Skip to main content

மாய ராஜ்ஜியம் 18

அறிவித்தல் … இது உங்களின் கவனத்திற்கு

இந்தப்பகுதியினை வாசிக்கும் முன்னர் இதற்கு முன்னைய பகுதிகளை வாசிப்பதன் ஊடாக இதனை அணுகுவதன் மூலம் இப்பதிவில் குறிப்பிட்டு இருப்பவை தெளிவாக விளங்குவது திண்ணம்……….

ம்ம்ம்…. எனி வாசியுங்கோ………

எனது ஆய்வின் முடிவு

பல்லாயிரக்கணக்கான மக்கள், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இழப்பு, பல கப்பல்கள் மற்றும் விமானிகளின் மறைவு, சில இடங்களில் கப்பல்கள் இருக்க பயணகள் மட்டும் மறைவு என்று ஏராளமான பல மர்மங்களை பத்திரிகைகளின் பேனாக்களிற்கும் அறிவிப்பாளர்களின் சொற்களுக்கும் என்று வழங்கிவிட்டு சென்றிருக்கின்ற இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மத்திற்கான ( நான் ஆராய்ந்து அறிந்த ) முடிவினை பலம் வாய்ந்த விஞ்ஞான பின்னணிகளின் துணையுடன் இங்கே வழங்கலாம் என எண்ணுகிறேன்.

ஏற்கனவே அண்டத்தில் நிலவும் நிலையற்ற காலத்தன்மை பற்றி தெளிவாக தெரிவித்திருக்கின்றேன். அண்டவெளியில் பல்வேறு இடங்களில் நேரம் வேறுபட்டதாக இருப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட நேரத்தில் வேறுபட்ட ஒரு இடம் பூமியின் உள்ளே குறிப்பிட்ட ஓரிடத்தில் மாத்திரம் அமைந்திருப்பது அறிவியல் உண்மைகளின் படி, அறிவியலாளர்களின் கருத்துக்களின் படி சாத்தியமானது தானே?

கருந்துளை ஒன்றிற்கு அருகாமையில் நேரம் அடையும் சாய்வு பற்றி விவரித்திருந்தேன். கருந்துளை ஒன்றின் நிகழ்வெல்லைக்கு அருகாமையிலும் அதனிலிருந்து மிகவும் தூரமான இடத்திற்கும் இடையில் நேரம் பாரிய அளவில் வேறுபடும் என்பதையும் தெளிவாக்கியிருந்தேன். கருந்துளை என்பது மிகக்குறுகிய பிரதேசத்திலேயே தோற்றம் பெறுகின்றது என்பதை விவரமாக அறியத்தந்திருக்கிறேன். கருந்துளை அதன் நிகழ்வெல்லையுடன் சேர்ந்து அடையக்கூடிய இடம் மிகவும் சிறியது என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் படி உண்மையாக இருக்கின்ற போது காலத்தில் வேறுபட்ட ஒரு குறுகிய இடம் தோன்றுகிற சமயத்தில் அங்கே ஒரு கருந்துளை ஏன் தோன்றக்கூடாது? அவ்வாறு தோன்றுகின்ற கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள துணிக்கைகளினை தனது மையத்தினை நோக்கி ஈர்த்து கட்புலனாகாத படி செய்வதும் சாத்தியம் தானே?

ஆகவே எனது ஆய்வின் முடிவாக நான் தெரிவிப்பது என்னவென்றால் குறிப்பிட்ட பெர்முடா முக்கோணப்பகுதியானது வெவ்வேறு சூழ்நிலைகளின் போது பிரபஞ்சத்தின் மற்றைய ஏராளமான பகுதிகளில் நடைபெறுவது போன்று காலத்தால் மாற்றமடைகின்றது. இது ஒரு குறுகிய பிரதேசமாக இருப்பதாலும் நேரத்தில் சாய்வு ஏற்படுவதாலும் அங்கே கருந்துளை ஒன்றோ அல்லது பலவோ தோற்றம் பெறுகின்றது, பெறுகின்றன. இதன் விளைவாக அதன் நிகழ்வெல்லைக்குள் அகப்படும் துணிக்கைகள் கருந்துளைகளின் மையத்தினுள் சென்று மறைந்து விடுகின்றன.



இம்முடிவில் உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களும் அதற்கான எனது பதில்களும்.

1.கருந்துளைகளின் தோற்றம் தான் பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களிற்கான காரணம் என்று கூறியிருக்கின்றீர்கள். அதேவேளை உங்களுடைய முன்னைய பகுதியில் பெர்முடா முக்கோணம் எல்லாவேளையிலும் ஆபத்தான பகுதியல்ல என்றும் தெரிவித்துள்ளீர்கள். ஆகவே கருந்துளை உருவாக்கம் என்பது இங்கு எவ்வாறு சாத்தியம்?

நான் இங்கே கருந்துளை உருவாக்கத்திற்கான அடிப்படைக்காரணமாக அப்பகுதியானது காலத்தினில் மாற்றம் அடைவதே என்று தெரிவித்துள்ளேன். ஆகவே எனது கருத்தின் படி அப்பகுதி காலத்தால் எப்போதெல்லாம் மாற்றம் அடைகின்றதோ அப்போதெல்லாம் கருந்துளை உருவாக்கம் அங்கே நிகழும். எனவே அங்கே உருவாகக்கூடிய கருந்துளை ஒன்றோ பலவோ நிரந்தரமானவையல்ல.

“மாய ராஜ்ஜியம்“ தொடரின் நிறைவுப்பகுதியின் ஊடாக இன்னும் சில விளக்கங்களுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். கொஞ்சம் காத்திருங்கோவேன்………

வரட்டுமா………

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...