Skip to main content

பேய் என்று யார் சொன்னது? (மாய இராஜ்ஜியம் - 21)

இந்தப்பதிப்பும் வாசகர்களின் சந்தேகங்களுக்கான எனது கருத்துகளாக வெளிவருகிறது.....

நிச்சயமாக கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்குட்பட்ட ஒளியின் வேகத்திலும் பார்க்க விடுதலை வேகம் குறைந்த துணிக்கைகளை உள்ளெடுக்கும். மேலும் பெர்முடா முக்கோணத்தில் கருந்துளைகளின் உருவாக்கம் ஒன்றோ பலவோ நிகழ்கின்றபோது அது அல்லது அவை தமது நிகழ்வெல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற நீர் உள்ளிட்ட பதார்த்தங்களை நிச்சயமாக உள்ளெடுக்கும். இவ் உள்ளெடுக்கும் நிகழ்வானது கருந்துளையினுடைய ஆயுள் நீடிப்பு வரை நிகழும். பூமியில் நீரின் இராட்சத அளவு நீங்கள் அறிந்ததே. பெர்முடா முக்கோணத்தில் கருந்துளை உருவாக்கம் அல்லது உருவாக்கங்கள் மிகச்சிறிய பரப்பளவுள்ள பகுதியில் தோன்றுகின்ற போது, அங்கே உள்ளிழுக்கப்படுகின்ற நீரின் அளவானது ஒட்டுமொத்த உலகின் நீருடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவானதே. நீரானது பாய்ம இயல்பை தாராளமாகவே கொண்டிருக்கின்ற ஒரு திரவம். அங்கே குறைவாக்கம் ஏற்படுகின்ற நீரின் அளவானது மிக விரைவாக மீள்நிரப்பாக்கம் செய்யப்பட்டுவிடும். இன்னும் சொல்லப்போனால் ஒரு ஏரியில் நாம் ஒரு குவளை நீரை அள்ளுவதால் அவ்வேரிக்கு ஏற்படுகின்ற நீரிழப்பின் தோற்றப்பாடு எவ்வாறு வெளித்தெரியாமல் இருக்கின்றதோ அவ்வாறே இதுவும்.




அடுத்து இவ்வாறு உள்ளிழுக்கப்படுகின்ற நீர் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பான விடயத்திற்கு வருகின்றேன். அண்டவெளியில் எங்கும் வியாபித்திருக்கின்ற கருந்துளைகளால் உள்ளிழுக்கப்படுகின்ற பதார்த்தங்கள் மற்றும் கதிர்ப்புக்கள் ஆகியவற்றிற்கு நடைபெறும் விளைவை ஹவ்கிங் அவர்களுடைய கருத்துக்களின் படி பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹவ்கிங் வெப்பக்கதிர்ப்புக்கள் மூலமாக கூறியிருந்தேன். இது பற்றி மேலும் விளக்குகையில், இவ்வாறு கருந்துளைகளால் வெளியிடப்படுகின்ற கதிர்ப்புக்கள் இது வரை வெற்றிகரமாக அவதானிக்கப்படவில்லை என்பதுவும் அதற்கான காரணங்களாக கருந்துளைகளின் அமைவிடங்களின் பூமியிலிருந்தான மிகவும் அதிகூடிய தூரமும் இதன் விளைவாக ஏற்படும் செறிவிழப்பினால் அது அடையும் பலவீனத்தன்மையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பிரபஞ்சத்தில் மிகவும் இராட்சத அளவில் திணிவை உள்ளடக்கியிருக்கும் பல கருந்துளைகள் இருந்தும் அவற்றின் விளைவாக மேற்குறிப்பிட்ட கதிர்ப்புக்களைப்பெறமுடியாமை அக்கதிர்ப்புக்களின் செறிவிழப்பு தூரத்துடன் மிகவும் அதிகளவில் ஏற்படுவதை உணர்த்தி நிற்கின்றது. இது சாதனங்களில் பதியப்படத்தக்க சமிக்ஞையின் பருமனை விட குறைவான பருமனுடைய கதிர்ப்புக்களின் நிலவுகையை காட்டிநிற்கின்றது. மிகப்பாரிய திணிவைக்கொண்ட கருந்துளைகளின் கதிர்ப்புக்களுக்கே இவ்வாறான சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி நிற்கின்றபோது, பெர்முடா முக்கோணத்தில் தோன்றுகின்ற மிகச்சிறிய கருந்துளைகளின் கதிர்ப்புக்களின் செறிவிழப்புக்கள் தூரத்துடன் அதிகளவில் ஏற்படுகின்ற போது எமது சாதனங்களால் நிச்சயமாக பதிவுகொள்ளப்படும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதையும் தாண்டி ஹவ்கிங் இனுடைய கதிர்ப்புக்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்பில் இன்னும் நீண்ட தூரத்திற்கு எமது விஞ்ஞான உலகம் பயணம் செய்யவேண்டியுள்ளது . அவை தொடர்பான ஆராய்ச்சிகளின் நிறைவான முடிவே அக்கதிர்ப்புக்கள் தொடர்பாகவும் சமகாலத்தில் எமது கருவிகள் அக்கதிர்ப்புக்களை பதிவு செய்யும் ஆற்றலில் எவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தைக்கொண்டு காணப்படுகின்றன என்பது பற்றியும் கூறமுடியும். எனினும் தற்போது நான் எனது முடிவாக குறிப்பிடுவது யாதெனில் கருந்துளைகளின் காலவெளிச்சாய்வு என்கின்ற பண்பின் விளைவாக ஏற்படும் கதிர்ப்புக்கள் வெளியில் அவதானிக்கப்படமுடியாமல் போதல் மற்றும் கதிர்ப்புக்களில் ஏற்படுகின்ற பாரிய செறிவிழப்புக்கள் ஆகியவையே பெர்முடா முக்கோணத்தில் கதிர்ப்புக்களின் விளைவாக மக்களின் பாதிப்பின்மை அல்லது மிகவும் புறக்கணிக்கக் கூடியளவிற்கான பாதிப்பு மற்றும் எமது சாதனங்களால் கதிர்ப்புக்கள் பதிவு செய்யப்படமுடியாமல் போதல் ஆகியவற்றிற்கான காரணங்களாகும்.

அடுத்து பெர்முடா முக்கோணப்பகுதியில் ஏற்படுகின்ற படகுகள் மட்டும் இருக்க மனிதர்கள் உள்ளிட்ட நிறைகுறைவான பொருட்கள் உள்ளெடுக்கப்படல் நிகழ்வினைப்பற்றி எனது முடிவில் விளக்கியிருந்தேன். இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் நண்பர் தனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டதன்படி நான் எனது ஆய்வின் எந்த ஒரு கட்டத்திலும் இந்நிகழ்வு நிகழ்வெல்லைக்கு உள்ளே இடம்பெறுவதாக தெரிவிக்கவில்லை. நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ளபோது நடைபெறுவதாகவே கூறினேன். சில கருந்துளைகளின் பண்பானது நிகழ்வெல்லையையும் தாண்டி பல நட்சத்திரங்களில் இருந்து நிறைகுறைவான வாயுக்கள் மற்றும் சடப்பொருட்களை உள்ளெடுக்கப்படத்தக்கவாறு அமைந்துள்ளது தாங்கள் அறிந்ததே.



இது பற்றி மேலும் குறிப்பிடுகையில் , கருந்துளைகளானவை தமது நிகழ்வெல்லையையும் தாண்டி ஈர்ப்பெல்லைக்குட்பட்ட அயல் நட்சத்திரங்களிலிருந்தும் அருகிலுள்ள நட்சத்திரகூட்டங்களுக்கும் பால்வீதிகளுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படக்கூடிய சடத்துவப்பொருட்கள், வாயுக்கள் மற்றும் கதிர்ப்புக்கள் ஆகியவற்றையும் கவர்ந்திழுக்கக்கூடியவை. இவ்வாறான ஈர்ப்புக்குள்ளாகும் பதார்த்தங்கள் தாம் சார்ந்திருக்கின்ற ஈர்ப்பு மற்றும் ஏனைய புலங்களின் விசையின் பருமனை விட கருந்துளையால் ஆட்படுகின்ற ஈர்ப்புவிசையின் அளவு அதிகரிக்கின்ற போது கருந்துளை நோக்கி அசைய ஆரம்பிக்கின்றன. பின்பு இவை கோண உந்தத்தின் விளைவாக கருந்துளையைச்சுற்றி தட்டுப்போன்ற வடிவத்தில் சுற்றுகைக்குள்ளாகின்றன. ஆயினும் வேறுபட்ட பருமனுடைய உராய்வு விசைகளை அனுபவிக்க வேண்டி ஏற்படுகின்ற சடத்துவப்பொருட்கள் தமது கோண உந்தத்தினை இழந்து கருந்துளையின் நிகழ்வெல்லையினுள் நுழைந்து , கருந்துளையின் திணிவு அதிகரிப்பிற்கு காரணமாகி கருந்துளை வளர்தல் எனும் நிகழ்விற்கு வழிகோலுகின்றன. இது போன்றே இங்கு ஏற்படுகின்ற மனிதர்கள் உள்ளிட்ட நிறைகுறைவான பொருட்களின் உள்ளெடுப்பும் சாத்தியமாகின்றது. இது அவ்விடத்தில் கருந்துளைகளின் ஈர்ப்பானது மனிதர்கள் உள்ளிட்ட நிறைகுறைவான பொருட்களை இழுப்பதற்குப் போதுமானதாக உள்ளமையால் ஏற்படும் விளைவாக நான் கூறுகின்றேன். இதையே மனிதர்கள் மற்றும் ஏனைய நிறைகுறைந்த பொருட்கள் காணாமல் போவதற்கான காரணங்களாக நான் முன்வைக்கிறேன்.ஆயினும் நிறை குறைவான பொருட்களும் இருக்க மனிதர்கள் மட்டும் காணாமல் போவது போன்று கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மங்களை அதிகப்படுத்துவதற்காக கூறப்படுகின்ற தனிமனித கருத்துகளாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட சம்பவங்களிற்கான காரணத்தை பெர்முடா முக்கோணம் பால் திருப்பிவிட்டு மர்மமாக்க முயற்சிப்பதன் விளைவாகவோ இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

Comments

  1. நன்றி நண்பரே, இப்போது புரிந்தது.

    ReplyDelete
  2. http://unmayinpakkam.blogspot.com/2010/05/20.html

    மேலுள்ள தொடர்பினை அணுகுவதன் மூலம் மேற்படி பதிப்பிற்கான வாசகர்களது சந்தேகங்களை அறியலாம்.

    ReplyDelete
  3. SUPER!!!!! My Brother.WELL DONE..

    "BEHIND A MYSTERY LIES A SECRET.BEHIND THE SECRET LIES A GREAT INVENTION"

    ReplyDelete
  4. is it possible to remove a stuff from a closed room by the force due to a black hole(as u explained)?
    as per the equation e=mc^2, the whole amount of mass absorbed by the black hole has to be converted into any form of energy(befor the black hole desolved., otherwise it has to be growing). wat happened to that energy?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...