நேரடி திகில் அனுபவங்கள்
இவ்வாறு காணாமல் போனோர் பற்றிய சம்பவங்கள் நூற்றுக்கணக்கான அளவில் நடந்துள்ளன. எந்தவொரு சம்பவத்தின் போதும் எதுவித தடயமும் கிடைக்கவில்லை என்பது தான் மேலும் திகிலூட்டும் செய்தி.
அடுத்ததாக பெர்முடா முக்கோணப்பகுதியில் பயணித்து சில வித்தியாசமான அனுபவங்களைப் பெற்று உயிர் தப்பிய சிலவற்றினுடைய அனுபவங்களைப் பார்த்து விட்டு நேரடியாக எனது ஆய்வினுள் நுழைகிறேன்.
VINCENT GRADDIS
காலம் :- 1944 இன் இறுதிப்பகுதி
பதவி :- யுத்த விமானி
பயணம் :- இத்தாலியை நோக்கி
தெரிவித்தவை:-
எனது குழுவில் சுமார் 7 விமானங்கள் இருந்தன.பெர்முடாவிலிருந்து 300 கடல் மைல் தொலைவில் இருந்த போது எங்களது விமானங்கள் எதிர்பாராத ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகின. ஆனால் வானிலை நன்றாகவே இருந்தது.
ஆனால் அந்த அதிர்ச்சியின் விளைவாக விமானம் தலைகீழாகவும் செங்குத்தாகவும் கீழ்நோக்கியும் பாயத் தொடங்கியது. நான் மிகவும் சிரமப்பட்டு விமானத்தின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி தளத்திற்கு காண்டு வந்து சேர்த்தேன். என்னுடன் மேலும் ஒரு விமானமும் வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் மற்றைய ஐந்து விமானங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. அவற்றினுடைய ரேடியோ தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை.
குறிப்பு
தொடரட்டும்.. அடுத்த பதிவை எப்போது இடுவீர்கள்???
ReplyDelete