Skip to main content

Posts

Showing posts from August, 2011

மாறிகள்( Variables) - (பார்வை -04)

அனைவருக்கும் வணக்கம் .. நீண்ட கால இடைவெளியுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்ற பதிப்பின் மூலம் Command Buttons மற்றும் Text Box என்பவற்றின் அறிமுக பயன்பாட்டினை சிறியதொரு முறைமை (System) மூலமாக பார்த்தோம்.  அதில் முதன்முறையாக Variable ஒன்றினை உருவாக்கியிருந்திருந்தேன். “Dim x As Integer” .... அடுத்த பகுதிகளினுள் செல்வதற்கு முன்னர் Variables பற்றிய அறிமுகத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம். பொதுவாக எங்கள் அனைவருக்கும் பெயர் உண்டு. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரினை கொண்டு காணப்படுவதால் தான் அவர் மற்றவர்களால் இலகுவாக இனங்காணப்படுகிறார். அதே போல நாம் கணினியினுள் பதிவு செய்யும் குறிப்பிட்ட தரவுகளையும் தற்காலிக அல்லது நிரந்தர தேவையினை நோக்காக கொண்டு நினைவகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பெயர் வைத்து அந்த பிரதேசத்தில் மேற்படி தரவுகளை சேமிப்போம். அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட பகுதிகள் தான் Variables. Variable என்பது நினைவகத்தில் (Memory) காணப்படக்கூடிய ஒரு சிறிய பகுதியினை வரையறுக்கலாம். (Small Section in the memory). பொதுவாக நூலகசாலைகளில் அங்கத்தவர் அட்டைகளை சேமித்து