Skip to main content

யார் ? இவர்கள் 01

முன்னுரை


ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள்



காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே இதுவரை நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்டு அச்சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்கொண்ட சவால்களையும் தெரிவித்து இனிவரும் காலங்களில் பறக்கும் தட்டுகள் தொடர்பாக ஏற்படக்கூடிய அனைத்து சம்பவங்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளத்தேவையான அறிவைப்பெற்றுக்கொடுப்பதே எனது ஆய்வின் முக்கிய நோக்கமாக காணப்படுகிறது.                            





ரவிகரன் ரணேந்திரன்
தரம்- 13 விஞ்ஞானப்பகுதி ( 2008 )
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
நீர்கொழும்பு.












பறக்கும் தட்டுகள் வேற்றுக்கிரக வாசிகள் ஆகிய பதங்களின் உண்மைத்தன்மை

உலகெங்கும் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்



உலகின் அனைத்து பாகங்களிலும் கிடைத்த முறைப்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது அர்த்தமற்றது என்றாலும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களின் கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமையானது உண்மை இருக்கலாமென காட்டுகிறது.



சில உதாரணங்கள்

பறக்கும் தட்டுகள்

1. 1998 / மார்ச்சு / 14, 15, 16

இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- மாலை 6.40 அளவில் தொடுவானத்தில் வெள்ளை நிறமான பிரகாசமான விளக்குகள் கொண்ட அடிப்பகுதி அகன்ற வட்டமும் மேற்பகுதி கூம்பியும் இருந்த தட்டுகள் பறந்து சென்றன. ( மிகவும் விரைவாக )



2. 1998 / மார்ச்சு / 17

இடம் :- குயின்ஸ்ராந்து கிங்காராய்

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- மாலை 6.30 அளவில் கறுப்பு நிறமான வெள்ளை விளக்குகள் கொண்ட வட்ட வடிவமான தட்டுக்கள் பறந்து சென்றன.



3. 1998 / மார்ச்சு / 23

இடம் :- பிந்தூன் மேற்கு ஆசியா

அவதானித்தவர் :- பிரதேச மக்கள் பலர்

கருத்து :- இரவு 9.45 மணிக்கு வெளிர் மஞ்சள் நிறமுடைய தட்டு ஒன்று சிவப்பு பச்சை விளக்குகளை கொண்டு பறந்தது.



4. 1998 / ஏப்ரல் / 23

இடம் :- மெல்போர்ன் அவுஸ்திரேலியா

அவதானித்தவர் :- பாப்வாட்டர் மேன்

கருத்து :- இரவு 7.30 மணிக்கு மொட்டை மாடியில் நின்று அளவளாவிக்கொண்டிருந்த போது பல வர்ண விளக்குகளைக்கொண்ட வட்டத்தட்டு ஒன்று மிக வேகமாக உரத்த சத்த்த்துடன் சென்றது.

குறிப்பு இதன் சத்த்த்தை பிரதேசவாசிகளும் கேட்டுள்ளனர்.



5. 1998 / ஏப்ரல் / 22

இடம் :- அவுஸ்திரேலியா

அவதானித்தவர் :- ஓய்வுபெற்ற விமானக்கப்டன்

கருத்து :- மாலை 6.40 இற்கு நடைப்பயிற்சியிலிருந்த போது மிகப்பெரிய வட்டவடிவமான ஒளிரும் பொருள் மிக வேகமாக எம்மைக்கடந்து சென்றது. இதன் ஒலி மிகவும் உரப்பு கூடியதாக இருந்தது.



6. 1998 / சித்திரை / 30

இடம் :- பண்டாரவளை தியத்தலாவை இலங்கை

அவதானித்தவர் :- பாடசாலை மாணவர்கள்

கருத்து :- அதிகாலை வேளையில் வட்ட வடிவமான தட்டு ஒன்று விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கியது. இது ஒளிரும் விளக்குகளை கொண்டிருந்தது.



7. 2000 / தை / 1

இடம் :- கண்டி குண்ணப்பன

அவதானித்தவர்கள் :- பல இளைஞர்கள்

கருத்து :- இரவு நேரத்தில் 300 அடி உயரத்தில் சிவப்பு நிற வட்டவடிவமான தட்டு வேகமாக பறந்தது.

பறக்கும் தட்டுக்களின் சில படங்கள்

தொடரும்......



Comments

  1. தங்களது ஈழத்தமிழும் ,அதை விஞ்ஞான விளக்கங்களில் கையாள்வதும் மிக அருமை.
    உங்களது ஆய்வு நோக்கு எனக்குள் ஒரு விதையை விதைத்துள்ளது.எனது ப்ளாக் ஸ்பாட்
    http://machamuni.blogspot.com/
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள் ஐயா.

    உங்களின் மீள்வருகையையும் பதிவுகள் மீதான விமர்சனங்கள் இடுதலையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...