அனைவருக்கும் வணக்கம் ..
அடுத்த பதிப்பின் மூலம் CheckBox மற்றும் Option Button என்பவற்றின் பிரயோகத்தை பார்க்கலாம்.
பார்வைகள் தொடரும்.....
நீண்ட கால இடைவெளியுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்ற பதிப்பின் மூலம் Command Buttons மற்றும் Text Box என்பவற்றின் அறிமுக பயன்பாட்டினை சிறியதொரு முறைமை (System) மூலமாக பார்த்தோம்.
அதில் முதன்முறையாக Variable ஒன்றினை உருவாக்கியிருந்திருந்தேன்.
“Dim x As Integer”....
அடுத்த பகுதிகளினுள் செல்வதற்கு முன்னர் Variables பற்றிய அறிமுகத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம்.
பொதுவாக எங்கள் அனைவருக்கும் பெயர் உண்டு. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரினை கொண்டு காணப்படுவதால் தான் அவர் மற்றவர்களால் இலகுவாக இனங்காணப்படுகிறார். அதே போல நாம் கணினியினுள் பதிவு செய்யும் குறிப்பிட்ட தரவுகளையும் தற்காலிக அல்லது நிரந்தர தேவையினை நோக்காக கொண்டு நினைவகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பெயர் வைத்து அந்த பிரதேசத்தில் மேற்படி தரவுகளை சேமிப்போம். அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட பகுதிகள் தான் Variables. Variable என்பது நினைவகத்தில் (Memory) காணப்படக்கூடிய ஒரு சிறிய பகுதியினை வரையறுக்கலாம். (Small Section in the memory).
பொதுவாக நூலகசாலைகளில் அங்கத்தவர் அட்டைகளை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் லாச்சிகள் போன்றவற்றை நோக்கும் போது ஒவ்வொரு கட்டத்தினுள்ளும் வேண்டிய பொருட்களை வைத்துவிட்டு எவை சம்மந்தமான பொருட்களை வைத்திருக்கிறோம் என்று ஒவ்வொரு லாச்சியின் வெளிப்பகுதியிலும் குறித்து வைத்திருப்போம். அப்படி குறித்து வைத்தால் தான் பிறிதொரு நேரத்தில் அனைத்து லாச்சிகளையும் திறந்து பார்க்காது குறிப்பிட்ட ஒரு லாச்சியினை திறந்து பார்த்து தேவைப்படும் பொருளினை எடுத்துவிடலாம்.
இதே செயன்முறை தான் Variable உருவாக்கத்திலும் உள்ளது. குறித்த பெயர் ஒன்றால் அடையாளம் காணப்பட்ட நினைவகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட தரவுகளை அங்கே பதிவு செய்கிறோம். தேவைப்படும் நேரத்தில் இட்ட பெயரினை அழைப்பதன் மூலம் குறித்த நினைவகப்பகுதியினுள் காணப்படும் தரவுகளை மீண்டும் செயன்முறைக்குள் ஈடுபடுத்துகிறோம்.
Variable பற்றிய அடிப்படை எண்ணக்கரு இது தான்.
பொதுவாக ஒரு Variable இற்கு பெயர் ஒன்றை வைக்கும் போது அதற்கு சில வரையறைகள் உண்டு...
1. ஆங்கில எழுத்தொன்றுடன் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
2. இடைவெளியினை கொண்டு காணப்படக்கூடாது.
3.ஏற்கனவே VB இல் காணப்படக்கூடிய முக்கிய வார்த்தைகளை(Key Words) பயன்படுத்தக்கூடாது.
4.மற்றும் பெரும்பாலான விசேட குறியீடுகளை இடுதல் கூடாது.. (%,&,!,#...)
இவ்வாறு குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு உட்பட்ட வண்ணம் Variable இற்கு பெயர் வைக்கவேண்டும்.
அடுத்ததாக Visual Basic இல் காணப்படக்கூடிய அனைத்து தரவு வகையையும்(Data Type) பார்ப்பதற்கு பதிலாக தற்போது அவசியமானவற்றை மாத்திரம் நோக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு வகையான முறைமைகளை(System) உருவாக்கும்போது மற்றையவற்றின் அறிமுகங்களை (Introduction) பார்க்கலாம்.
பொதுவாக String , Integer என்கிற இரு Data Types ம் அடிக்கடி பாவிக்க வேண்டி வரும்.
String - பொதுவாக எழுத்துக்களை அல்லது சொற்களை குறிப்பிடுவதற்கு இந்த Data Type இனை பயன்படுத்துவோம். ("a","b","Hello",....)
Integer - பொதுவாக முழு (தசமம் அல்லாத) இலக்கங்களை குறிப்பதற்கு இதனை பயன்படுத்தலாம். இங்கு அனைத்து முழு எண்களையும் பாவிக்க முடியாது. -32768 இலிருந்து 32767 வரையிலான முழு எண்களை int என்கிற Data Type மூலமாக குறிப்பிட முடியும்.
அடுத்ததாக இவ்விரு Data Type களையும் நிரலாக்க குறியீட்டுத்தொகுதியினுள் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்று பார்க்கலாம். (Declaring).
இப்போது முன்னைய பதிவில் குறிப்பிடப்பட்ட “Dim x As Integer” இனை பார்க்கலாம்.
இதன் அர்த்தம் “ x எனும் பெயர்கொண்டு “Integer” Data Type இல் ஒரு Variable ஐ அறிமுகப்படுத்து” என்பதாகும்.
இதேபோல "Dim Myname As String" என்றால், “Myname என்ற பெயரினை கொண்டதாக “String” Data Type இல் ஒரு Variable ஐ உருவாக்கு” என்பதாகும்.
பார்வைகள் தொடரும்.....
vaalththukkal
ReplyDeleteநன்றிகள் நண்பரே...
ReplyDelete