Skip to main content

Posts

Showing posts from November, 2009

MAAYA RAJJYAM - 14

சமூகத்தில் நிலவும் சில உண்மைக்குப்புறம்பான தகவல்கள் திகில்களும் , மர்மங்களும் தாராளமாக கொட்டிக்கிடக்கும் இந்த பெர்முடா முக்கோணம் நோக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க உறுதியான தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தினால் மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்படுகின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக பல வதந்திகள் உருவெடுக்கத்தொடங்கியுள்ளன. இவ்வாறான வதந்திகள் அவை தொடர்பான எண்ணங்களை மிகவும் வித்தியாசமான முறையில் ஏற்படுத்திவிடுவதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே பல புதிய கேள்விகளை ஏற்படுத்திக்கொண்டு மர்மங்களின் அளவையும் அதிகரித்து விடுவது தான் வேடிக்கையாக உள்ளது. பெர்முடா முக்கோணத்தின் இரகசியம் தான் என்ன? கேள்விப்படும் அனைத்து சம்பவங்களையும் திகில் மர்மம் மற்றும் அமானுஷ்ய விடயங்களின் கலவையாக எமது மனங்களில் எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த புரியாத புதிரின் விடை தான் என்ன? பொதுவாக மக்களால் அறியப்பட்ட மனித அறிவியல் அம்சங்களின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் பொய்யாக்கும் வகையில் மக்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளின் தோற்றத்திற்கு காரணமாக திகழும் இப் பெர்முடா முக்கோணம் தொடப்போகும் கரை தான் என்ன? தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை

கண்ணம்மா 06

குமரேசனுக்கு இறுதி ஆண்டுக்கு மேலதிக பணம் மூன்று இலட்சம் வேணுமாம். இதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம். கண்ணம்மா தன் அன்பு உடன்பிறப்பிடம் இருந்து கிடைத்த மடலை வாசித்து முடித்ததும் பணம் பெறக்கூடிய வழிகள் குறித்து யோசிக்கலானாள். உடனே கண்ணம்மா, கிராமத்தலைவன் முனியாண்டி இடம் சென்று தான் வசித்த வீட்டை விற்க இருப்பதாகவும் ஆதலால் அதனை இயலுமான அளவு உயர்ந்த விலைக்கு விற்றுத்தருமாறும் வேண்டினாள். துர்-அதிஷ்டம்!!!அக்காணி ஒரு இலட்சம் ரூபாவிற்கே விற்கப்பட்டது. மீதி இரண்டு இலட்சங்களையும் எவ்வாறு பெற்றுக்கொள்வதென்று பல வழிகளிலும் யோசிக்கலானாள். இறுதியில் சாதகமான தலையசைப்புடன் எழுந்தாள். எழுந்து எங்கோ செல்லலானாள். ஆம் அவ்வழி ஏற்கனவே ஒரு தடவை பழக்கப்பட்ட வழிதான். ஈற்றில் தன் அயல்வீடுகளிடம் சென்று தன் தம்பியின் தேவைபற்றி குறிப்பிட்டு அதற்கு சிறிதளவாயினும் பணம் கடனாக தரும்படி கேட்டுக் கொண்டாள். எத்தனை வீடுகளில் கேட்டும் அத்தனை வீடுகளிலும் பாதகமான எதிர்பார்ப்புகளே கிடைத்தன. மேலதிக பணத்தை வேறு எவ்வாறு பெறுவது என யோசித்தாள். தலையிடி எமன் என வரும் அளவுக்கு வந்தும் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்

கண்ணம்மா 05

குமரேசனோ தன் அக்கா படும் சிரமத்தை தடுக்க முடியவில்லையே என உள்ளத்தால் நொந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒருவாறு அந்நாள் கழிந்தது. திங்கட்கிழமை - காலைப்பொழுதினில் தன் தம்பிக்கு தேநீர் தயாரித்து கொடுத்த பின்னர் செல்லம்மா வீட்டிற்கு சென்று வருவதாக வெளியேறினாள், வீட்டை விட்டு. அவள் கால்கள் செல்லம்மா வீட்டையும் கடந்து சென்றன. செல்லம்மா வீட்டை தாண்டி எங்கேயோ சென்றன.. அக்கால்கள் ஈற்றில் சிவப்பு ''சக'' குறியீட்டை நாடியது.. 'வைத்தியசாலையை' அடைந்து அங்கு இரத்ததானம் கொடுக்கும் இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அளவு கொடுத்த பின்னர் அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அடகுவைக்கும் இடத்திற்கு சென்று காதுகளில் மினுங்கிக் கொண்டிருந்த இரு தோடுகளினையும் அடகு வைத்து போலித்தோடுகளை அணிந்து கொண்டு அயலவர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணத்தைப் பெற்று அமைதியாக வீட்டினுள் வந்து சேர்ந்தாள். குமரேசன் புறப்பட தயாராக இருக்கும் வேளையில் காசைக்கொண்டு வந்து குமரேசனிடம் கொடுத்து, "தம்பி கவனமாப்படீடா நீ எனிவரும் போது ஒரு டொக்டராத்தான் வரணும் அப்பத்தான்டா எல்லாரும் நம்மள மதிப்பாங்க&qu

MAAYA RAJJYAM 13

நவீன அறிவியலையும் தாண்டி செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளின் தாக்கம்  மனிதனின் சமகால அறிவியல் வளர்ச்சி என்பது மிகவும் பிரமாண்டமானது. மனித இன வரலாற்றில் விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேக போக்கைக் கொண்ட காலத்தில் உள்ளோம். தற்போதுள்ள சாதனங்களுடன் ஒப்பிடுகையில் 5-10 வருடங்களின் முன் பயன்படுத்தப்பட்ட சான்றுகள் கூட வேடிக்கையானவை என்று எண்ணும் வகையில் மனிதனின் அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி குறுகிய காலத்தில் பல மடங்காக அதிரித்துச் செல்கிறது. அடுத்து வரும் காலங்களிலும் இவ்வேகத்தில் அல்லது இதைவிடக்கூடிய வேகத்தில் அபிவிருத்தி அடைந்து செல்வோம் என்பது கண்கூடு. ஆனாலும் மனிதனின் அறிவியல் வளர்ச்சியாலும் முற்றாக விடை காணப்படாத மர்மங்களான கருந்துளை மர்மங்கள், அண்டத்தில் நிலவும் நிலையற்ற காலத்தன்மை போன்று பல குறிப்பிடக்கூடிய அம்சங்களின் செல்வாக்குகளும் இதற்கு காரணமாக வரக்கூடியசாத்தியப்பாடுகளும் உண்டு. இவ்வாறான இனங்காணப்படாத பல காரணிகளின் செல்வாக்குகளும் தாக்கங்களும் இம்முக்கோணத்தின் மர்மத்தொடர்கதைகளுக்கு வழிசமைப்பனவாகவே இருக்கும். ஆகவே நவீன அறிவியலையும் தாண்டிய இக்காரணிகளின் பாதிப்பு இம்முக்கோணம் பற்றிய

கண்ணம்மா 04

எவ்வாறோ கஸ்டப்பட்டு ஐந்தாறு வீடுகளில் நாள்தோறும் சட்டி பானைகளை கழுவவும் உணவு சமைக்கவும் அனுமதிக்கப்பட்டாள். வேலைக்கேற்ப கூலி கிடைப்பதில்லை. நியாயம் கேட்டால் வேலையை விட்டு தூக்கிவிடுவார்களோ என அஞ்சி கண்ணம்மாவும் அடக்கி வாசித்தாள். வேலை செய்யும் போது ஏற்பட்ட பல்வேறு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு தனது சொந்த அக புறப்பற்றுக்களை களைந்து தனது அன்புத்தம்பிக்காக தனது தம்பியின் ஒளிமயமானதோர் எதிர்காலத்திற்காக தன்னை வருத்தி கடின உழைப்பினில் மூழ்கினாள். அன்று வெள்ளிக்கிழமை. தம்பியை பாடசாலைக்கு அனுப்பியதன் பின் கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கி அதன்பின்னர் சின்னம்மா வீட்டிற்கு வேலை செய்யவென சென்றிருந்தாள். '" ஏண்டி மாடு கழுத உனக்கு நேரங்காலத்தோட வரத்தெரியாதாடி? வீட்டுல என்னடி செய்யிறாய்? வா வந்து உடன சட்டி பானய கழுவு!!!எல்லாம் நாறுது!!!வாடி சொல்லச்சொல்ல அங்கேயே குத்துக்கல்லாட்டா நிக்குறாய்!!!".    என லாவா சீறும் எரிமலை என சீறித்தள்ளினாள். சின்னம்மா பேச்சை எல்லாம் வாங்கிக்கொண்டு தனது பெற்றோரை மனதில் எண்ணி கண்ணீர் வடித்துக்கொண்டு வேலையைச் செய்யலானாள். "குமரேசன் மட்டும் பெரிய பட

MAAYA RAJJYAM 12

ஆக பெர்முடா முக்கோணம் என்பது குறிப்பிட்ட சில காலத்தில் மாத்திரம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி ஆர்ப்பரித்து விட்டு மற்றைய சந்தர்ப்பங்களில் சாதாரண கடற்பகுதியாக அடங்கிவிடுகிறது. இது பற்றி மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளும் குறிப்பிட்ட சம்பவங்களை மாத்திரம் சுற்றி நிற்க வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. எப்போதும் எதுவும் நடக்கும் என்றில்லாமல் எப்போதாவது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எல்லோரையும் எச்சரிக்கையுடன் பார்க்கவைக்கும் பிரதேசமாக அமைதியாக உள்ளது. திகில்கள் பலவற்றை திரளாக கொண்டிருக்கின்ற இந்தப்பேய் முக்கோணம் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் சிலவற்றையாவது தருவதற்கு இடையூறாக அமைவது இந்த மர்ம தேசத்தின் மயான அமைதி என்றால் அது மிகையாகாது. தடயங்களை பெருமளவில் பெற முடியாமல் போனமை சிறு குற்றவியல் வழக்குகள் முதல் மாபெரும் அறிவியல் ஆய்வுகள் வரை சாட்சிகளும் தடயங்களும் அவற்றின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு அவசியமாகின்றன. ஒவ்வொரு ஆய்வினதும் தீர்வின் துல்லியத்தன்மையையும் தீர்விற்கான கால அளவையும் தீர்மானிக்கும் இவ்வித்தியாசமான அம்சங்கள் பெர்முடா முக்கோணத்தின் ஆய்வுகளின் போக்கில் தேக்க நிலையை உண்

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்

MAAYA RAJJYAM - 11

பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வுகளில் இதுவரை எழுந்துள்ள சவால்கள் இன்றுவரை இம்முக்கோணம் உலகின் பல ஆராய்ச்சியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டே சென்றுள்ளது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த திகில் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க முற்பட்டவர்கள் மேலும் பல முடிச்சுக்களை உருவாக்கிவிட்டது தான் விந்தையாக உள்ளது. சிக்கல்களின் சிகரமாக திகழும் இம்முக்கோணத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களும் அடுத்து வரும் ஆய்வாளர்களுக்கு விடை தெரியாத பல வினாக்களை விட்டுச் செல்வதே வழமையாகி விட்டது. ”மர்மத்திற்கான தீர்வு” என்ற பெயரில் வெளிவந்து பல லட்சம் டொலர்களை சம்பாதிக்கின்ற நூல்களின் எண்ணிக்கை மட்டும் நீண்டு செல்கிறது. எனவே இவ்வாய்வினை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லலாம் என எண்ணுகிறேன். இவ்வாய்வு தொடர்பான சவால்களை  ஆராய்ந்த பின்பு காரணங்களை அலசலாம் என முயல்கிறேன். சரி இப்பிரதேசத்தை நோக்கிய ஆய்வில் புரியாத புதிர்கள் பல தோன்றுவதற்கான காரணம் என்ன? அமைவிடம் தொடர்பான மர்மங்களின் நிலையற்ற தன்மை பல்வேறு சம்பவங்களின் போதும் தடயங்களைப் பெருமளவில் பெற முடியாமல் போனமை நவீன அறிவியலையும் தாண்டிச் செல்வாக்குச

MAAYA RAJJYAM - 10

நேரடி திகில் அனுபவங்கள் இவ்வாறு காணாமல் போனோர் பற்றிய சம்பவங்கள் நூற்றுக்கணக்கான அளவில் நடந்துள்ளன. எந்தவொரு சம்பவத்தின் போதும் எதுவித தடயமும் கிடைக்கவில்லை என்பது தான் மேலும் திகிலூட்டும் செய்தி. அடுத்ததாக பெர்முடா முக்கோணப்பகுதியில் பயணித்து சில வித்தியாசமான அனுபவங்களைப் பெற்று உயிர் தப்பிய சிலவற்றினுடைய அனுபவங்களைப் பார்த்து விட்டு நேரடியாக எனது ஆய்வினுள் நுழைகிறேன். VINCENT GRADDIS காலம் :- 1944 இன் இறுதிப்பகுதி பதவி :- யுத்த விமானி பயணம் :- இத்தாலியை நோக்கி தெரிவித்தவை:- எனது குழுவில் சுமார் 7 விமானங்கள் இருந்தன.பெர்முடாவிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் இருந்த போது எங்களது விமானங்கள் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகின. ஆனால் வானிலை நன்றாகவே இருந்தது. ஆனால் அந்த அதிர்ச்சியின் விளைவாக விமானம் தலைகீழாகவும் செங்குத்தாகவும் கீழ்நோக்கியும் பாயத் தொடங்கியது. நான் மிகவும் சிரமப்பட்டு விமானத்தின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி தளத்திற்கு காண்டு வந்து சேர்த்தேன். என்னுடன் மேலும் ஒரு விமானமும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் மற்றைய ஐந்து விமானங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை.

கண்ணம்மா 02

கண்ணம்மா 02 அதிகாலையில் நீராடி சீருடை அணிந்த சிறுவர்களை சாப்பிட அழைத்த செல்லம்மா திண்ணையின் பக்கம் சென்று, “என்னங்கோ!!! பிள்ளயள் வெளிக்கிட்டிட்டினம், வாருங்கோவன் அத்தான் சாப்பிடுவம்“ என தனது கணவனை அழைத்தாள். திண்ணையில் அமர்ந்து ஆயிரம் கனவுகளில் மூழ்கியிருந்த கணேசனுக்கு செல்லம்மாவின் வரிகள், கனவுகளிலிருந்து அவனை மீட்டன. சோகம் குன்றாத ஒடுங்கிய முகம் தனது உதடுகள் அசைத்து   ” நீ போய் சாப்புடு புள்ள நான் இப்ப வந்துர்றன்” என்று கூறி வெறுப்பின் கண் மனம் வைத்து ஆமை வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான். கணேசன் -   கட்டையான பருத்த உடல் கொண்டு,  சுருள் தலைமயிர் கொண்டு, குறுந்தாடி கொண்டு, நெற்றியில் அடிமட்டம் வைத்து வரைந்தது போல மூன்று தடித்த கோடுகளை உடையதும்- பசும்பாலின் வெண்மையை உடையதுமான திருநீற்றை அணிந்து கொண்டு, அதன் நடுவே மஞ்சள் சந்தனத்தால் வட்ட வடிவமான பொட்டுடனும், சற்று அழுக்கான வேஷ்டியையும் அணிந்த உருவம் செல்லம்மாவை கண்டதும் ஒரு வரண்ட புன்முறுவல். செல்லம்மாவும் சிறிய புன்னகையால் மறுமொழி கூறி சமையலறைக்கு சென்று, உணவை கோப்பைகளில் இட்டு வெளியே கொண்டு வர அனைவரும் வட்ட மேசை மாநாட்டில

கண்ணம்மா 01

கண்ணம்மா காரிருள் அகன்று சூரியன் கிழக்கு திசையில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தியவண்ணம் செங்கதிர்கள் கொண்டு ஒளிபரப்ப, குயில்கள் கீச்சிட, சேவல் கூவிட வழமை போல அன்றைய தினமும் உயிர் பெற்றது - அந்த ரம்மிய காலைப்பொழுதுடன்..... பச்சிளங்குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்த கண்ணம்மாவையும் , அவளது தம்பி குமரேசனையும் நோக்கி அவர்களது தாயான செல்லம்மா, செல்லமாய்,   " கண்ணுக்குட்டி, குமரேசா எழும்புங்கோடா!!!, என்ர  ச்செல்லங்களெல்லோ !!! பள்ளிக்கூடத்துக்கு போவோணும் இல்லயோ? எழும்புங்கோடா!!! , என்ர ராசாத்தியள்!!!"   உள்ளத்தில் உள்ள அன்பு நிறைந்து ஒழுகிற்று என்று சொல்லும் அளவிற்கு பாசத்தை வாரி இறைத்து, தன் இரு கண்களென எண்ணி வளர்க்கும் அவள் புதல்வர்களை எழுப்பினாள். பிள்ளைகள் இருவரும் குளிக்கவென எடுத்த வைத்த வெந்நீர் அடங்கிய பானையை அவர்களிடம் கொடுக்கவும் செல்ல எரிச்சலுடன் தம் தாயின் முகம் பார்த்த மொட்டுக்கள், சிணுங்கிய வண்ணம் குளியலறை செல்ல  அவர்கள் தலையை தடவிவிட்டு சமையலறை நாடினாள் செல்லம்மா. செல்லம்மா - வீங்கிய கண்கள், ஒடுங்கிய கன்னங்கள், வட்ட முகம், பொதுநிறமேனி, அளவான கூந்தல்,  முலாம் பூசிய தோ

MAAYA RAJJYAM - 9

மறைந்த மனிதர்கள் ROSALIE ஆண்டு :- 1840 மாதம் :- 11 திகதி :- 06 கப்பல் வகை:- பயணிகள் கப்பல் பயணப்பாதை:- ஃபிரான்ஸ் இலிருந்து ஹவானா நோக்கி சம்பவம்:- பெர்முடா முக்கோணப்பகுதியில் கடற்பிரதேசத்தில்  காணப்பட்டது. ஆனால் உள்ளே இருந்த மனிதர்களை காணவில்லை. தேடுதல் முயற்சி :- பெரிய அளவில்  மேற்கொள்ளப்பட்டது.தடயம் எதுவும் இல்லை. ELLEN AUSTIN ஆண்டு :- 1881 கப்பல் வகை :- அமெரிக்காவைச் சேர்ந்த பாய்மரக்கப்பல் சம்பவம்:- கப்பல் மட்டும் தனியாக மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் உள்ளே எந்தவொரு பயணியையும் காணமுடியவில்லை. தேடுதல் முயற்சி:- பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித தடயமும் பெறப்படவில்லை. அடுத்த பகுதியில் பெர்முடா மர்மத்துடன் நேரடி அனுபவம் பெற்று கருத்துக்கள் வெளியிட்டவர்கள் பற்றி நோக்குவோம் மாயங்கள் தொடரும் உங்கள் மாயராஜ்ஜியத்தில்........ விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன....... அவை உண்மையின் பக்கத்திற்கு உரங்களாகட்டும்!!!!

வாசகர்களுக்கான அறிவித்தல்.....

வாசகர் ஒருவரின் (மின்னஞ்சல் மூலமான) கருத்திற்கான பதில்.... கருத்து - பெர்முடா மாயங்கள் போக்கும் ஆய்வு என கூறியபோதும் வெறுமனே தரவுகளை காட்சிப்படுத்துவது ஏமாற்றமாக உள்ளது. பதில்- மாய ராஜ்ஜியம் எனும் ஆய்வுக்கட்டுரையை பகுதி பகுதியாக எழுதி வருவதால் வாசகர்கள் ஆரம்பத்தில் இருந்து முழுப்பகுதியையும் வாசிப்பதால் ஆய்வு பற்றிய பூரண அறிவைப் பெற்றுக்கொள்ளமுடியும். வெறுமனே குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிப்பதால் ஆய்வின் முழு இன்பத்தையும் பெற இயலாது... மேலும் தரவுகளை மட்டும் முன்வைத்து வரும் நான் பெர்முடா மர்மம் பற்றிய பூரண தகவல்களை வழங்கிய பின்பே ஆய்வுப்பகுதிக்குள் உங்களை அழைத்துச் செல்வேன்...

MAAYA RAJJYAM 08

மறைந்த கப்பல்கள் INSURGENT ஆண்டு :- 1800 மாதம் :- 08 சம்பவம் :- பெர்முடா கடற்பகுதியில் 340 பயணிகளுடன் மறைந்து போனது. தடயங்கள் :- எதுவும் இல்லை WASP ஆண்டு :- 1814 மாதம் :- 10 திகதி :- 09 சம்பவம் :- பெர்முடா முக்கோணப்பகுதியில் 140 பயணிகளுடன் காணாமல் போனது. தடயங்கள் :- எதுவும் இல்லை ATLANTA ஆண்டு :-1880 மாதம் :- 01 சம்பவம் :- இங்கிலாந்தைச் சேர்ந்த இக்கப்பல்கள் 290 பேருடன் இப்பகுதியினுள் காணாமல் போனது. தேடுதல் முயற்சி :- இங்கிலாந்து அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது தடயங்கள் :- எதுவும் இல்லை USS CYCLOPS ஆண்டு :- 1918 மாதம் :- 03 திகதி :- 04 கப்பல் விபரம் :- அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்தது. சுமார் 309 கடற்படை வீரர்களுடன் வர்ஜீனியாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டது. சம்பவம் :- கப்பலிலிருந்த 309 பேருடன் பெர்முடா முக்கோணப்பகுதியை அடைந்தபோது மறைந்து போனது. தேடுதல் முயற்சி :- அமெரிக்கா அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. தடயங்கள் :- எதுவும் இல்லை RAIFUKU MARU ஆண்டு :- 1925 மாதம் :- 04 கப்பல் வகை :- ஜப்பானிய சரக்கு கப்பல்

MAAYA RAJJYAM 07

குறுகிய நாட்கள் இடைவெளியின் பின்னர் மீண்டும் வாசகர்களாகிய உங்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி................ மாய ராஜ்ஜியம் - ஓர் ஆய்வு -07 STAR ARIEL ஆண்டு :- 1949 மாதம் :- 01 திகதி :- 17 பயணத்தை ஆரம்பித்த இடம் :- இங்கிலாந்து விமானத்திலிருந்தவர்கள் :- 15 பயணிகள், 7 சிப்பந்திகள் பெற்றோல் நிரப்பிய இடம் :- பெர்முடா தீவு புறப்பட்ட நேரம் :- காலை 7.45 விமானி கடைசியாக தொடர்பு கொண்ட நேரம் :- காலை 8.30 தெரிவித்த தகவல் :- காலநிலை மிகவும் நன்றாக உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பயணத்தை பூர்த்தி செய்து விடுவோம். மறைந்து போன நேரம் :- காலை 8.32 இற்குப்பின் தேடுதல் முயற்சி :-  72 விமானங்கள் , 2 விமானந்தாங்கி கப்பல்கள் மொத்தமாக 150 000 சதுர பரப்பளவிற்கு தடயங்கள் :- இல்லை இதன்பின்பு 1949 இல் மட்டும் 9 விமானங்கள் மறைந்து போயின... DOUGLUS DC3 ஆண்டு :- 1948 மாதம் :- 12 திகதி :- 28 பயணப்பாதை :- சான்ச்சுரவானில் இருந்து மியாமி வரையானது பயணிகளின் எண்ணிக்கை :- 36 விமானி பேசிய நேரம் அதிகாலை :- 4.15 தெரிவித்த தகவல் :- ”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வ

MAAYA RAJJYAM 06

STAR TIGER ஆண்டு :-1948 மாதம் :- 01 திகதி :- 29               பல்லாயிரக்கணக்கான மக்களை மறையச்செய்த மர்மங்களின் புகலிடமான பெர்முடா முக்கோணத்தின் பல கோரச்சம்பவங்களில் அமெரிக்க மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்த பெருமை இச்சம்பவத்திற்கு உண்டு எனலாம்.                பிரிட்டனின் விமானப்படைத்தளபதியாக இருந்த AIR MARSHAL AUTHOR CUNNINGHAM உள்ளிட்ட 25 பயணிகளுடனும் 6 சிப்பந்திகளுடனும் பெர்முடா முக்கோணப்பகுதிக்குள் பறந்து வந்தது.                சரியாக பெர்முடா தீவிற்கு வடகிழக்காக 380 கடல்மைல் தொலைவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொடர்பை ஏற்படுத்திய விமானி காலநிலை நன்றாக இருப்பதாகவும், குறிப்பிட்ட இடத்தை வந்தடைவதில் எந்தச்சிக்கலும் இல்லை என்று தெரிவித்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் அவருடைய தொடர்பு கிடைக்கவில்லை. ராடார் திரைகளிலிருந்தும் விமானம் மறைந்து போனது.                மறுநாள் காலையில் 30 விமானங்கள் 10 கப்பல்களுடன் கூடிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் நீண்ட நேரமாக மிகப்பெரிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் முயற்சியில் எதுவித தடயத்தையும் கண

MAAYA RAJJYAM 05

அவ்விமானங்கள் அப்போது எங்கே பறந்து கொண்டிருந்தன? அதுவரை தொடர்ச்சியாக பறப்பதற்கு அவற்றிற்கான எரிபொருள் வசதியை எங்கிருந்து பெற்றன? சூழவிருந்த பல நாட்டு ராடர்களை ஏமாற்றிவிட்டு அவை பறப்பது நடைமுறையில் எவ்வாறு சாத்தியம்? போன்றவை இன்று வரை விடைக்காக ஏங்கும் வினாக்களாகவே உள்ளன!!! மறுநாள் காலையில் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மாபெரும் தேடுதல்வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 240 விமானங்களும், 18 கப்பல்களும், 2 நீர்மூழ்கிக்கப்பல்களும் நேரடியாக ஈடுபட்டிருக்க மேலும் 67 விமானங்களுடன் கூடிய விமானந்தாங்கிக் கப்பலும் தயாராக இருந்தது.4100 மணி நேரங்களாக  380 000 சதுர மைல்கள் பரப்பளவிற்கு தேடுதல் நடைபெற்றபோதும் ஒரு சிறிய தடயத்தைக்கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் 1945 டிசெம்பர் 6ம் திகதி பத்திரிகை விற்பனையில் சடுதியான அதிகரிப்பிற்கு காரணமான இந்த உரையாடல்கள் இன்று வரை சரியான காரணம் கண்டறியப்படாமல் மர்மமாகவே உள்ளன!!! ம ர்மங்கள் தொடரும்!!!! உங்கள் உண்மையின் பக்கத்தில் !!! விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!!!!

MAAYA RAJJYAM 04

தொலைந்த விமானங்கள் ஆண்டு  :- 1945 மாதம் :- டிசம்பர் திகதி :- 5 அதுவரை பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்பட்டதை பேய்முக்கோணமாக மாற்றிய பெருமை இந்த விமானத்திற்கே சாரும். அமெரிக்க விமானிகளின் குறிப்பிடத்தக்க 2500 மணித்தியாலய வான் பயண அனுபவம் மிக்க தேர்ச்சி பெற்ற லெப்டினண்ட் சாள்ஸ் கரொல் ரெய்லர் . இவருடன் 14 விமானப்பயிற்சி மாணவர்களை உள்ளடக்கியதாக சுமார் 5 விமானங்களுடன் கூடிய Flight 19 என்கிற பிரிவினுடைய பயிற்சித்திட்டம்  LAUDERDALE என்கிற இராணுவ தளத்தில் இருந்து ஆரம்பமானது. குறித்த ஒரு பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது குறித்த நாளின் வானிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னரே அது செயற்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறே ஆராய்ந்தபோது அன்றைய வானிலை மிகவும் நன்றாகவே காணப்பட்டது. வெற்றிகரமான முறையில் பயிற்சித்திட்டம் முடிந்து திரும்புவதற்கு சுமார் சில நிமிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே உலகையே உலுக்கிய அச்சம்பவங்கள் அரங்கேறின. எப்போதும் விமான பயிற்சித்தி்டத்தில் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் விமானங்களுடன் தரை வானொலிக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்புகள் பேணப்படுவது வழமையான நடவடிக

மாய ராஜ்ஜியம்- 03

அமைவிடம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த பெர்முடா முக்கோணம் என்பது தான் என்ன? அது ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசமா? கற்பனையாக அமைக்கப்பட்ட அமைவிடமா? முழு நேரமும் மனிதர்களின் நடமாட்டமற்ற பகுதியா? என பல கேள்விகள் எழுகின்றன.            மத்திய அத்திலாந்திக் தீவான பெர்முடாவையும், அமெரிக்காவின் அத்திலாந்திக் கரையோர எழில்மிகு நகரான புளோறிடாவையும், சன்யுவான் பியூட்ரோறிகா எனும் சிறிய தீவுப்பகுதியையும் முக்கிய 3 முனைகளாக கொண்டதாக கற்பனையில் இனங்காணப்பட்டது தான் இந்தப் பெர்முடா (பேய்) முக்கோணம்.             மின்காந்தவியல் தத்துவத்தைப் பொய்யாக்கிய பெருமையும் இப்பிரதேசத்திற்கு உண்டு. பொதுவாக ஒரு மின்காந்த திசையறிகருவி காந்த வடக்கையே காட்டுவதுண்டு. ஆனால் உலகின் இரு பிரதேசங்களில் மின் காந்த திசையறிகருவி ஏமாற்றும் வகையில் உண்மை வடக்கையே காட்டும். அவற்றுள் ஒன்று இந்த பெர்முடா முக்கோணம்!!!! சரி இந்த அமைவிடம் இவ்வளவு தூரம் முக்கியம் பெறுவதற்கான காரணங்கள் என்ன? 1950களின் ஆரம்பத்தில் மக்களால் உச்சரிக்கப்பட ஆரம்பித்த பெர்முடா முக்கோணம் இன்றும் பலரையும் திகிலோடு நோக்க வைப்பதன் மர்மம் தான் எ

மாய ராஜ்ஜியம்- 02

தொடர்கிறது................. நோக்கம் திகிலிற்கு பெயர் பெறும் இடங்கள் சில வேளைகளில் பல வதந்திகளால் சிக்குப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகி விட்டது. குறிப்பிட்ட சம்பவங்களின் தனித்துவத்தைக்குறிக்கும் இவ்வதந்திகள், அவை தொடர்பான தகவல்களை மூடநம்பிக்கைகளின் பக்கம் திருப்புவது தான் வேடிக்கையான விடயம். ஆகவே உலகின் ஒட்டுமொத்த மக்களையும் பல காலப்பகுதிகளில் திகிலில் உறைய வைத்த பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மமான சம்பவங்களையும் அந்த சம்பவங்களுக்கு காரணமான சில உண்மைகளையும் அலசி ஆராய்ந்து அப்பகுதி தொடர்பான அதளிவான அறிவை அனைத்து மக்களுக்கும் வழங்குவதே இவ்வாய்வின் நோக்கமாக காணப்படுகிறது.                                                                                       தொடரும்...............

மாய ராஜ்ஜியம்- 01

ஆழ்கடலின் சுரங்கங்கள் தொட்டு விண்ணிலே தரித்து நிற்கும் அரங்கங்கள் வரை இப்பூவுலகில் மனிதனின் வளர்ச்சி வியாபித்துள்ளது. வியக்கத்தக்க துகள்களையும், விசாலமான பால்வீதிகளை விட பெரிய பிரபஞ்சத்தையும் எளிதாக இனங்கண்டு அவற்றின் முக்கால போக்குகளையும் துல்லியமாக கூறும் வகையில் கொள்கைகள் பலவற்றை உண்டாக்கியுள்ள மனிதனின் அறிவு வளர்ச்சி என்பது அளப்பரியது தான். ஆயினும் இவ்வளர்ச்சிகள் மக்களின் மனதில் உண்டாக்கிய உவகையை மூடுமளவிற்கு பல உலகியல் திகில் சம்பவங்களும், பிரதேசங்களும்  இருப்பது என்பது மறக்கமுடியாத உண்மை. ஆனாலும் ஆய்வாளர்களின் விளக்கவுரைகள் உலகின் பல்வேறு சம்பவங்களுக்கும், அச்சம்பவங்களின் திகிலின் தரத்தை குறைப்பதற்குமான நியாயத்தை உண்டாக்குவதுமுண்டு. சிலவற்றிற்கு அது முடியாமல் போவதுமுண்டு. இவற்றில் உலகின் அறிவியல் மற்றும் இராணுவ வல்லாதிக்கத்தில் சிகரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவை அண்டிய பிரதேசத்தில் உள்ள பெர்முடா பேய் முக்கோணம் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. இப்பிரதேசம் தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள நான் அப்பகுதியின் மர்மங்களிற்கான எனது ம