Skip to main content

Posts

Showing posts with the label விம்பம்

மனிதனும் வெற்றியும் (விம்பம் 02)

சமூகமும் மனிதனும் ஆறறிவு கொண்டு அற்புத படைப்பான பூமி தனில் வலம் வரும் மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மூலம் அதனை பயன்படுத்தும் தன்மையைப்பொறுத்து அவன் சமூகத்தில் இடம்பிடிக்கம் நிலையானது மாற்றமடைந்து செல்கிறது. ஒரு மனிதனின் உன்னத நிலையானது கோபம் பொறாமை விரோதம் துரோகம்சந்தேகம் அலட்சியப்போக்கு தற்பெருமை புரிந்துணர்வின்மை சகிப்புத்தன்மை அற்ற நிலை போன்ற காரணிகளால் தகர்க்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைகிறான். அவன் பல்வேறு பிரச்சினைகளுள் சிக்குவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளின் தோற்றத்திற்கும் விதையாகிறான். இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட பண்புகளை கொண்ட மனிதன் ஒருவன் தன் கல்வி மூலம் உயர்ந்த நிலையினை அடையும் போது அவன் வாழும் சமூகத்தின் சமநிலை கெடுகிறது. அநீதிகள் அரங்கேற காரணமாகிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளின் ஆணிவேராக அமைகிறது. ஆரம்பத்தில் சமூக பிரச்சினையாக தோற்றம் பெறுவது இவ்வாறான பல்வேறு மனிதர்களின் பிரவேசத்தால் தீவளாவிய பிரச்சினையாகவோ அல்லது சர்வதேச பிரச்சினையாகவோ உருவெடுக்கின்றன. அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினையில் இருந்து உலகை உலுக்கும் தீவிரவாதம் வர...

விம்பம்

விம்பம் கல் கொண்ட மனிதன் இன்று பிரபஞ்சத்தையும் தாண்டி தனது எண்ண அலைகளை பரவவிட்டுக்கொண்டிருக்கிறான். மனிதனது சிந்தனாசக்தி வியாபித்திருக்கும் தன்மையானது காலத்துடன் அதிகரித்த வண்ணமே செல்கிறது. இவ்வாறு மனிதன் தனது ஆற்றலைப்பயன்படுத்தி எவ்வளவு தான் உயர்ந்தாலும் அவை அனைத்தும் நன்மைக்குத்தானா என்ற வினாவின் மூலம் மனிதனது கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் சற்றே அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் தவறவில்லை. ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவனது வாழ்வு காலம் நிறைவுறும் வரையான காலப்பகுதியை உற்றுநோக்கும் போது அவனது பண்புகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் அவனது கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான வேறுபாட்டைப்பொறுத்தே அவன் காலம் கடந்து வாழ்பவனா அல்லது கால ஒட்டத்தில் அடித்து செல்லப்படும் துரும்பாகிறானா என்பது தீர்மானிக்கப்படுகிறது. உலகம் காணும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நோக்கும் போதும் அவற்றின் தோற்றத்திற்கான அடிப்படைக்காரணம் பண்புகுறைபாடு தான் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிதான் வருகிறது. பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு பல்வேறு சமூகங்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் முள் படர்ந்த மரமொன்றின் கிளைகள...