ஆய்வாளர்களின் கருத்துகள்
முதன் முதலாக ஒளியைக்கூடத்தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புசக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவை 1783 இல் பிரித்தானிய வானியலாளர் JOHN MITCHEL வெளியிட்டார். இதே கருத்தையொத்த முடிவை 1795 இல் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த பௌதிகவியலாளர் PIERRE SIMON LAPLACE ம் வெளியிட்டார்.
ஆனாலும் தற்போது பலராலும் புரிந்துகொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான கருந்துளை பற்றிய தெளிவான விளக்கமானது 1916 ம் ஆண்டில் ALBERT EISTEIN அவர்களால் வெளியிடப்பட்ட பொதுச்சார்புக் கோட்டில் () இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது.
அக்கொள்கையின் படி மிகப்பெரிய திணிவானது மிகச்சிறிய வெளியில் இருக்கும் போது சூழவுள்ள வெளியானது () உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்த பொருளும் கதிர்வீச்சுகளும் வெளியே செல்லமுடியாத படி தடுத்துவிடும். இத்தத்துவமானது கரும்பொருளானது மையத்தில் புள்ளி போன்ற சிறப்பு ஒருமையுடன் () கூடிய வெறுமையான வெளியாகவும் அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சக்திப்பொறித்தாக்கங்களின் படி கருந்துளைகளானவை தம்முள்ளே அகப்பட்டவற்றை அப்படியே வைத்திருக்காமல் ஒருவித வெப்பசக்தி வடிவில் கசியவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இக்கெள்கையில் குறிப்பிட்டவற்றை மேலும் விரிவாக நோக்குவோமானால் நேரத்தின் சாய்வு பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதன் படி கருந்துளையின் மையத்தில் திணிவு குவிந்திருக்கும் பகுதிக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையிலான தூரம் குறைவடைந்து செல்லும் போது நேரத்தில் சாய்வு அதிகரிக்கும். அதாவது நேரத்தின் போக்கானது மாறுபட்டுக்கொண்டிருக்கும். குறிப்பிட்ட அவ்விடத்திற்கும் தூரத்திலுள்ள வேறு ஓர் இடத்திற்கும் இடையிலான நேரம் மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.
பிரபஞ்சத்தில் நிலவும் நிலையற்ற காலம்
நாம் வாழும் இப்பூமியை எடுத்துக்கொண்டோமானால் நாம் முப்பரிமாண அடிப்படையிலேயே இயங்கிவருகிறோம். எமது சிந்தனை, நோக்கு, செயல் என்று அனைத்துவிதமான செயற்பாடுகளும் இந்த முப்பரிமாணத்தை அடிப்படையாக்க்கொண்டே அமைகின்றன. அதைத்தாண்டி வேறு பரிமாணங்களைப்பற்றி சிந்திப்பதற்கும் நடைமுறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் விடயங்களை அதன் அடிப்படையில் திட்டமிடுவதற்கும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கும் நாம் முனைவதில்லை. அதற்கு நமது உடல் மற்றும் உள்ளத்தின் இசைவாக்கம் போதாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும் நாம் அறிந்த நேரம் என்கிற பரிமாணம் ஏனைய 3 பரிமாணங்களுடன் தொடர்புபடுவதை நாம் அறிந்திருக்க வேண்டும். எனது இவ்வாய்வின் முடிவினை ஏற்றுக்கொள்வதற்குரிய அளவில் இதைப்பற்றிய விளக்கத்தை அளிக்கலாம் என எண்ணுகிறேன்.
நாம் வாழ்கின்ற இப்பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டோமானால் அதன் ஒவ்வொரு பகுதியிலும் காலம் சமமாக இருக்காது. நாம் இருக்கின்ற இந்த ஞாயிற்றுத்தொகுதியினை ஒரு சிறிய பகுதியாக நினைத்து மிகவும் தூரத்தில் உள்ள ஒரு பிரதேசத்தை நினைத்து கொள்வோமாயின் அப்பிரதேசமானது காலத்தின் அடிப்படையில் மிகவும் வேறுபட்ட பிரதேசமாக இருக்கலாம். இவ்வாறு நாம் வழ்கின்ற இந்த அண்டத்திற்கென்று ஒரு பொதுநேரம் இல்லை.
பிரபஞ்சத்தின் ஏராளமான வெவ்வேறு புள்ளிகளை எடுத்துக்கொண்டோமானால் அவை ஒவ்வொன்றும் நேரத்தில் வேறுபட்டவையாக இருக்கும். அதேவேளை அப்புள்ளிகளுக்கிடையிலான தூரவேறுபாடு மிக மிக அதிகமாக இருக்கும். அவை பல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகளாக இருக்கவல்லது. அவ்விடங்களை அடைவது என்றால் எமது நேரத்தை அவைகளுக்கு சமமான நேரமாக மாற்றுவதொன்றே உசிதமான வழியாகும். இதன்மூலமாக அதற்கான தூரம் வெகுவாக குறைக்கப்பட்டு விடும். இதன்மூலமாக இவ்விடங்களை மிகவும் எளிதாக அடைந்துவிடமுடியும்.
கருந்துளை மற்றும் நிலையற்ற காலம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அடுத்து எனது ஆய்விற்கான முடிவை வழங்கலாம் என எண்ணுகிறேன்.
தொடரும்.......
Comments
Post a Comment