வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்றமுடியாமல் போனது ஏன்?
1. உயர் தொழில்நுட்பவிருத்தி
உயர்வேகம்
ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது.
பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் வேகம் கூடியவர்கள் என்பது மக்களின் கருத்துக்களிலிருந்து புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1963ம் ஆண்டும் 1965ம் ஆண்டும் “வர்கர்“ மற்றும் “ஜெமினி“ ஆகிய விண்கலங்கள் ஊடாக விண்வெளிக்குச் சென்று வந்த “கோர்டன் குபர்“ தான் ஜேர்மனிய இராணுவத்தில் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார்.
“ நான் அது ஒரு மிக் ரக வாகனம் என்று கருதி அதைப்பின்தொடர்ந்து சென்றபோதும் அது 45000 அடி உயரத்தில் பறந்து கண்ணில் படாமல் மறைந்து விட்டது. பூமியில் தயாரிக்கப்படுகின்ற எத்தகைய நவீன கருவிகளாலும் அது போன்ற வேகத்தில் பறக்க ( இயங்க ) முடியாது என்று எண்ணுகிறேன். அது எனக்கு ஓர் வித்தியாசமான அனுபவமாக இருந்தது”
பெயர் :- மார்கிரட்டர் புல்
தொழில் :- விஞ்ஞானி கானக ஆய்வு நிலையம், வொஷிங்டன்
கருத்து :-பீடா என்ற கோளில் உயிரினங்கள் வாழமுடியும் என எனது ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு ஏதேனும் கலாசாரங்கள் நிலவக்கூடும் என்பது எனது கருத்து.
இவரின் கூற்றிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால் இவரால் கூறப்பட்ட பீடா வானது பூமியிலிருந்து 26 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் பறக்கும் தட்டுகள் வருகின்றனவெனின் அவற்றின் வேகத்தை நினைக்கவே தலை சுற்றுகிறதே…….
2.அறிவு வளர்ச்சி கூடியவர்களாக இருத்தல்
எமது பூமியை எடுத்துக்கொண்டால் இப்பூமியில் வாழ்கின்ற மனிதர்கள் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை ஏனைய விலங்குகளை விட வித்தியாசமாக கொண்டிருக்கின்றனர். மனிதர்களை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும் இந்த ஆறாவது அறிவைக்கொண்டு மனிதர்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிகப்பெரியது.
இதேபோன்று வேற்றுக்கிரகவாசிகள் பூமியிலுள்ள மனிதர்கள் கொண்டிருக்கின்ற அறிவை விட மேலதிகமாக ஏதாவது அறிவைக்கொண்டிருக்கக்கூடும். இதன் காரணமாக பூமியிலுள்ளோர் கூறுகின்ற மந்திரம் மாயம் போன்றவற்றை தமது இயல்பால் இலகுவாக அரங்கேற்றக்கூடியவர்களாக அந்த வேற்றுக்கிரகவாசிகள் இருக்கமுடியும்.
உதாரண சம்பவம் :-
அமெரிக்காவில் ஒரு பெண் திடீரென கர்ப்பமுற்றிருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இதற்கான காரணம் அவளுக்கே புரியவில்லை. விடயம் முற்றிப்போய் வைத்தியர்களிடம் சென்றது. உண்மையை அறிவதற்கு அப்பெண் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அப்போது அவள்,
"குறிப்பிட்ட நாளில் நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வானிலிருந்து கோளவடிவான ஒரு வாகனம் எம் வீட்டுத்தோட்டத்தில் வந்திறங்கியது. நான் பயத்தில் அறைக்குச்சென்று கதவை தாழிட்டுக்கொண்டேன். ஆனால் கதவு மூடியிருக்கும் போதே சிலர் அறைக்குள் மாயாவி போல உள்நுளைந்தார்கள். அவர்களை உற்றுப்பார்க்கையில் நான் மயக்கமுற்றிருந்தேன்" என்றாள்.
- கதவு மூடியிருக்கும் போதே உள்நுளைவது அவர்களின் அறிவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
- மேற்படி சம்பவத்தை அவளின் நினைவிலிருந்து மறக்கச்செய்தமையும் அவர்களின் வித்தியாசமான அறிவுவளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
ஆனாலும் மனிதர்கள் எப்படியாயினும் ஆழ்நிலை உறக்கத்திற்கு உட்படுத்தி இவ்விடயத்தை தெரிந்துவிடுவார்கள் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்லது தமது வருகையை இவ்வகையில் அறிவித்து விட்டனரா?
குறிப்பிட்ட காலம் கழித்து அந்தப்பெண்ணை ஒருநாள் காலை அவதானித்தபோது அவர் கர்ப்பமுற்றிருப்பதற்கான எதுவித அறிகுறிகளும் அவதானிக்கப்படவில்லை. மீண்டும் வைத்தியர்கள் அவளை ஆழ்நிலைஉறக்கத்திற்கு கொண்டு செல்ல அவள் 2வது முறையும் அந்த விசித்திரமான உருவங்கள் வந்ததாக கூறினாள்.
தொடரும்............
nice article bro..... keep it up
ReplyDelete