இறந்த காலத்தை அடைவது எப்படி?
காத்திருங்கள்.......
இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம்.
பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம்.
சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம்.
ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம்.
இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவாக பாரிய குளறுபடிகள் சமூகவிரோதசெயல்கள் கூட இடம்பெற வாய்ப்பு உண்டு.
சரி, இவ்வாறு இறந்த காலத்தை நோக்கி நாம் பயணிக்கும் போது நினைத்த மாத்திரத்திலேயே நாம் விரும்பிய காலத்திற்குச்செல்லலாம் என எண்ணுவது தவறு.
நாம் சாதாரணமாக ஒரு வீதியில் பயணிக்கும் போது படிப்படியாகவே ஒவ்வொரு இடங்களையும் கடக்கிறோம். அதேபோன்றே காலத்துடன் பயணிக்கும் போதும் மெது மெதுவாக செல்வோம். எனவே குறுகிய நேரங்களில் எமது இறந்தகாலத்தில் உள்ள ஏதாவது ஒரு நிலையை அடையவேண்டுமாயின் எமது வாகனத்தின் வேகம் ஒளியின் வேகத்தை தாண்டினால் மாத்திரம் போதாது. இதையும் விட பெருமளவில் அதிகரிக்கும் போதே சாத்தியமாகும்.
இதுவரை பூரணவிளக்கம் அடைந்தோர் தொடர்ந்து வாசியுங்கள்........
இதுவரை காலத்துடனான இயக்கம் பற்றி நான் விபரித்தது உங்களுக்கு தெளிவாகியிருக்கும் என எண்ணுகிறேன். அப்படியாயின் அடுத்து எனதுஆய்வின் முக்கிய கட்டத்தில் காலம் தொடர்பான இன்னொரு விளக்கத்தை முன்வைக்கலாம் என எண்ணுகிறேன்.
அதாவது காலம் தொடர்பான இயக்கத்தை அடைவதற்கு தேவையான வேகத்தையுடைய வாகனம் இப்போது கிடைப்பது சாத்தியமானதா என்கிற கேள்வி எழும் போது அனைவரும் இல்லை என்ற பதில் கூறுவர்.
இதற்குக்காரணமாக மனிதன் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வேகத்தை எட்டமுடியாது என்பதே. இது ஒரு முக்கிய காரணமாகும் .
தற்போது நாம் இயங்கும் வாகனங்களின் வேகத்தைப்போல் பல ஆயிரம் மடங்கு வேகத்தை உடைய வாகனத்தை கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் போதாது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். காரணம் நாம் தற்போது வாகனங்களின் வேகத்தை இயந்திரவலுவை அடிப்படையாகக்கொண்டே அதிகரிக்கிறோம். இதன்படி எமது வாகனங்களின் இயந்திரவேகமானது மெதுவாகவே அதிகரிக்கிறது. எனவே தான் அண்மைக்காலத்தில் இது சாத்தியமில்லை என்கிறேன்.
குறிப்பு :- நாம் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாகனங்களின் (விண்கல ஏவுகணை உட்பட) வேகமும் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கவை.
அதுவரை என்ன நடக்கும் ?
இதன்போது இன்னொரு விடயமாக கூர்ப்பு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணுகிறேன்.
காத்திருங்கள்.......
என்ன நண்பரே, ஒளிவேகத்தை மிஞ்ச முடியாது, நிறையுடைய பொருள் ஒளிவேகத்தை நெருங்க முடியாதுன்னு ஐன்ஸ்டீன் சார் அடிச்சுச் சொல்லிட்டு, ப்ரூவ் பண்றதுக்கு பக்கம் பக்கமா பார்முலா எழுத்து வச்சுட்டுப் போய்ட்டாரு.. அப்புறம் இது வரைக்கும் பல சோதனைகள் செஞ்சு அது சரிதான்னு சொல்லிப்புட்டாங்க நம்ம விஞ்ஞானிகள்... நீங்க என்னடான்னா பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனித தொழில்நுட்பத்தால் ஒளிவேகத்தை தாண்டலாம் என்கிறீர்கள்.. அப்போ ஐன்ஸ்டீன் சொன்னது பொய்யா?
ReplyDeleteஅதுசரி.. கூர்ப்பை அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்றால் (அதைத்தான் டார்வின் அறிமுகப்படுத்திட்டாரே), புதுத் தொடரா? நல்லது நல்லது வரவேற்கிறேன்...
என்னவோ.. இதுக்கும் இறுதிப்பகுதில பதில் தருகிறேன்னு கமென்ட் பண்ணப் போறீங்க.. அந்த இறுதிப் பகுதியோட நம்பர் (யார்? இவர்கள் XXX) தர முடியுமா?
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.....
ReplyDeleteவிஞ்ஞானம் என்பது அவதானிப்புக்களின் போக்கிலுள்ள ஒருங்கமித்த முடிவுகளையும் அடையக்கூடிய சாத்தியங்களின் சார்பான அசைவுகளையும் இணைத்து பயணிப்பது ஆகும்.
விஞ்ஞான வரலாற்றில் எப்போதும் ஒருவரது கருத்திலேயே அடுத்தவர்கள் தங்கியிருந்ததில்லை.
நியூட்டனின் கருத்துக்குள்ளாகவே முழுமையாக ஐன்ஸ்டைன் நின்றிருந்தால் இன்று வெற்றிகரமாக சார்புக்கொள்கையை முழுமையாக தந்திருக்க இயலாது. அதன் பின் உள்ள Stephen Hawking உள்ளிட்ட பல ஆய்வாளர்களும் முழுமையாக ஐன்ஸ்ரைனுக்குள்ளேயே தங்கியிருப்பவர்களும் அல்ல. திணிவுடைய பொருட்கள் ஒளியை விட விஞ்சமுடியாது என ஐன்ஸ்ரைன் நிறுவியிருப்பதை யாம் அறிந்ததே. அப்படியாயினும் திணிவு என்கிற இவ்விடயத்தை ஒளியைத்தாண்டுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்கிற சிந்தனைதான் முடிவில்லாத சக்திமுதல் பற்றிய ஆய்வாளர்களின் விரிவான ஆராய்ச்சியிற்கு இன்று வழிவகுத்திருக்கின்றது. இதைவிட வேறு சாத்தியங்களும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அவ்வாறு ஆராய்வது தான் விஞ்ஞான ஆய்வாளனுக்கு அழகு.
வழமையாக நல்ல கருத்துக்களை இடும் நீங்கள் இன்று சிறுபிள்ளைத்தனமாக இட்ட இன்னொரு கருத்து வியப்புக்குள்ளாக்கியது.
கூர்ப்புக்கொள்ளையை டார்வின் அறிமுகப்படுத்தினார் என்பது இன்றைய விஞ்ஞான உலகில் சிறுபிள்ளை கூட அறிந்தவிடயமாகி விட்டது. காலவியல் பற்றி ஆராயும் நாம் புதிதாக அதை அறிமுகப்படுத்தப்போகிறோம் என்று கூறியதாக நீங்கள் நம்பியதைத்தான் எம்மால் நம்பமுடியவில்லை. எமது ஆய்விற்கு அவசியமான வகையிலான அறிமுகத்தையே அங்கு குறிப்பிட்டோம்.
அதாவது ஒரு வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதை கூறுகின்ற பொழுது இடையில் மின்சார சுற்றுக்களின் அவசியம் பற்றிய அறிமுகத்தை ஒருவர் வழங்குவது போல தான் இதுவும். அதற்காக மின்சார சுற்றுக்களை அல்லது மின்சுற்றுக்களை அவரே தான் கண்டுபிடித்ததாக கூறுவதாக எண்ணினால் அது நகைப்பிற்கு இடமாகிவிடும்.
நீங்கள் இதுவரை இட்ட கருத்துகள் அனைத்திற்குமே தகுந்த பதில்களை கொண்டிருப்பதால் தான் “யார் ? இவர்கள்” தொடர் பதிவு பாதிக்காத வகையில் எதிர்ப்பதிவு தனிப்பதிவுகளாக வரும்வரை காத்திருக்குமாறு கூறினோம்.
மேலும் உங்களது கருத்துக்களை தொடர்ந்தும் வரவேற்கிறோம். ஆயினும் எமது கருத்துகளின் ஆழத்தை புரிந்தவகையில் உங்கள் பின்னூட்டங்கள் அமைவது சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை குறைக்கும் என எண்ணுகிறோம்.
நன்றி.
மீண்டும் வருக நண்பரே....
.... POSTED BY BAANUGOPAN RAVIKARAN ....
நீங்கள் கூறியது உண்மைதான். நியூட்டனின் கொள்கைகளோடு நின்றிருந்தால் சார்புக் கொள்கை நமக்குக் கிடைத்திருக்காது தான். அத்தகைய சார்புக்கொள்கையை பொய்யென நிறுவ பல பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்..
ReplyDeleteஎன்னுடைய கடந்த பின்னூட்டம் அதிக நேரமின்மையால் இடப்பட்டது. அன்று நான் விஞ்ஞானத்தை ஆராயும் மனநிலையில் இல்லை. எனவே அந்தப் பின்னூட்டத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பின்னூட்டம் உங்கள் தளத்தின் தரத்தினைப் பாதிப்பதாக நீங்கள் கருதினால், அந்தப் பின்னூட்டத்தை நீக்கிவிடுங்கள். (எல்லா தளங்களிலும் பொழுதுபோக்காக பின்னூட்டமிடும் எனக்கு, உண்மையின் பக்கத்தில் மாய்ந்து மாய்ந்து செந்தமிழில் எழுதுவது ஒரு மாதிரி இருந்தது. அதான் ஒரு சேஞ்சுக்கு...)
அத்துடன் இன்னும் மூன்று வாரங்களுக்கு கல்வி சம்பந்தமான வேலைகள் காத்திருப்பதால், உங்கள் சில பதிவுகளைப் படிக்கவோ, பின்னூட்டமிடவோ நேரம் கிடைக்காமல் போகலாம். எனவே, மூன்று வாரங்களுக்கு பின்னூட்டங்கள் இடமாட்டேன். தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வேலைகள் முடிந்தபின் ஆரோக்கிரமான விவாதமொன்றுக்கு தயாராக வருகிறேன்.
மிக்க நன்றி...
Abarajithan அவர்களின் shared item இல் இருந்து இப்போது தான் இத்தளம் அறிமுகமாகிருக்கின்றது. நல்ல முயற்சி.... சிறப்பாக உள்ளது....
ReplyDeleteநன்றிகள் நண்பரே...
ReplyDeleteஉங்களிடம் இருந்தும் உண்மையின் பக்கத்தில் இடப்பட்ட பதிவுகள் தொடர்பான விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கீழே காட்டப்படும் விமர்சனம் மேலுள்ள பதிவிற்கான இரண்டாவது விமர்சனமாகும்.
ReplyDeleteஇடையூறுக்கு வருந்துகிறோம்.
உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.....
விஞ்ஞானம் என்பது அவதானிப்புக்களின் போக்கிலுள்ள ஒருங்கமித்த முடிவுகளையும் அடையக்கூடிய சாத்தியங்களின் சார்பான அசைவுகளையும் இணைத்து பயணிப்பது ஆகும்.
விஞ்ஞான வரலாற்றில் எப்போதும் ஒருவரது கருத்திலேயே அடுத்தவர்கள் தங்கியிருந்ததில்லை.
நியூட்டனின் கருத்துக்குள்ளாகவே முழுமையாக ஐன்ஸ்டைன் நின்றிருந்தால் இன்று வெற்றிகரமாக சார்புக்கொள்கையை முழுமையாக தந்திருக்க இயலாது. அதன் பின் உள்ள Stephen Hawking உள்ளிட்ட பல ஆய்வாளர்களும் முழுமையாக ஐன்ஸ்ரைனுக்குள்ளேயே தங்கியிருப்பவர்களும் அல்ல. திணிவுடைய பொருட்கள் ஒளியை விட விஞ்சமுடியாது என ஐன்ஸ்ரைன் நிறுவியிருப்பதை யாம் அறிந்ததே. அப்படியாயினும் திணிவு என்கிற இவ்விடயத்தை ஒளியைத்தாண்டுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்கிற சிந்தனைதான் முடிவில்லாத சக்திமுதல் பற்றிய ஆய்வாளர்களின் விரிவான ஆராய்ச்சியிற்கு இன்று வழிவகுத்திருக்கின்றது. இதைவிட வேறு சாத்தியங்களும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அவ்வாறு ஆராய்வது தான் விஞ்ஞான ஆய்வாளனுக்கு அழகு.
வழமையாக நல்ல கருத்துக்களை இடும் நீங்கள் இன்று சிறுபிள்ளைத்தனமாக இட்ட இன்னொரு கருத்து வியப்புக்குள்ளாக்கியது. கூர்ப்புக்கொள்ளையை டார்வின் அறிமுகப்படுத்தினார் என்பது இன்றைய விஞ்ஞான உலகில் சிறுபிள்ளை கூட அறிந்தவிடயமாகி விட்டது. காலவியல் பற்றி ஆராயும் நாம் புதிதாக அதை அறிமுகப்படுத்தப்போகிறோம் என்று கூறியதாக நீங்கள் நம்பியதைத்தான் எம்மால் நம்பமுடியவில்லை. எமது ஆய்விற்கு அவசியமான வகையிலான அறிமுகத்தையே அங்கு குறிப்பிட்டோம்.
அதாவது ஒரு வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதை கூறுகின்ற பொழுது இடையில் மின்சார சுற்றுக்களின் அவசியம் பற்றிய அறிமுகத்தை ஒருவர் வழங்குவது போல தான் இதுவும். அதற்காக மின்சார சுற்றுக்களை அல்லது மின்சுற்றுக்களை அவரே தான் கண்டுபிடித்ததாக கூறுவதாக எண்ணினால் அது நகைப்பிற்கு இடமாகிவிடும்.
நீங்கள் இதுவரை இட்ட கருத்துகள் அனைத்திற்குமே தகுந்த பதில்களை கொண்டிருப்பதால் தான் “யார் ? இவர்கள்” தொடர் பதிவு பாதிக்காத வகையில் எதிர்ப்பதிவு தனிப்பதிவுகளாக வரும்வரை காத்திருக்குமாறு கூறினோம்.
மேலும் உங்களது கருத்துக்களை தொடர்ந்தும் வரவேற்கிறோம். ஆயினும் எமது கருத்துகளின் ஆழத்தை புரிந்தவகையில் உங்கள் பின்னூட்டங்கள் அமைவது சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை குறைக்கும் என எண்ணுகிறோம்.
நன்றி.
மீண்டும் வருக நண்பரே....
விஞ்ஞான உலகிற்கு நான் சிறுபிள்ளை. உண்மையின் பக்கத்திற்கு சமீபத்திலேயே வரமுடிந்தது. மிகவும் சிறந்த என் மனதைக் கவர்ந்த வலைதளமாக இது காணப்படுகிறது.
ReplyDeleteநீங்கள் உங்கள் தளத்தில் இட்ட அனைத்து தொகுதிகளையும் நுனிப்புல் மேய்ந்தது போல பார்வையிட்டேன்.
கட்டுரைத்தொகுப்பு - ஆய்வுப்பகுதி என்று அனைத்துமே வளரும் தலைமுறைக்கு உரியதாக அமைக்கப்பட்டிருப்பது உங்கள் சிறந்த தூரநோக்குப்பார்வையை புலப்படச்செய்வதாக அமைகிறது.
எல்லாவற்றிற்கும் முதன்மையாக உங்கள் தமிழ் மொழிவளத்திற்கு வாழ்த்துக்கள் பல .....
மேலும் தொடரட்டும் .....
நன்றிகள் நண்பரே...
ReplyDeleteஉங்கள் மீள்வருகையும் பதிவுகள் மீதான விமர்சனங்கள் இடப்படுவதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
மீண்டும் வருக.