பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. அப்போது பறக்கும் தட்டுகள் வானில் பறந்தது உண்மைதான் என்று தகவல் வெளியானது.
இங்கு பெறப்பட்ட அவ்வுலோகமானது மிகவும் நிறைகுறைந்ததாகவும் ஆனால் மிகவும் உறுதி கூடியதாகவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுலோக இயல்பு பூமியில் உள்ள உலோகங்களின் இயல்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆனாலும் உடனடியாக ஏற்பட்ட பரபரப்பையும் பதற்றத்தையும் தணிப்பதாக அரசு கூறிய கருத்து
“ விமானப்படையினர் தட்பவெப்பநிலை மாற்றங்களை அறிய அனுப்பிய வானிலை ஆய்வு பலூன் தான் தரையில் வீழ்ந்து நொருங்கியது ’’
மேற்கூறப்பட்ட அனைத்து சாத்தியப்பாடுகளுக்குமான சில உதாரணசம்பவங்களை அடுத்து நோக்குவோம்.
ஆண்டு :- 2006
இடம் :- இலங்கை (தேவேந்திரமுனையை அண்டிய கிராமம்)
இப்பிரதேசத்தில் சில வேற்றுக்கிரகவாசிகளை அவதானித்து பின்தொடர்ந்த கிராமவாசிகள் வேற்றுக்கிரகவாசிகள் தம்மை திரும்பிப்பார்த்த போது தாம் மயக்கமுற்றதாக கூறினர்.
இச்சம்பவம் வேற்றுக்கிரகவாசிகளின் உயர் ஆற்றலை பரிணாம வளர்ச்சி காரணமாக கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
(பூமியிலுள்ளோரின் மொழியில் கூறினால் மந்திரம், மாயம்)
2.பல சந்தர்ப்பங்களின் போதும் மக்களால் வேற்றுக்கிரகவாசிகள் பின் தொடரப்பட்டபோது அவர்கள் திடீரென மறைந்து போனமை.
இச்சம்பவங்கள் வேறுபட்ட பரிமாணங்கள் ஊடாக இயங்கும் தகவைக் கொண்டிருக்ககூடும் என்ற ஐயப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் அவர்கள் சூழலுக்கேற்ப உடலமைப்பை மாற்றுகின்ற திறனைக்கொண்டிருக்க்க் கூடும் என்பதற்கும் வலுச்சேர்க்கிறது.
அவர்கள் திடீரென மாயமாக மறைவதும் பறக்கும் தட்டுக்கள் பூமியின் அதியுயர் தொழில்நுட்பக்கருவிகளில் சிக்காமையும்.
இச்சம்பவங்கள் குறிப்பிட்ட வேற்றுக்கிரக வாசிகள் பயன்படுத்தும் மூலகங்கள், பொருட்கள் ஒளியை உறிஞ்சும் தகவுடையதாக இருக்கலாம் என்கிற கருத்தை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பு :- ஒரு பொருளானது பூமியிலுள்ளோரின் பார்வைப்புலத்தால் உணரப்பட வேண்டுமானால் அப்பொருளில் பட்டுத்தெறிக்கும் ஒளிக்கதிர் எம் கண்ணை அடைய வேண்டும். தெறிப்பு நடைபெறாமலோ அல்லது தெறித்த கதிர் எம் கண்ணை அடையாவிட்டாலோ எம்மால் அப்பொருளை அவதானிக்கமுடியாது.
ஆகவே ஒளியை உறிஞ்சக்கூடிய பொருட்கள் இல்லாவிடினும் குறிப்பிட்ட வேற்றுக்கிரக வாசிகள் தெறித்த ஒளியை திசைதிருப்பக்கூடிய ஆற்றலையாவது கொண்டிருக்கலாம்.
ஏற்கனவே அவதானிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வேற்றுக்கிரகவாசிகள் தாம் பின்தொடரப்படுவதை விரும்பவில்லை. இச்சந்தர்ப்பங்களில் அவர்கள் பின்தொடர்ந்தவர்களை தமது விசித்திரமான இயலுமைகள் மூலம் மயங்கச்செய்துள்ளனர். எனவே இச்சம்பவங்கள் மூலம் அவர்களின் நோக்கம் எமக்கு சாதகமானதாக இருக்காது என்றே எண்ணத்தோன்றுகிறது.
அப்படியென்றால் ஏன் அவர்கள் எமது கிரகத்தில் இன்னும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தத்தொடங்கவில்லை? என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது.
1. நாம் வேறு கிரகங்களை ஆய்வுசெய்ய முயற்சி செய்வது போல் அவர்களும் தமது ஆய்வின் ஒரு பகுதியாக எமது கிரகத்திற்கு வருகைதரக்கூடும்.
2. மாறாக ஆக்கிரமிப்பு நோக்கத்தை கொண்டிருப்பின் தமது உளவு நடவடிக்கைகளை முடிக்காமலேயே இங்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்த விரும்பாமல் இருக்க்க்கூடும்.
3. ஏற்கனவே இப்பூமியில் இடம்பெறும் மர்ம உயிரிழப்புக்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.
4. எம்மீது அழிவுகளை ஏற்படுத்தாது எதிர்காலத்தில் எம்மை முழுமையாக தமது அடிமைகளாக மாற்றுவதற்குரிய திட்டங்கள் தற்போது அரங்கேறிக்கொண்டிருகக்கூடும்.
அடுத்து மேற்கூறப்பட்ட ஒவ்வோர் சாத்தியப்பாடுகளையும் ஆராய்வோம்.....

தொடரும்........
ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html
ReplyDeleteஅதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு....
ReplyDeleteமேலே குறிப்பி்ட்ட விடயம் சார்பான விமர்சனங்கள் இடப்படுவது விரும்பத்தக்கது.
நண்பரே, உங்களுடைய பதிவுகளில் பலவற்றை இன்றுதான் வாசித்தேன்... அருமை.. நானும், நீங்கள் ஏதோ அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எனவே எண்ணியிருந்தேன். தற்போதுதான் தெரிந்தது நீங்கள் ஒரு உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர் என்று. என்னால் நம்பமுடியவில்லை... உங்கள் எழுத்துக்களில் ஒரு முதிர்ச்சியும் உங்கள் கருத்துக்களை தயங்காமல் முன்வைக்கும் துணிவும் காணக்கிடைக்கின்றன.. தற்போது எனக்குத் தெரிந்த தமிழ் அறிவியல் வலைப்பதிவர்களில் ஜெயபாரதன் ஐயாவிற்கு அடுத்த மிகச்சிறந்த பதிவராக உங்ககளைக் காண்கிறேன். இவ்வளவு சிறந்த அறிவியல் எழுத்தாளர் எனது நாட்டினராக இருப்பதில் மிகவும் பெருமிதமாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..
ReplyDeleteநண்பரே, மாய ராஜ்ஜியம் ஆய்வின் உங்கள் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை.. எனது பின்வரும் கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும்.
ReplyDelete1. நீங்கள் மாய ராஜ்ஜியம் 19 இல் // நான் ஏற்கனவே குறிப்ப்பிட்டுள்ளதன் படி அண்ட வெளியில் பல்வேறு இடங்கள் இவ்வாறு காணப்படுகின்றன. அவை அவ்வாறு அங்கே ஏன் தோற்றம் பெறுகின்றன என்று இதுவலை எமது விஞ்ஞான வளர்ச்சிகளால் அறியப்படவில்லை.// என்று கூறியிருந்தீர்கள். ஆனால் அது உண்மையல்ல. ஒரு கருந்துளை உருவாக வேண்டுமானால் மிகப்பெரிய திணிவு ஒன்று மிகச் சிறிய புள்ளியொன்றில் அடக்கப்படல் வேண்டும் என்பது தாங்கள் அறிந்ததே. எனவே ஒரு பெருந்திணிவு நட்சத்திரத்தின் (Massive Star) இறப்புக்குப் பின்னர், தனது சொந்த நிறையால் ஏற்பட்ட ஈர்ப்புவிசையால் தனது சொந்த திணிவையே சில நொடி நேரத்தில் உள்ளிழுக்க முயன்று, அதில் சில வாயுக்கள் தப்பி விரிவடைந்து சூப்பர் நோவா (Super Nova) எனும் நிலையை அடையும் அதேவேளை, எஞ்சிய மாபெரும் திணிவு ஒரு புள்ளியில் அடக்கப்பட்டு, அதில் உருவாகும் மாபெரும் அடர்த்தியால், காலவெளி புனல் வடிவில் உள்நோக்கி வளைக்கப்படும் போதே பிரபஞ்சத்தின் மாபெரும் கருந்துளைகள் உருவாகின்றன. என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டு சில வருடங்கள் கடந்துவிட்டன.
பூமியின் உள்ளே (பெர்முடா முக்கோணத்தின் உள்ளே) ஒரு கருந்துளை அமைந்திருக்கலாம் என தாங்கள் கருதுகிறீர்கள். நமது சூரியன் ஒரு சிறிய நட்சத்திரமே (Main Sequence Star). நமது சூரியன் இறக்கும்போது அதனால் கருந்துளையாக மாற முடியாது. அதற்கு வேண்டிய திணிவும், ஈர்ப்புசக்தியும் சூரியனிடத்தில் இல்லை. எனவே உண்மையில் பூமியின் உள்ளே ஒரு கருந்துளை காணப்படுமாயின் நம் சூரியன் இந்நேரம் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும்! அல்லது பூமியால் விழுங்கப்பட்டிருக்கும். தற்போது பூமியின் அண்ணளவான நிறை 5.9742 × 1024 kg ஆகும் (Wikipedia). இந்நிறை நிச்சயமாக ஒரு கருந்துளையின் உருவாக்கத்திற்கு போதாது. ஒருவேளை ஏற்கனவே கருந்துளையோன்று உருவாகி பூமியினுள் அடக்கப்பட்டிருந்தால் பூமியின் நிறை நிச்சயமாக இன்னும் பல கோடி மடங்கு அதிகரித்திருக்கும்.
2.அடுத்தது ஒரு கருந்துளையின் ஈர்ப்புசக்தி எவ்வாறானது என தாங்களே கூறியிருக்கிறீர்கள். ஒளிகூட அவ்வித ஈர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. (சார்புக்கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தில் நிறையுள்ள எப்பொருளும் ஒளியை விட வேகமாக பயணித்தல் இயலாது. எனவே பிரபஞ்சத்தின் நிறையுள்ள எப்பொருளும் ஒரு கருந்துளையிலிருந்து தப்பிக்கவோ, கடும் பாதிப்புக்கு உள்ளாகாமல் வெளியேறவோ இயலாது.) எனினும் இன்னும் நாங்கள் இப்பூமி மீது வாழ்ந்து வருகின்றோம். எங்கள்மீது இப்பூமி சிறியளவு ஈர்ப்புசக்தியையே பிரயோகிக்கிறது. இந்நிலையில் பூமியினுள் கருந்துளையொன்று அமைந்திருத்தல் இயலாத காரியம்.
மீதி அடுத்த பின்னூட்டத்தில்...
3.அடுத்தது நிகழ்வெல்லை பற்றியது. தாங்கள் மாய ராஜ்ஜியம் 19 இல் //அங்கே தோற்றம் பெறுகின்ற கருந்துளையினுடைய நிகழ்வெல்லை மற்றும் அதற்கு வெளியே இருந்த போது தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. நிகழ்வெல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் அவர்கள் கருந்துளை உருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அனுபவித்திருக்க கூடியதாக உள்ளது. அவ்வெல்லையின் உள்ளே நுழைந்த போது ஏற்பட்ட அதியுயர் சுழற்சி வேகம் கொண்ட மிகை சுழற்சியின் கரணமாக மின்காந்த அலைகளின் தொடர்பினை பெறமுடியாது. அதையும் விட அவ்வுயர் வேகம் காரணமாக அவர்கள் உயிரிழந்திருப்பார்கள்.// எனக் கூறியிருந்தீர்கள்.
ReplyDeleteமின்காந்த அலைகளின் வேகத்தைவிட மிஞ்சிய விடுதலை வேகத்தைகொண்ட ஒரு பொருளின் நிகழ்வெல்லையானது, அப்பொருளுக்கு வெளியேயோ, உள்ளேயோ அமைந்திருக்கும் பட்சத்தில், அப்பொருளின் ஈர்ப்பு எல்லையானது, பல ஒளியாண்டுகள் தூரத்திற்கு விரவிக் காணப்படும். (நிஜக் கருந்துளைகள் பல ஒளியாண்டுகள் தூரத்தில் வலம் வரும் நட்சத்திரங்களையும் அடக்கி தம்மைச் சுற்ற வைப்பது தாங்கள் அறிந்ததே) ஆனால் பூமியின் ஈர்ப்பு எல்லையானது, 55 million km தூரம் வரைகூட செல்லவில்லை என்பதை அறிவியல் நிரூபித்திருக்கிறது. (அப்படி 55 Million km க்கு மேல் பரவிக் காணப்படுமாயின், செவ்வாய் தற்போது நம்மைச் சுற்றியபடி இருக்கும்!) (அது மட்டுமன்றி சூழவுள்ள நாடுகளும் கருந்துளையுள்ளே ஈர்க்கப்படிருக்கும்!) எனவே பூமியினுள் கருந்துளையொன்று காணப்படுதல் சாத்தியமற்றதாகும் என்பதே எனது கருத்து.
4. அடுத்து, மாய ராஜ்ஜியம் 19 இல், கருந்துளைகள் பெர்முடா முக்கோணத்தில் உருவாகி உருவாகி அழிகின்றன என குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு கருந்துளை உருவாக்கத்திற்கு மாபெருந் திணிவொன்று ஓரிடத்தில் சேரல் அவசியம். சூரிய மண்டலத்தின் மொத்தத் திணிவும் ஒன்று சேர்ந்தால் கூட கருந்துளை உருவாக்கத்திற்கு போதாது. அதுமட்டுமன்றி பூமியின் திணிவு வெறும் 5.9742 × 1024 kg ஆகும் (Wikipedia). எனவே அவ்வளவு வேகமாக கருந்துளைகள் உருவாதலும் அழிதலும் சூரிய குடும்பத்திலோ, பூமியிலோ இயலாத காரியம்.
நண்பரே, தயவு செய்து மேலுள்ள எனது கருத்துக்களுக்கு தங்கள் பதில் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
மிக்க நன்றி.
நண்பரே...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் தெளிவான, நீண்ட பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.
தங்களின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகள் விரைவில் “மாய ராஜ்ஜியம் 20“ எனும் பதிவு மூலம் உண்மையின் பக்கத்தில் வலம்வரும்.
மிக்க நன்றி நண்பரே, உங்கள் பதில்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநல்ல பதிவு கோகுல்ராஜ்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சின்னதொரு கருத்து பிடித்தி இருந்தால் செய்யுங்கள்...
பதிவுகளை இடும் போது... அந்த அந்த பதிவில் நீங்கள் பகிரும் விடையங்கள் பற்றிய முக்கிய கருவை தலைப்பாக இட்டால் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. ( "யார் இவர்கள்" எனதை அடைப்புக்குறிக்குள் இடலாமே) ஏனென்றால், இவ்வாறான பதிவுகள் பிரபலமடையாமல் போவது ஏற்றுக்கொள்ள
முடியவில்லை...
இன்னும் எதிர்பார்க்கிறோம்...
நன்றிகள் நண்பரே!!!
ReplyDeleteஉங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கணும்!!!