Skip to main content

பனாமா கால்வாய் 06

பனாமா கால்வாயின் தோற்றத்தினை நோக்கும் போது அதில் செயற்கையாக அமைக்கப்பட்ட கட்டூன் வாவியும் குறிப்பிட்டதொரு இடத்தை வகிக்கிறது. சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீரினை மையப்படுத்தி கட்டூன் வாவி அமைக்கப்பட்டது. காலம் செல்லச்செல்ல சாகிறஸ் ஆற்றிலிருந்து வரும் நீர் கட்டூன் அணைக்கட்டு மூலமாக சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது நாளடைவில் அணைக்கட்டினை அண்டி ஆறு மூலமாக மண்ணும் அடித்து வரப்பட்டு அணைக்கட்டினை அண்டிய பிரதேசத்தில் விடப்படுவதால் ஆணைக்கட்டின் பலமும் அதிகரிக்கப்பட்டது. 1.5 மைல் தூரம் நீளமும் அடிப்பரப்பில் அண்ணளவாக 0.5 மைல் தூரம் அகலமுமாக அமைக்கப்பட்டது. நீளத்தின் வழியே இருவேறுபட்ட சுவர்களுக்கு இடையிலானதாக மேற்படி வாவி அமையும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தத்து. மேலும் மேற்படி சுவர்களின் மேற்பரப்பு ஒருவகையான கிளேயினால் உருவாக்கப்பட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல கிளேயும் காய்ந்து கடினமானதாக மாறி கட்டூனின் அணைக்கட்டு மென்மேலும் உறுதியாகியது. இந்த அணைக்கட்டானது அண்ணளவாக 16.9 மில்லியன் கனமீட்டர் அளவு மண்ணாலும் ( மலையின் பகுதி ) கிளேயினாலும் உருவாக்கப்பட்டதாகும். மற்றும் பனாமா கால்வாயின் மொத்த அளவுடன் ஒப்பிடும் போது மேற்கூறப்பட்ட அணைக்கட்டு மாத்திரம் 1/10 பகுதியாகும்.


கட்டூன் பகுதியில் உள்ள அணைக்கட்டுடன் ஒப்பிடும் போது பெட்ரோ மிகுவெல் மற்றும் மெறாஃப்ளோர் போன்ற பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் மிகவும் சிறியனவாகும்.

பனாமா கால்வாயினூடான ஓர் பயணம்.

பனாமாவினை அண்டியதான அத்திலாந்திக் கடலோரத்தில் இருந்து லைமன் விரிகுடாவை அணுகும் கப்பல்கள் அதனூடாக சுமார் 7மைல் தூரம் பயணம் செய்து பின்னர் அதன் வழியே தொடர்ந்து 11 மைல் தூரம் கடல் பயணத்தினை மேற்கொள்ளும் போது கட்டூன் பகுதிக்கு கப்பல்கள் கொண்டு வரப்படுகின்றன. இரவு நேரத்தில் பொன் எழில் கொஞ்சும் பகுதியாக விளங்கும் இப்பகுதியில் தொடராக மூன்று பாரிய தொட்டிகள் பல்வேறு உயரமட்டங்களில் நீர்மட்டத்தினை கொண்டதாக காணப்படுகின்றன. முதலாவது தொட்டியினுள் முற்றுமுழுதாக கப்பலானது பிரவேசித்தபின்னர் அவற்றிற்குரிய கதவுகள் அடைக்கப்பட்டு நீர்பாய்ச்சப்படும். நீர்பாய்ச்சப்படுவதன் மூலம் கப்பல் மேலெழும். ( தொட்டியினுள்ளேயே ). இரண்டாவது தொட்டியின் நீர்மட்டத்தின் அளவிற்கு முதலாவது தொட்டியின் நீர்மட்டம் வரும் வரை நீர்பாய்ச்சப்பட்டு பின்னர் முதலாவது தொட்டியின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இரண்டாவது தொட்டியினுள் செலுத்தப்படும். (இந்நிலையில் முதல் தொட்டியின் நீர்மட்டமும் இரண்டாவது தொட்டியின் நீர்மட்டமும் சம அளவில் உள்ளதால் கப்பல் இரண்டாவது தொட்டியினுள் செலுத்தப்படுவதற்கு பாரிய இடர்பாடுகள் இராது. மீண்டும் இரண்டாவது தொட்டியினுள் கப்பலானது பிரவேசித்த பின்னர் கதவுகள் அடைக்கப்பட்டு நீர்பாய்ச்சப்பட்டு மூன்றாவது தொட்டியின் நீர்மட்டத்தை அடைந்ததும் இரண்டாம் தொட்டியின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு மூன்றாவது தொட்டியினுள் செலுத்தப்படும். இதிலிருந்து மீண்டும் நீர்பாய்ச்சும் செயன்முறை இடம்பெற்று கட்டூன் வாவியினுள் செலுத்தப்படும். இதிலிருந்து 32மைல் அளவிலான தூரம் மேற்படி வாவியினுடாக பயணித்து கப்பல்கள் கம்போவா எனும் இடத்தை அடைகின்றன. அதிலிருந்து படிப்படியாக முன்று கட்டுக்கள் மூலம் இரண்டு தொட்டிகளினூடாக படிப்படியாக நீர்மட்டம் குறைக்கப்படுவதன் மூலம் கடல் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு பசுபிக் கடலை அடைகின்றன. சுமார் 51 மைல் தூர பயணம் இவ்வாறே நிறைவடைகிறது.




























மேலும் பிரமாண்ட அமைப்பில் காணப்படும் கதவுகளை திறப்பதற்கும் மீண்டும் பூட்டுவதற்கும் அணைக்கட்டுகளில் நீர் தேக்கி வைப்பதன் மூலம் பெறப்பட்ட மின்சாரம் காரணமாகிறது. மற்றும் கட்டூன் பகுதிக்கு வரும் கப்பல்களுடன் கழுதை எஞ்சின்கள் (MULE ENGINES) கப்பலுடன் பொருத்தப்பட்டு அவை மூலம் தொட்டிகளில் ஏற்றும் வரையும் பின்னர் ஈற்றில் தொட்டிகளிலிருந்து இறக்கும் வரையும் கப்பல்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இச்செயன்முறையில் மேற்படி எஞ்சின்களுக்கு தேவையான மின்சாரமும் அணைக்கட்டுக்களில் இருந்தே பெறப்படுகின்றது.

தற்காலத்தை நோக்குவோமெனில் பனாமா கால்வாயில் தினம் தினம் பல கப்பல்கள் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. மற்றும் நாளுக்கு நாள் கப்பல் உருவாக்கத்திலும் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பாரிய அளவுடைய கப்பல்கள் உருவாக்கம் பனாமா கால்வாயினூடு செல்வது சாத்தியமற்றதாக காணப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் அத்திலாந்திக் கடலையும் பசுபிக் கடலையும் இணைக்கும் விதமாக வேறு செயற்கைக்கால்வாய்கள் அமைக்கப்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அது நடக்காத பட்சத்தில் தற்போது பயன்படுத்தப்படும் பனாமா கால்வாயின் தோற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி (அகலம், ஆழம் என்பவற்றை கூட்டுதல் ) அதன்மூலம் ஆரோக்கியமான கப்பல் பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

பனாமாக்கால்வாய் சார்ந்ததாக சுமார் 14000 மனிதர்கள் வேலை புரிவது மட்டுமல்லாது அதிலும் 4000 பேர் பனாமா குடியரசினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கால்வாய் மூலமாக பிரதான வருவாயை ஈட்டிவரும் பனாமா குடியரசு எதிர்காலத்தில் அனைத்துவிதமான கப்பல்களும் செல்லக்கூடிய விதத்தில் கால்வாயை மாற்றியமைக்குமா இல்லையா என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வியாக இருந்தாலும் பனாமா கால்வாயின் அவசியம் காலம் காலமாக  உணரப்படும் என்பது திண்ணமே…….

முற்றும்.......

Comments

  1. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட பனாமா கால்வாயின் புகைப்படங்கள் அனைத்தும் எனது சகோதரர் (ரவிகரன் பானுகோபன்) அவர்களால் நேரடியாக (பனாமா கால்வாயினூடான பயணத்தின் போது) எடுக்கப்பட்ட படங்கள் ஆகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...