Skip to main content

வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா? யார் ? இவர்கள் - 06

வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம்

1.ஆராய்ச்சி

நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது.

ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில்லை.



2. ஆக்கிரமிப்பு

2ம் உலகப்போரின்போது விமானப்படை விமானிகள் பறக்கும் போது ஒரு வினோத ஒளியால் ஆன எரிபந்துகளை (Glowing Balls) கண்டார்கள். அப்பந்துகள் விமானங்களைப்பின்தொடர்ந்ததைக் கண்டார்கள். விமானிகள் இவற்றை “Foo Fighters“ என்று குறிப்பிட்டனர்.

”Foo” என்றால் தீ என்று அர்த்தம் ஆகும். முதலில் கூட்டணிப்படைத்தளபதி இந்த ”Foo Fighters” ஜேர்மன் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் அல்லது கண்காணிப்புக்கருவிகளாக இருக்கலாம் என நம்பினார். ஆனால் போருக்குப்பிறகு தெரிந்தது என்னவெனில் ஜேர்மன் வீரர்களும் இத்தகைய எரிபந்துகளைக்கண்டனர். இவர்களும் இது அமெரிக்க அல்லது பிரிட்டன் கண்காணிப்பு கருவிகள் என நினைத்த்து தான் வேடிக்கை.

இச்சம்பவமானது அக்காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இதில் ஒரு வெற்றிகரமான முன்னேற்றத்தையும் அடையவில்லை.

இதன்காரணமாக மக்கள் மத்தியில் அயற்கிரகவாசிகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதுபோன்ற ஆயுதங்கள் ஒரு போரில் இருதரப்பாலும் அவதானிக்கப்பட்டமையானது இருதரப்பிற்குமிடையேயான முரண்பாடுகளை அதிகரிக்கச்செய்யும் உத்தியாகும். ஆகவே பூமியில் போர்நடந்து அதன்மூலம் அழிவுகள் தொடர்வதை விரும்பும் சக்தி ஒன்று வேற்றுக்கிரகத்தில் இயங்குகிறதா?

ஏற்கனவே இவ் ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவத்தை மீள ஆராய்வோம்.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி திடீரென கர்ப்பமுற்றது பின்னர் கர்ப்பம் திடீரென காணாமல் போனது போன்ற சம்பவங்களை ஆய்வின் தொடக்கத்தில் ஆராய்ந்தோம். அக்கர்ப்பம் மூலம் உண்டான அக்குழந்தை குறிப்பிட்ட வேற்றுக்கிரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதா? அல்லது இப்பூமியில் வேறு ஒரு இடத்தில் வளர்கிறதா? எம்மால் அறியப்பட்டது இந்த ஓர் சம்பவமே. இவ்வாறு எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளனவோ?

மனித குலத்தில் திடீர் திடீரென நிகழும் சில விசித்திர பிறப்புகளுக்கும் இச்சம்பவங்களுக்குமிடையே ஏதாவது தொடர்பு இருக்குமா? பூமியில் உள்ளோரிடம் நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கம் அவர்களிம் இருந்தால் மேற்கூறப்பட்டவற்றை ஏன் மர்மமான முறையில் மேற்கொள்ளவேண்டும்?

                                                               தொடரும்......

Comments

Popular posts from this blog

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...

“ Hague Rules, Hague-Visby and Hamburg Rules” Carrier Friendly or Shipper Friendly?

INTRODUCTION In ancient times, ship owners had extensive powers over the shippers and cargo owners. Ship owners managed to escape their liabilities by using these powers and the principle of freedom of contract during cargo damages. Therefore, The cargo owners were disappointed and the reliability of bills of lading was greatly affected. [1] This was the main reason to develop the Hague Rules 1924. Most of the maritime nations ratified Hague rules and still this is in force. These rules apportioned responsibility for the safe delivery of the cargo between shipper, carrier and receiver and denied these parties, particularly the carrier, and the ability to contract out minimum levels of responsibilities.    The international traders were under impression that Hague rules are more ship owner friendly and therefore, in 1968 amendments to the Hague rules were brought up and these are known as Hague-Visby rules. [2] Again, in response to shipper’s complaints th...

போதைப்பொருள் துஸ்பிரயோகமும் அதன் பாதிப்புகளும்-06

                             இன்று 60 வகையான கொடூர நோய்களுக்கு மதுபானமே காரணியாக காணப்படுகிறது. மொத்த நோய்களில் மதுபானத்தின் மூலமாக ஏற்படும் நோய் வீதம் 4 ஆக உள்ளது. மதுபானம் அருந்துபவர்கள் தம்மை அறியாமலே பல்வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள். குடித்துவிட்டு வாகனத்தை வேகமாக ஓட்டுவதால் சாலை விபத்துக்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, பக்கவாதம், வாய் - கல்லீரல் - மற்றும் மார்பு சார்ந்த புற்றுநோய்கள் போன்றவை மதுபானம் பருகுவதாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு போதைப்பொருட்களை நுகர்வோர் மீண்டும் மீண்டும் நுகர ஆசை கொண்டு திருட பிச்சை எடுக்க கொலை - கொள்ளை போன்ற செயல்களை செய்யக்கூட தயங்காமல் இருப்பார்கள். இவ்வாறு போதைப்பொருட்களுக்கு இலக்காவதன் மூலம் அற்புத கலைத்திறன், அனுபவ அறிவு, புத்திசாலித்தனம், சுயகௌரவம், பாசப்பிணைப்பு, நம்பிக்கைகள் என அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள்.          ...