இவ்வாறு பனாமா செயற்கைக்கால்வாய் தோற்றத்திற்கான பல்வேறு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 16ம் நூற்றாண்டில் இருந்து மேற்படி கால்வாய் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுவதும் பின்னர் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவை தடைப்பட்டுப்போவதும் வழமையான பல்லவியாகவே இருந்துவந்தது. 1876ம் ஆண்டும் ஓர் சர்வதேச நிறுவனம் உருவாக்கப்பட்டும் அதன் மூலமாக செயற்கை கால்வாய் அமைப்பது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதுவும் ஈற்றில் நீர்மேல் எழுத்தானது தான் மிச்சம்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்திற்கு கரிபியன் கடலினூடாக பயணத்தினை மேற்கொள்ளும் போது நேரமும் பயணதூரமும் பெருமளவில் மிச்சப்படுகிறது என்பது உண்மை. உதாரணமாக சன்பிரான்சிஸ்கோ இலிருந்து நியூயோர்க் இற்கு செல்லும் போது கரிபியன் கடலினூடாக செல்வோமேயானால் சுமார் 18000 மைல் தூரம் மிச்சப்படுத்தப்படும்.
.இவ்வாறான காரணங்களினால் பனாமா கால்வாய் உருவாக்கம் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை உருவாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல்வேறு நாடுகளும் கொண்டிருந்தன.
அண்ணளவாக 1880ம் ஆண்டளவில் பிரான்ஸ் மேற்படி செயற்பாட்டில் ஈடுபடத்தொடங்கியது. ஆனால் இந்த நாட்டினது முன்னெடுப்புகள் மக்களிடத்திலும் சரி பல்வேறு இராஜ்ஜியங்களிலும் சரி ஒரு குறிப்பிட்டளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. காரணம் எகிப்தில் சுயேஸ் கால்வாய் கட்டமைப்பினை வெற்றிகரமாக்குவதற்கு முக்கிய காரணியாக அமைந்த Ferdinand Marie de Lesseps என்பவர் பிரான்ஸின் பனாமா கால்வாய் உருவாக்கத்திற்கு உள்வாங்கப்பட்டமை ஆகும். பத்து ஆண்டுகளின் முன்னர் உலகத்திலேயே மிக நீண்ட கால்வாயான சுயேஸ் கால்வாயினை வெற்றிகரமாக அமைத்தமையால் பனாமாவின் பௌதிக தோற்றப்பாடுகளை அடிப்படையாக கொண்டு கடல் மட்டத்திலான பனாமாக்கால்வாய் உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். 74 வயதினை எட்டியிருந்தாலும் அவரது செயல்களோ அல்லது முயற்சிகளோ முதுமை அடையவில்லை. 1880ம் ஆண்டளவில் அவர் தனது இளைய மகனுடன் பனாமா கால்வாய் அமையவேண்டிய பிரதேசத்தை பார்வையிட்டு மேற்படி செயற்திட்டம் முடிவடைய எட்டு வருடங்களுக்கு மேல் செல்லும் எனவும் 658 மில்லியன் பிராங்க் செலவாகும் எனவும் தகவல்களை முன்வைத்து செயல்களில் இறங்கினார்.
அமெரிக்க அரசு கால்வாய் கட்டுவதற்கான ஆர்வத்தினையும் பல்வேறு வளங்களையும் கொண்டிருந்த காரணத்தினால் தாம் மேற்படி கால்வாய் கட்டுவதற்காக வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளங்களையும் அமெரிக்க அரசுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பதற்கு பிரான்ஸ் அரசு முன்வந்தது. காரணம் மிகப்பாரியளவு பட்ஜெட்டை உள்ளடக்கியதான ஒரு செயற்திட்டமாக இது இருந்தது மட்டுமல்லாது ஆளணிப்பற்றாக்குறை, வேலையாட்களுக்கு ஏற்பட்ட நோய்கள், வேலையாட்கள் பலரினது இறப்பு மற்றும் கட்டுமானப்பணியில் ஏற்பட்ட பொருளாதார இறக்கம், வெற்றிகரமாக செயற்படுவதற்கு போதியளவு பணம் பெறப்படமுடியாமை என்று கூறிக்காண்டே போகலாம். இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு அப்பால் Ferdinand Marie de Lesseps இனால் முடியாது போகவே அமெரிக்க அரசிடம் கையளித்துவிடலாம் என்று எண்ணி கட்டுமானப்பணிகளை நிறுத்திகொண்டது பிரான்ஸ் அரசு.
பின்னர் அமெரிக்க அரசாங்கம் பனாமாவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டு பனாமா கால்வாய் செயற்திட்டத்தை ஆரம்பித்தனர். பனாமாவின் சுதந்திரம் மற்றும் 100 ஆண்டுகளுக்கு பனாமா கால்வாய் அரங்க (CANALZONE) வாடகை போன்றவற்றை மையமாகக்கொண்டு அந்த ஒப்பந்தம் அமைந்திருந்த்து. ஆரம்பகட்ட பணமாக சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் அத்துடன் 250,000 அமெரிக்க டொலர் பணம் வருடாந்த வாடகைப்பணமாக அமைந்தது.
பனாமா கால்வாய் அமைப்பதில் பல்வேறு நாடுகள் முயன்று அதில் பல்வேறு இன்னல்கள் ஏற்படவே அவர்களது செயற்பாடுகள் கைவிடப்பட்டமை தொடர்பான ஒரு வரலாற்றை 3 பாகங்களில் வெளியிட முடிந்தது. அடுத்த பாகத்தில் இருந்து பனாமாய் கால்வாய் கட்டுமானப்பணிகள் பற்றிய சுவாரசியமான தொகுப்பை காணலாம்……….

Comments
Post a Comment