Skip to main content

மனிதனும் வெற்றியும் (விம்பம் 02)


சமூகமும் மனிதனும்

ஆறறிவு கொண்டு அற்புத படைப்பான பூமி தனில் வலம் வரும் மனிதன் தனது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மூலம் அதனை பயன்படுத்தும் தன்மையைப்பொறுத்து அவன் சமூகத்தில் இடம்பிடிக்கம் நிலையானது மாற்றமடைந்து செல்கிறது.
ஒரு மனிதனின் உன்னத நிலையானது கோபம் பொறாமை விரோதம் துரோகம்சந்தேகம் அலட்சியப்போக்கு தற்பெருமை புரிந்துணர்வின்மை சகிப்புத்தன்மை அற்ற நிலை போன்ற காரணிகளால் தகர்க்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான நிலையை அடைகிறான். அவன் பல்வேறு பிரச்சினைகளுள் சிக்குவது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளின் தோற்றத்திற்கும் விதையாகிறான்.
இவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட பண்புகளை கொண்ட மனிதன் ஒருவன் தன் கல்வி மூலம் உயர்ந்த நிலையினை அடையும் போது அவன் வாழும் சமூகத்தின் சமநிலை கெடுகிறது. அநீதிகள் அரங்கேற காரணமாகிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளின் ஆணிவேராக அமைகிறது.
ஆரம்பத்தில் சமூக பிரச்சினையாக தோற்றம் பெறுவது இவ்வாறான பல்வேறு மனிதர்களின் பிரவேசத்தால் தீவளாவிய பிரச்சினையாகவோ அல்லது சர்வதேச பிரச்சினையாகவோ உருவெடுக்கின்றன. அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் நீர்ப்பிரச்சினையில் இருந்து உலகை உலுக்கும் தீவிரவாதம் வரை இவற்றின் அடிப்படையில் இருந்து தான் தோற்றம் பெற்றவை என்பது கசப்பான உண்மையே…
காயம் என்ற சொல்லைப்பயன்படுத்துவதால் தான் மருந்து என்ற சொல்லிற்கு முக்கித்துவம் வருவது போல விரோதம் என்ற சொல்லை பயன்படுத்துவதால் தான் அங்கு சமாதானம் என்ற சொல் முக்கித்துவம் பெறுகிறது.
இவ்வாறு சமூகத்தின் மீதான பார்வையை மனிதன் தன்மீது செலுத்தும் போது அங்கு தான் அவன் தன் நிலையை உணர்ந்து கொள்கிறான்.

மன அழுத்தமும் மனிதனின் நிலையும்

ஒரு மனிதன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் சவால்களை எவ்வாறு முகங்கொடுக்கிறான் என்பதைப்பொறுத்து தான் மனிதனின் மன அழுத்தமும் மாற்றமடைகிறது. குறித்த ஒரு மனிதனால் சவால்களை தோற்றுவிக்க முடிகிறதெனில் அதனை வெற்றிகரமாக கையாளக்கூடிய வல்லமையும் மனிதனிடத்தே உள்ளது. இவ்வாறு தான் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்பவன் தனக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும் தன் கட்டுப்பாட்டிலே வைத்திருக்கக்கூடியவனாக இருக்கிறான்.

வாழ்வினை சுவாரசியமாக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான படிகள்

  1. தனது ஆளுமையை அறிந்து கொள்ளல்
  2. தன்னம்பிக்கையை பேணல்
  3. முறையான திட்டமிடலும் இயலுமான முயற்சியும்
  4. முன்னைய சவால்களிலிருந்தான அனுபவங்களை பயன்படுத்தல்
  5. சுதந்திரமாக செயற்படல்.

இவ்வாறான படிகளை கடந்து வருபவன் ஆரோக்கியமான சமூகத்தின் ஒரு அங்கம் ஆகிறான். ஒரு கல்லானது பல்வேறுபட்டதாக உளியின் முற்றுகையால் அழகிய சிலையின் வடிவமைப்பை பெறுவது போல மனிதனானவனும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி அவற்றில் தோல்வி கண்டாலும் விடாமுயற்சி மூலம் இறுதியில் நிறைவான வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய வெற்றியை காண்கிறான். நிறைவான மனிதற்குரிய பண்புகளையும் பெற்றுக்கொள்கிறான்.
குறுக்குவழியில் வெற்றியை பறிக்கும் எண்ணம் கொண்ட மனிதன் நியாயமற்ற முறையில் உன்னத மனிதன் எனும் நிலையில் இருந்து விலகி பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கு காரணமாகிறான். ஒரு சவாலை எதிர்கொண்டு அதில் வெற்றியடையவேண்டும் என்று எண்ணி பல்வேறு சவால்களை வரவழைத்த கொள்கிறான். இதுவே அவனது மன அழுத்தத்தின் தன்மை பெருகுவதற்கு ஏதுவாகிறது.

வெற்றிகரமான மனிதன்

வெற்றி தொடர்பான சில எண்ணக்கருக்கள்
  1. வெற்றி என்பது தெரிவு செய்யப்பட்ட சில வழிகளில் மாத்திரம் கிடைப்பது அல்ல.
  2. வாழ்வில் மிகவும் மெச்சக்கத்தக்கதான செயற்கரிய செயல்களை செய்வதால் கிடைக்கும் பேறு அல்ல.
  3. சிறந்த வழிகளில் நாம் செய்யும் ஒவ்வொரு எளிய செயன்முறையும் வெற்றியை முத்தமிடுகிறது.
  4. வாழ்வின் பெரும்பகுதியில் வியாபித்திருக்கும் வெற்றியானது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு எளிய செயன்முறைகளையும் வெற்றியாக்குவதால் பெறப்படுகிறது.

வெற்றி என்பது முடிவிலியைப்போன்றது. வாழ்வினில்  ஒரு வெற்றியினை சுவைப்பதன் மூலம் வெற்றி என்ற எண்ணக்கருவிற்கு நிறைவான புள்ளி ஒன்றை இட்டுவிட முடியாது. வாழ்வினில் சுவைக்கும் ஒவ்வொரு வெற்றியும் வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவை அணுகிய வண்ணம் இருக்கும். குறித்த ஒரு வெற்றியானது வாழ்வின் வெற்றி என்ற முடிவிலி எண்ணக்கருவினை நிறைவுப்புள்ளி இட்டு நிறைவாக்கி விடாது. ஒவ்வொரு சவாலையும் திடமாக எதிர்கொண்டு எமது ஆளுமையின் பலத்தை பிரயோகித்தவர்களாக இருப்பதன் மூலம் வாழ்வின் வெற்றி என்ற எண்ணக்கருவை இயன்ற அளவிற்கு அணுகிக்கொண்டே செல்லலாம்.

மீண்டும் சந்திப்போம்……

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...