Skip to main content

மாறிகள்( Variables) - (பார்வை -04)

அனைவருக்கும் வணக்கம் ..

நீண்ட கால இடைவெளியுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சென்ற பதிப்பின் மூலம் Command Buttons மற்றும் Text Box என்பவற்றின் அறிமுக பயன்பாட்டினை சிறியதொரு முறைமை (System) மூலமாக பார்த்தோம். 

அதில் முதன்முறையாக Variable ஒன்றினை உருவாக்கியிருந்திருந்தேன்.

“Dim x As Integer”....

அடுத்த பகுதிகளினுள் செல்வதற்கு முன்னர் Variables பற்றிய அறிமுகத்தையும் பார்த்துவிட்டு செல்லலாம்.

பொதுவாக எங்கள் அனைவருக்கும் பெயர் உண்டு. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு பெயரினை கொண்டு காணப்படுவதால் தான் அவர் மற்றவர்களால் இலகுவாக இனங்காணப்படுகிறார். அதே போல நாம் கணினியினுள் பதிவு செய்யும் குறிப்பிட்ட தரவுகளையும் தற்காலிக அல்லது நிரந்தர தேவையினை நோக்காக கொண்டு நினைவகத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு பெயர் வைத்து அந்த பிரதேசத்தில் மேற்படி தரவுகளை சேமிப்போம். அவ்வாறு பெயர் வைக்கப்பட்ட பகுதிகள் தான் Variables. Variable என்பது நினைவகத்தில் (Memory) காணப்படக்கூடிய ஒரு சிறிய பகுதியினை வரையறுக்கலாம். (Small Section in the memory).

பொதுவாக நூலகசாலைகளில் அங்கத்தவர் அட்டைகளை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் லாச்சிகள் போன்றவற்றை நோக்கும் போது ஒவ்வொரு கட்டத்தினுள்ளும் வேண்டிய பொருட்களை வைத்துவிட்டு எவை சம்மந்தமான பொருட்களை வைத்திருக்கிறோம் என்று ஒவ்வொரு லாச்சியின் வெளிப்பகுதியிலும் குறித்து வைத்திருப்போம். அப்படி குறித்து வைத்தால் தான் பிறிதொரு நேரத்தில் அனைத்து லாச்சிகளையும் திறந்து பார்க்காது குறிப்பிட்ட ஒரு லாச்சியினை திறந்து பார்த்து தேவைப்படும் பொருளினை எடுத்துவிடலாம். 

இதே செயன்முறை தான் Variable உருவாக்கத்திலும் உள்ளது. குறித்த பெயர் ஒன்றால் அடையாளம் காணப்பட்ட நினைவகத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட தரவுகளை அங்கே பதிவு செய்கிறோம். தேவைப்படும் நேரத்தில் இட்ட பெயரினை அழைப்பதன் மூலம் குறித்த நினைவகப்பகுதியினுள் காணப்படும் தரவுகளை மீண்டும் செயன்முறைக்குள் ஈடுபடுத்துகிறோம். 


Variable பற்றிய அடிப்படை எண்ணக்கரு இது தான்.

பொதுவாக ஒரு Variable இற்கு பெயர் ஒன்றை வைக்கும் போது அதற்கு சில வரையறைகள் உண்டு...

1. ஆங்கில எழுத்தொன்றுடன் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
2. இடைவெளியினை கொண்டு காணப்படக்கூடாது.
3.ஏற்கனவே VB இல் காணப்படக்கூடிய முக்கிய வார்த்தைகளை(Key Words) பயன்படுத்தக்கூடாது.
4.மற்றும் பெரும்பாலான விசேட குறியீடுகளை இடுதல் கூடாது.. (%,&,!,#...)

இவ்வாறு குறிப்பிட்ட சில வரையறைகளுக்கு உட்பட்ட வண்ணம் Variable இற்கு பெயர் வைக்கவேண்டும்.

அடுத்ததாக Visual Basic இல் காணப்படக்கூடிய அனைத்து தரவு வகையையும்(Data Type) பார்ப்பதற்கு பதிலாக தற்போது அவசியமானவற்றை மாத்திரம் நோக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு வகையான முறைமைகளை(System) உருவாக்கும்போது மற்றையவற்றின் அறிமுகங்களை (Introduction) பார்க்கலாம். 

பொதுவாக String , Integer என்கிற இரு Data Types ம் அடிக்கடி பாவிக்க வேண்டி வரும்.

String - பொதுவாக எழுத்துக்களை அல்லது சொற்களை குறிப்பிடுவதற்கு இந்த Data Type இனை பயன்படுத்துவோம். ("a","b","Hello",....)

Integer - பொதுவாக முழு (தசமம் அல்லாத) இலக்கங்களை குறிப்பதற்கு இதனை பயன்படுத்தலாம். இங்கு அனைத்து முழு எண்களையும் பாவிக்க முடியாது. -32768 இலிருந்து 32767 வரையிலான முழு எண்களை int என்கிற Data Type மூலமாக குறிப்பிட முடியும்.

அடுத்ததாக இவ்விரு Data Type களையும் நிரலாக்க குறியீட்டுத்தொகுதியினுள் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்று பார்க்கலாம். (Declaring).

இப்போது முன்னைய பதிவில் குறிப்பிடப்பட்ட “Dim x As Integer” இனை பார்க்கலாம்.

இதன் அர்த்தம் “ x எனும் பெயர்கொண்டு “Integer” Data Type இல் ஒரு Variable ஐ அறிமுகப்படுத்து” என்பதாகும். 

இதேபோல "Dim Myname As String" என்றால், “Myname என்ற பெயரினை கொண்டதாக “String” Data Type இல் ஒரு Variable ஐ  உருவாக்கு” என்பதாகும்.


அடுத்த பதிப்பின் மூலம் CheckBox மற்றும் Option Button என்பவற்றின் பிரயோகத்தை பார்க்கலாம்.

பார்வைகள் தொடரும்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

Visual Basic - Hello World (பார்வை - 2)

அனைவருக்கும் வணக்கம்…. சென்ற பதிப்பில் Visual Basic இல் நிரலாக்க குறியீடுகள் (Programming Codings) எழுதும் பகுதியில் இருந்து இயங்குநிலைக்கு எப்படி கொண்டு செல்வது என்று பார்த்தோம். இன்றைய பதிப்பில் அவசரமாக எப்படி நிரலாக்க குறியீடுகள் எழுதுவது என்று பார்க்க முன்னர் சில பகுதிகளை குறிப்புகளாக நோக்கிவிட்டு Programme எழுத போகலாம். பொதுவாக எல்லா மொழிகளுக்கும் பலதரப்பட்ட வரையறைகள் இருக்கின்றன. உதாரணமாக…. நாம் நாளை பாடசாலை சென்றேன். இந்த வசனத்தில் ஏகப்பட்ட பிழைகள். இப்படி ஒருவர் கூறும் பட்சத்தில் அவர் என்ன கூறவருகிறார் என்று எங்களால் இனங்காணமுடியாத சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதே பிரச்சினை தான் இந்த நிரலாக்க மொழி சூழலிலும் காணப்படுகின்றது. கணினி என்று நோக்கும் போது அங்கும் அதனால் விளங்க கூடிய வகையில் நாம் கூறுபவை தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மொழி பயிலும் போதும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் இருப்பது போன்று காணப்படும் மாயை காலம் செல்ல செல்ல இடர்பாடுகள் குறைந்து செல்வது போன்ற தோற்றப்பாட்டை கொண்டு காணப்படும். இங்கும் நாம் கணினியால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதனுடன் வரையறைகளுக்கு உட்பட்ட...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும் ( யார் ? இவர்கள் 12 )

கூர்ப்பு ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார். இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின் 1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது. 2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது. 3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது. 4. நுட்பப்பிடி முறை ஆற்றல் விருத்தி அடைகிறது. மேற்கூறப்பட்ட மாற்றங்கள் இதுவரை மனிதனில் நீண்டகால அடிப்படையில் மாற்றமடைந்து வருவதாகும். ஆகவே இம்மாற்றங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகிறது. மனிதன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை அடைவான். முளையின் கனவளவு அதிகரிக்க தலையின் பருமன் கூடும். அதே நேரத்தில் அவனது உடல் மெலிந்து குறுகிய தோற்றம் உடையதாக மாறும். பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும். ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம். அந்நிலையில் அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சியும் உயர்வாகும். (...