அழும்! நீங்க உட்டுட்டு உங்கட வேலயப்பாருங்கோ “. குமரேசனும் இவ் யுவதி கூறியதைக் கேட்டும் தன் அக்காவைக் காணவேண்டும் என்ற அவா காரணமாகவும் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
தன் தம்பியே தன்னைப் பிச்சைக்காரி என்று எண்ணிவிட்டானே ! என எண்ணி நெஞ்சம் வருந்தினாள்.
”சாமி ! நான் என்ன தான் குத்தம் செஞ்சன்? ஏன் எனக்கு மட்டும் இப்புடி ஒரே தும்பங்கள் வரூது? நான் உசிர் வாழுற காரணமே என் தம்பி தான! அவனே என்னப்பிச்சக்காரி எண்டு சொல்லுற அளவுக்கு என்ர நிலை வர்றதுக்கு காரணந்தான் என்ன? சாமி ! நான் எனியும் இந்த உலகில வாழ்ந்து என்னதான் பயன்?” என்று கல்நெஞ்சும் கனிய கதறினாள்.
இவ்வேளை குமரேசன் தான் குடியிருந்த வீட்டை அடைகிறான். வீட்டுக்கதவு மூடப்பட்டு இருக்கிறது. கதவைத் தட்டுகிறான். அக்காதான் கதவைத்திறப்பார் என எண்ணுகிற வேளையில் கதவு திறக்கப்படுகிறது. இனந்தெரியாத முகத்தைக் கண்டவுடன் நெற்றிப்புருவங்கள் ஒன்றையொன்று நெருங்கி சுருக்கங்கள் அதிகரிக்க தன் அக்காவைப்பற்றி வினவுகிறான். அவர்கள் கூறியதன் விளைவாக அந்தத்தெருவோரத்தினில் தன் கையைப்பற்றியது, “ஐயா, தம்பி” என பாசத்துடன் அழைத்தது அனைத்தும் அக்காதான் என உணர்ந்து கண்களில் கண்ணீர் அருவியென பாய தன் அக்காவை நோக்கி விரைந்தான்.
அவ்விடத்தை நெருங்க அங்கு காணப்பட்ட சனத்திரளை கண்டு திகைப்படைந்து அக்கூட்டத்தை மெல்ல மெல்ல நகர்ந்து அடைகிறான். யாரோ? எவரோ? என பல்வேறு கேள்விகள் மனத்தினிடத்தே கரைபுரண்டு ஓட, உள்ளே நுழைகிறான். அங்கே…..!!!
இரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த, அலங்கார உருவத்தைக் கொண்டிருக்கவேண்டிய அலங்கோல, தனது அன்புச்சகோதரியை கண்டு பதறினான். தான் செய்த கருமத்தை எண்ணி கதறினான். வீதியில் வீழ்ந்து தனது அன்புத் தெய்வத்தின் புண்பட்ட கையைத்தொட்டு முகத்தில் முட்டி முட்டி அழுதான்.
திடீரென கண்ணம்மாவின் கைமணிக்கட்டை தன் கையில் எடுத்து இரு விரல்களால் அழுத்தி….. சந்தோசத்துடன் கூடிய ஆச்சரியத்தோடு “ஷி இஸ் எலைவ் (She is alive)” எனக்கதறியபடி தன் இருகைகளாலும் தன் சகோதரியை சுமந்தபடி சென்று ஆட்டோ ஒன்றினுள் ஏறி தான் கற்ற முதலுதவிகளை கண்ணம்மாவில் பிரயோகம் செய்தவண்ணம் வைத்தியசாலை நோக்கி புறப்படலானான்.
வைத்தியசாலையில் கண்ணம்மா அவசரசிகிச்சைப்பிரிவில் (I.C.U) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. வைத்தியரின் முடிவை அறிய அவசர சிகிச்சைப்பிரிவிற்கு வெளியே வைத்தியர் வரும் வழி மீது விழிதனை வைத்த படி காத்திருந்தான்.
தொடரும்.......
கோகுல் உங்கள் பதிவுகள் அருமை
ReplyDeleteதமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.
இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்
கணேஷ் பாபு
நன்றிகள் நண்பரே.... இப்படியான விமர்சனங்கள் உண்மையின் பக்கத்தின் வளர்ச்சிக்குரிய உரங்களாகட்டும்.
ReplyDelete