Skip to main content

மாய ராஜ்ஜியம் 19

2. அப்படியென்றால் அப்பகுதியானது எவ்வாறு வெவ்வேறு நேரங்களில் கால மாற்றம் அடையக்கூடியதாக மாற்றம் பெறுகின்றது? இதற்கான உங்கள் விளக்கம் என்ன?


நான் ஏற்கனவே குறிப்ப்பிட்டுள்ளதன் படி அண்ட வெளியில் பல்வேறு இடங்கள் இவ்வாறு காணப்படுகின்றன. அவை அவ்வாறு அங்கே ஏன் தோற்றம் பெறுகின்றன என்று இதுவலை எமது விஞ்ஞான வளர்ச்சிகளால் அறியப்படவில்லை. ஆனாலும் இவ்வாறு தோற்றம் பெறுவதற்கான சூழல் காரணிகள் அங்கே அமைந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற சூழல் அமைவது தான் எனது ஆய்வுக்களத்தில் இவ்வாறான நிலமை தோன்றுவதற்கான காரணமாகும். அவ்விடத்தை சூழ ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் செல்வாக்கு காரணமாக அச்சூழ்நிலைகள் அவ்விடத்தில் உருவாகாத போது அவ்விடத்திலுள்ள கால மாற்றம் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. மீண்டும் சூழ்நிலைகள் பொருத்தமாக அமைகின்ற போது அங்கே காலமாற்றம் ஏற்படும். இதன்விளைவாக கருந்துளை தோற்றமும் நடைபெறும். மறைவுகளும் தொடரும்.



3.பெர்முடா மர்மங்களிற்கு கருந்துளை உருவாக்கம் தான் காரணம் என்று கூறினீர்கள். உங்கள் ஆய்வின் முற்பகுதியில் நீங்கள் விவரித்திருந்த FLIGHT 19 என்கின்ற சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களில் காணாமல் போவதற்கு முன் குறிப்பிட்ட விமானம் மற்றும் கப்பலிலிருந்த சிலர் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது எவ்வாறு நடந்தது?

அங்கே தோற்றம் பெறுகின்ற கருந்துளையினுடைய நிகழ்வெல்லை மற்றும் அதற்கு வெளியே இருந்த போது தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நிகழ்வெல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் அவர்கள் கருந்துளை உருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அனுபவித்திருக்க கூடியதாக உள்ளது. இதை அவர்களின் உரையாடல்களிலிருந்துபுரிந்து கொள்ளமுடியும். அவ்வெல்லையின் உள்ளே நுழைந்த போது ஏற்பட்ட அதியுயர் சுழற்சி வேகம் கொண்ட மிகை சுழற்சியின் கரணமாக மின்காந்த அலைகளின் தொடர்பினை பெறமுடியாது. அதையும் விட அவ்வுயர் வேகம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருப்பார்கள். உயிரோடிருந்தாலும் செயலாற்றுவதற்கு அவ்வுயர் வேகம் அனுமதித்திருக்காது.



4. சில சந்தர்ப்பங்களில் கப்பல்கள் மாத்திரம் இருக்கமனிதர்கள்ள் மட்டும் மறைந்து போனது எவ்வாறு?

நான் ஏற்களவே கருந்துளை பற்றிய முன் விளக்கத்தில் கூறியுள்ளதன் படி சில கருந்துளைகளானவை தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களில் இருந்து வாயுக்கள் மற்றும் சில சடப்பொருட்களை ஈர்க்க்க்கூடிய திறன் வாய்ந்தவை. அதே போன்று இங்கேயும் அதன் நிகழ்வெல்லை அப்பிரதேசத்திலிருந்து தள்ளியதாக இருந்த்தன் காரணமாக கப்பலை விடுத்து மனிதர்களை மட்டும் ஈர்க்க்க்கூடிய அளவு ஈர்ப்பு சக்தியை அவ்விடத்தில் கொண்டிருக்கலாம் அல்லவா?



5. மீண்டும் எப்போது இவ்வாறான கருந்துளைகள் அவ்விடத்தில் தோற்றம் பெறும் என்று எதிர்வு கூறமுடியுமா?

நான் ஏற்கனவே கூறியது போலவே கருந்துளைகளின் தோற்றத்திற்கு காரணம் அங்கு உராகும் காலமாற்றமே. எனினும் அண்டவெளியில் ஆங்காங்கே உண்டாகும் இது போன்ற காலமாற்றத்திற்கு ஏதுவான சூழல்காரணிகள் தொடர்பான ஆராய்ச்சியில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை. அவை பற்றிய நிறைவான தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் எமக்கு கிடைக்கின்ற போது தான் பெர்முடா முக்கோணப்பகுதியில் அவை மீளவருகின்ற காலத்தை எதிர்வுகூறமுடியும். அதுவரை சாத்தியமில்லை. ஒருவேளை இதுவரை நடந்த சம்பவங்களின் கால இடைவெளிகளில் உள்ள தொடர்பைக் கண்டறிந்து அதன்மூலம் எதிர்வுகூற முயற்சிக்கலாம். ஆனால் அவ்விதமாக ஒரு சரியான முடிவைப்பெறுவதென்பது கூடுதலான சாத்தியமற்றது.

நன்றி உரை

மாய ராஜ்ஜியம் எனும் தலைப்பின் கீழ் வெற்றிகரமாக எனது ஆய்வை நிறைவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாய்வை வெளியிடுவதில் நான் அடைந்த பல்வேறு இடர்பாடுகளையும் என்னுடன் இணைந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரன் ரவிகரன் ரணேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உதவிகள்

ஆய்வில் பெர்முடா முக்கோணப்பகுதி தொடர்பான சம்பவங்களைப்பற்றிய தரவுகளை பெற்றுக்கொண்ட இடங்கள்

இணையத்தளம்: www.wikipedia.com

நூல் : ஆழ்கடலில் ஆவி ராஜ்ஜியம்

இம்மூலகங்களை குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே பயன்படுத்தினேன். ஆய்வினை நான் கொண்டு சென்றவிதம் ஆய்வின் முடிவு பற்றிய எண்ணக்கருக்கள் உட்பட அனைத்துவிதமான ஏனைய அம்சங்களும் எனது சொந்த முயற்சியை அடிப்படையாக கொண்டவை.

முற்றும்

Comments

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

யார் ? இவர்கள் 05

பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது. இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து “ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’ மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளு...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...