Skip to main content

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது.

இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது.

அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.


என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.

 
1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது.

மேலும் விளக்குகையில்,

விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் பால்வீதிகள், அவை கொண்டுள்ள நட்சத்திரக்கூட்டங்களின் பிரபஞ்சம் சார்ந்தும் மற்றும் சாராமலும் வெளிக்காட்டும் அசைவுகள், விலகிப்போதல்கள் போன்ற நிகழ்வுகளுக்கிடையில் காணப்படுகின்ற பாரிய வேக வேறுபாடுகளின் விளைவாக உருவானதாக கருதப்படும் காலத்தால் வேறுபட்ட அண்டவெளியில் காணப்படும் இடங்களுக்கான வேறுபட்ட காரணங்களின் சாத்தியம் பற்றிய ஆய்வுகள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இதையே நான் "அண்டவெளியில் இவ்வாறான இடங்கள் காணப்படுகின்றன. இவை தொடர்பாக இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தேனே தவிர அது கருந்துளைகளைப்பற்றியல்ல. இவ்வாறான நிலைமைகளுக்கு வேறுபட்ட அதீத புலச்சுழற்சிச்சார்பியக்கங்கள் விளைவாக ஏற்படும் காலவெளிச்சிதைவு ஒரு காரணமாக அமைய வாய்ப்புள்ளதைக்கூட மறுப்பதற்கில்லை. இதுபோன்ற, மற்றும் அப்பிரதேசதங்களின் இந்நிலைமை தொடர்பான உண்மையான இயற்கைக்காரணிகள், பூமியிலும் ஓரிடத்தில் குறிப்பாக பெர்முடா முக்கோனப்பகுதியில் அவ்விடத்தின் இயற்கைச்சாதக நிலைமைகளின் விளைவாகவும், நாம் அறிந்த மற்றும் அறியாத திடீர்கால நிலைமாற்றங்களின் விளைவாகவும் ஒருமித்துவருக்கின்ற போது காலத்தால் வேறுபட்ட இடம் அல்லது இடங்கள் அப்பகுதியில் தோன்றுவது சாத்தியமானதே.இப்படிப்பட்ட இடங்களின் தோற்றமானது அப்பகுதியின் கேந்திர நிலைகளில் மட்டும் தங்கியிராது, அப்பிரதேசத்தின் திடீர் காலநிலைமற்றங்களிலும் நிறைவாக தங்கியிருக்குமிடத்து அங்கு தோன்றுகின்ற அவ்விடங்களின் தோற்றமானது விட்டு விட்டு தொடருகின்ற இயல்பைக்கொண்டிருக்கும். எனவே கால வெளிச்சாய்வுள்ள இடங்களின் இடைவிட்டுத்தொடர்கின்ற தோற்றமும் மறைவும் என்கின்ற நிகழ்வே அவ்வப்போது தோன்றுகின்ற மர்ம முடிச்சுக்களாகிய சம்பவங்களுக்குரிய அவிழ்ப்புக்களாக விளங்குகின்றன. எனினும் இன்னும் நிறைவான அவிழ்ப்புக்களின் சாத்தியமாகவே நான் கருந்துளை பற்றிய தீர்வை முன்வைத்தேன்.அடுத்து கருந்துளை பற்றிய விடயத்துக்கு வருகின்றேன்.





கருந்துளை தொடர்பான விடயத்தில் கருந்துளை வளர்தல், மற்றும் பிரிந்தழிதல் போன்ற விடயங்களை பற்றி நோக்கவேண்டும். கருந்துளை பிரிந்தழிதல் என்கின்றவிடயம் ஹவ்கிங் என்கின்ற விஞ்ஞானியால் விளக்கப்பட்டிருக்கின்றது. வெப்பக்கதிர்ப்புக்களாக அதன் திணிவு குறைந்து போகின்ற இப்பிரிந்தழிவு நிகழ்வானது அண்ணளவாக சந்திரனை விட திணிவு குறைவான திணிவு கொண்ட கருந்துளைகளுக்கு மாத்திரமே பொருந்தக்கூடியது. அதைவிட கூடிய திணிவுள்ள கருந்துளைகள் பிரிந்தழிவினை விட "வளர்தல்" நிகழ்வை அதிகமாக கொண்டிருப்பதால் இறுதி விளைவாக வளர்தலே இடம்பெறுகின்றது. இப்பிரிந்தழிவு நிகழ்வு தொடர்பாக பல விஞ்ஞானிகள் வாய்ப்புப்பார்த்தல்கள் மேற்கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் ஒரு கருந்துளை அடக்கியிருக்கக்கூடிய மிகக்குறைந்த திணிவு ப்லாங்கினுடைய திணிவால் (2.17644(11)×10−8 kg) தரப்படுகின்றது.
மேலும் விஞ்ஞானக்கொள்கைகளின்படி கருந்துளையினுடைய உருவாக்கம் என்பது தனியாக நட்சத்திர ஈர்ப்பொடுக்கம் என்பது மட்டுமல்லாது அதி சக்திவாய்ந்த மோதல்களின் விளைவும் காரணமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக பிரபஞ்சப்பெருவெடிப்பின்போது தொன்றியிருக்கக்கூடியன எனவும் தற்போது தமது இறுதிக்கட்ட திணிவை (ப்லாங்கினுடை திணிவு) எட்டியிருக்கக் கூடியனவேனவும் கருதப்படுகின்ற நீடித்திருக்கின்ற கருந்துளைகள் பற்றிய பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் உயர் கட்டமாக, 2008 ஜூன் மாதத்தில் அமெரிக்க நாசா நிறுவனம் GLAST என்கின்ற செய்மதியை அனுப்பியிருக்கின்றது. எனவே, தற்போதைய தற்போதைய விஞ்ஞான உலகானது மிகக்குறைவான திணிவில் கருந்துளை நிலவுகையை ஏற்றுக்கொண்டவாறு தனது ஆய்வுகளை மேற்கொள்கின்றது என்பது நிதர்சனமாகின்றது.

காலவெளிச்சாய்வு தொடர்பான எனது தீர்ப்பினை முன்னர் தெரிவித்திருந்தேன். அடுத்து நான் கருந்துளை தொடர்பான எனது பகுதிக்கு வருகின்றேன்.

காலவெளிச் சாய்வுடைய இடங்கள் பல தோன்றுவதற்கான சாத்தியங்கள் பற்றித் தெளிவாக அலசியிருந்தேன். இங்கு நான் கொடுக்கின்ற முடிவு யாதெனில் , காலவெளி சாய்வு அதிகமாக நிகழக்கூடிய ஓரிடத்தில் ஏதேனும் ஒரு தொடர்பாக்க வடிவின் அடிப்படையில் , உதாரணமாக ஒரு மையத்தை சுற்றி சுழலும் வகையில் அமையக்கூடிய அதீத காலவெளிச் சிதைவுச் சக்கரத்தின் உள்ளே ஒரு கருந்துளை உருவாகும்.இது சுயாதீனமாக நான் வைக்கின்ற தீர்வாகும். கால வெளிச் சாய்வுகளின் இடைவிட்டுத் தோன்றுகின்ற ஒழுங்கமைவுக்கேற்ப கருந்துளைகளும் ஒன்றோ பலவோ இடைவிட்டுத் தோன்றுகின்ற இயல்பைக் கொண்டிருக்கலாம். கருந்துளை மிகக்குறைவான திணிவில் நிலவக்கூடிய தன்மை கொண்டிருக்குமிடத்து இவ்வாறான கருந்துளைகளின் உருவாக்கம் பூமியில் நிறை அதிகரிப்பை பெரிதாக விளைவிக்கும் வாய்ப்பு இல்லை.

அடுத்து கருந்துளையினுடைய ஈர்ப்பு தொடர்பாக நோக்குவோம். கருந்துளையின் ஈர்ப்பெல்லையின் அளவு அதனுள் அடங்கியிருக்கின்ற திணிவிலேயே தங்கியிருக்கின்றது. ஆயினும் ஈர்ப்பெல்லையின் வடிவமானது பொதுச் சார்புக் கோட்பாட்டின்படி வேறுபட்ட ஆரைகளைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்குமென கூறப்பட்டிருக்கின்றது. நியூட்டன் அவர்களின் தரவுகள் நீள்வட்டப்பதையை பிரேரித்திருந்தலும், அக்கொள்கையில் ஒளியின் வேகத்தைத்தாண்டி துணிக்கை கருந்துளையை சுற்றிவலம் வரும் போன்று குறிப்பிடப்பட்ட தரவுகள் சார்புக் கோட்பாட்டின்படி தவறென நிரூபிக்கப்பட்டு , மாறுபட்ட ஆரையைக் கொண்டதாக இருக்குமென தெளிவாக ஆராய்ந்தறியப்பட்டிருக்கின்றது. மேலும், அண்டவெளியில் காணப்படுகின்ற பல கருந்துளைகளும் தம்முள் உள்ளடக்கியிருக்கின்ற இராட்சத திணிவின் விளைவாகவே பல ஒளியாண்டுகள் தூரத்திற்கு தமது ஈர்ப்பெல்லையைக் கொண்டு காணப்படுகின்றன. ஆக அவற்றின் திணிவு உள்ளடக்கம் பாரியளவில் குறைந்து காணப்படுகின்ற போது, அயற் கிரகங்களையோ, அல்லது எமது பூமியிலுள்ள பல நாடுகளையோ உள்ளிழுக்கும் மற்றும் சுற்றுகைக்கு உள்ளாக்கும் ஈர்ப்பாற்றல் அற்றவையாகவே அவை அமையும்.

Comments

  1. நன்றி நண்பரே..

    அந்த ப்லாங்கினுடைய திணிவு என்பதற்கான ஆங்கிலப்பதம் என்ன என்பதைக் கூறினால் நல்லது. இணையத்தில் தேடிப்படிக்க விரும்புகிறேன்.

    எனக்கு இன்னமும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. என் கருத்துக்களை உறுதிப்படுத்திக்கொண்டு கூறுகிறேன் நன்றி.

    ReplyDelete
  2. "Planck Mass". விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ReplyDelete
  3. நல்ல பதிவு...
    எனக்கு இந்தளவுக்கெல்லாம் தெரியாது...
    ஆனால், ஒரு டவுட்...
    பிளைக் ஹோல் என்றால்... ஒளியைக்கூட உறுஞ்சத்தக்கது என கேள்விப்பட்டேன்...
    அப்படி என்றால்... திடீரென ஏற்படும் இந்த மாதிரியான பிளைக் ஹோல்...ஏன் பேர்முடா நீரை யுறுஞ்சுவதில்லை...
    அடுத்தது... எங்கேயோ ஒரு சம்பவத்தில்( முறைப்படி பதிவு செய்யப்பட்டது)... போர்ட்டிலிருந்த பொருட்கள் அப்படியே இருக்க... ஏப்படி... மக்கள் மட்டும் காணாமல் போனார்கள்... (சம்பவம் நினைவில்லை... தேடி எடுக்க ட்ரைபண்ணுகிறேன்.)

    ReplyDelete
  4. நண்பரே,

    எனக்கு இதுவரை மைக்ரோ கருந்துளைகள் உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரியாது. மன்னிக்கவும். அத்துடன் திணிவொன்றின் அவசியம் இல்லாமலே காலவெளியை வளைத்தல் கொள்கைரீதியாகச் சாத்தியம் என யூட்யூபில் பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி.

    நண்பர் வளாகம் கேட்ட சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன. கருந்துளையுள் போகும் பொருட்கள் வெப்ப ஆற்றலாகவும், கதிர்வீச்சாகவும் மாறும் எனக் கூறப்படுகின்றது. அப்படி அந்த கருந்துளை பெர்முடா நீரை உறிஞ்சுவதாக இருந்தால், அது வெப்ப ஆற்றலாகவோ கதிவீச்சாகவோ மாறுவதாக இருந்தால் அது ஏன் இன்னும் செயற்கைக்கோள்களால் அவதானிக்கபடவில்லை? அத்தகைய கதிர்வீச்சினால் ஏன் அருகிலுள்ள நாட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை?

    அடுத்து நீங்கள் மாய ராஜ்யம் 19 இல் கூறியபடி நிகழ்வெல்லைக்குள் மனிதர்கள் சிக்கிய காரணத்தினாலேயே படகிலுள்ள மனிதர்கள் மட்டும் ஈர்க்கப்பட்டனர் என்றால், மனிதர்கள் நிகழ்வெல்லைக்குள் இருக்கும் அதேவேளை, படகும் நிகழ்வெல்லைக்குள் இருந்திருக்கும் அல்லவா? அப்படி இருந்திருந்தால் படகும் மறைந்துவிட்டிருக்கும் அல்லவா?

    இருந்தாலும் கொள்கைரீதியாக நான் உங்கள் கருத்து உண்மையாகும் வாய்ப்புக்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன். பதில் கருத்துக்களை கூறியதற்கு நன்றி.

    ReplyDelete
  5. விமர்சனங்களுக்கு நன்றிகள்.
    இருவரதும் கேள்விகளுக்கான எனது பதில் கருத்துகள் “மாய ராஜ்ஜியம் 21” மூலம் வெளியாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...