Skip to main content

கூர்ப்பினில் மனிதனும் பறக்கும் தட்டு வாசியும் ( யார் ? இவர்கள் 12 )

கூர்ப்பு


ஒரு இனம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி மனிதனுடைய கூர்ப்பு மாற்றத்தை நாம் அவதானிப்பின்

1. நிமிர்ந்த தோற்றம் மேலும் ஒழுங்காக வருகிறது.

2. மூளையின் கனவளவுக்கும் உடலின் கனவளவிற்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கிறது.

3. பெருவிரலின் எதிரிடை ஆற்றல் அதிகரிக்கிறது.

4. நுட்பப்பிடி முறை ஆற்றல் விருத்தி அடைகிறது.

மேற்கூறப்பட்ட மாற்றங்கள் இதுவரை மனிதனில் நீண்டகால அடிப்படையில் மாற்றமடைந்து வருவதாகும்.

ஆகவே இம்மாற்றங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும் என்பது தெளிவாகிறது.

மனிதன் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தை அடைவான்.

முளையின் கனவளவு அதிகரிக்க தலையின் பருமன் கூடும். அதே நேரத்தில் அவனது உடல் மெலிந்து குறுகிய தோற்றம் உடையதாக மாறும்.



பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும்.

ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம். அந்நிலையில் அவர்களது தொழில்நுட்ப வளர்ச்சியும் உயர்வாகும். (எமது தற்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் மேம்பட்டது ) அவர்களின் மொழிகளும் தற்போதையதை விட வேறுபட்டதாக இருக்கும். இவ்வாறான ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு மிக உயர்வான வேகத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தைக்கொண்ட அவ்வாகனங்கள் கண்டுபிடிக்கும் போது அவர்கள் தமது இறந்தகாலத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர். இதன்புாது அவர்கள் 20ம் நூற்றாண்டு 21ம் நூற்றாண்டு உள்ள காலப்பகுதிகளுக்கும் வருவது சாத்தியமானது தானே?



நான் கூறவருவது புரிகிறதா?

அதாவது நாம் தற்போது அவதானிக்கின்ற அந்த விசித்திர உடலமைப்பைக் கொண்டவர்கள் தான் எமது எதிர்கால வாரிசுகள். பறக்கும் தட்டுக்கள் என்பது அவர்களின் வாகனங்கள். அவர்கள் தமது மூதாதையர்கள் ஆகிய நம்மை தமது ஆராய்ச்சி நோக்கத்திற்காக தேடி வருவது நியாயமானது தானே?

“ நாம் தற்போது அவதானிக்கும் குறிப்பிட்ட விசித்திரமானவர்கள் எமது எதிர்காலத்தோர் ஆவர் ”

ஆக மொத்தமாக 2 வழிவகையில் நான் எனது ஆய்வினை மேற்கொண்டேன். குறிப்பிட்ட விசித்திரமதனவர்கள்

1. வேற்றுக்கிரகத்தில் இருந்து வருகிறார்கள் என்ற அடிப்படையிலும்

2. எமது எதிர்காலத்தில் இருந்து வருகிறார்கள் என்ற அடிப்படையிலும் ஆராய்ந்தேன்.



எனது முடிவு


இரு கோணங்களிலும் பல சாத்தியப்பாடுகளையும் அலசி ஆராய்ந்திருக்கின்ற நிலையில் எனது முடிவாக வேற்றுக்கிரகத்தில் உயிரினங்கள் நிலவுகின்றன என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் மேற்படி தோற்றத்தை கொண்டிருப்பதற்கு சாத்தியம் குறைவு. ஆனால் மனித உருவம் தாண்டிய வேறு பல வடிவங்களில் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே நாம் பூமியில் அவதானிக்கின்ற இந்த விசித்திர உருவங்கள் வேற்றுக்கிரக வாசிகள் என்கின்ற காரணத்தை விட எமது எதிர்கால வாசிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதுகிறேன். அதாவது அவர்கள் எமது பின்னோர்கள் ஆவர். அவர்கள் எமது வாழ்க்கை தொடர்பான பூரண ஆராய்ச்சியை மேற்கொண்டு முடிக்கின்ற போது எம்முடன் சுமூகமான தொடர்பை ஏற்படுத்த முனைவார்கள்.

நன்றி.



இவ்வண்ணம்,

ரவிகரன் ரணேந்திரன்

Comments

  1. நல்ல பதிவு நண்பரே,

    நேற்றுத் தான் யோசித்தேன். ஏன் நீங்கள் இரண்டு வாரங்களாக பதிவிடவில்லையென.. கேட்பதற்குள் பதிவிட்டுவிட்டீர்கள்.

    //ஒரு இனம் நீண்ட காலத்திற்கு போது அது கூர்ப்பு மாற்றங்களுக்கு உட்படும் என்று சாள்ஸ் டார்வின் தனது கொள்கையில் வெளியிட்டு உள்ளார்.//

    நண்பரே, நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இனம் பரிணாமத்துக்கு உட்படுமென டார்வின் சொன்னதாக நினைவில்லை. டார்வின் சொன்னது "எந்தவொரு இனத்துக்கும் அவ்வினத்தின் இருப்பை பாதிக்கக் கூடிய வாழ்வியல் தடங்கல்கள் ஏற்பட்டால், அப்படி ஏற்படும் தடங்கலுக்கு அவ்வினத்தின் ஒருசில சந்ததிகள் தாக்குப்பிடிக்கக் கூடியவகையில் தற்செயலாக சிறத்தலடைந்திருந்தால் மட்டுமே அவ்வினத்திலிருந்து புது சந்ததிகள் புதிய உயிராக பரிணமிக்கும். அவ்வாறு எந்தவொரு சந்ததியும் தற்செயலாக சிறத்தலடையாவிடின் அவ்வினம் முழுமையாகவோ பகுதியாகவோ அழிந்துவிடும்” என்பதே ஆகும். இதில் நீண்ட காலம் முக்கியமானதல்ல. எவ்வளவு வெற்றிகரமாக அந்த தற்செயல் மாற்றம் நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்தே காலம் தீர்மானிக்கப்படுகின்றது. இக்காலம் சில ஆயிரம் ஆண்டுகளிலிருந்து மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகலாம். உதாரணத்திற்கு மனிதன் குரங்கின் மூதாதையரிலிருந்து பதினோரு மில்லியன் ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து வருகிறான். ஆனால் கரப்பான்பூச்சியோ இருநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக பரிணாமம் அடையவில்லை. ஏன்? கரப்பானின் மூதாதையரின் தற்செயல் இசைவாக்கம் குரங்கின் மூதாதையரின் தற்செயல் இசைவாக்கத்தைவிட மிக மிக வெற்றிகரமானது அல்லது அதிர்ஷ்டகரமானது. கரப்பான் பூச்சி தனது தோன்றலில் அதிஷ்டகரமாக பெற்றிருந்த தற்செயல் இசைவாக்கங்கள் இருநூறு மில்லியன் ஆண்டுகளாக கரப்பானுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தடைகளையெல்லாம் துடைத்தெறியக் கூடியளவு வல்லமை கொண்டிருகின்றன. அதனால் கரப்பானுக்கு மாறவேண்டிய அவசியம் இல்லை. மாறவில்லை. ஆனால் மனிதர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அதனால்தாம் நாம் பரிணமித்தோம், பரிணமிக்கின்றோம்.. ஆனால் தற்போது உலகின் மிக சக்திவாய்ந்த,திறமையான உயிரினமாக நாம் வாழ்வதற்கும் இந்த துரதிஷ்டமே காரணமென்பதை மறுக்க முடியாது.

    // ஆகவே எமது எதிர்காலத்தவர்களின் தோற்றத்தை நாம் அனுமானித்து விட்டோம்.//

    இப்போதைய வாழ்வியல் தடங்கல்களையும், பயனுள்ள பயனற்ற உறுப்புக்களையும் கொண்டே நாம் இவற்றை அனுமானித்திருக்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் புதுவகையான தடங்கல்கள் ஏற்பட்டால் இந்த அனுமானங்கள் பொய்யாகும் இல்லையா?

    // பெரும்பாலும் மனிதனில் பெரும் பயன்பாட்டிற்கு உள்ளாக்கப்படும் அங்கங்கள் வளர்ச்சியடைய மற்றயவை மெதுமெதுவாக மறையத்தொடங்கும்.//

    உடலிலிருக்கும் முடியும் வாலும் முழுதாக மறைந்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.

    // மிக உயர்வான வேகத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தைக்கொண்ட அவ்வாகனங்கள் கண்டுபிடிக்கும் போது அவர்கள் தமது இறந்தகாலத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.//

    நண்பரே மிக உயர் வேகத்தில் பயணிக்கும்போது காலம் திரும்புவதில்லை, மெதுவாகிறது என ஆதாரத்துடன் கூறினேன். உங்களிடம் வலுவான எதிர் ஆதாரம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அடுத்த பதிவில் கூறுவதாக சொல்லியிருந்தீர்கள். விரிவாகச் சொன்னால் நல்லது. காத்திருக்கின்றேன்.

    // எதிர்கால வாசிகளாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கருதுகிறேன்.//

    நீங்கள் கூறியதற்கும் பெரும் பகுதி வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் காலம் திரும்பக்கூடியது என்பதை நான் பெரிதாக நம்புவதில்லை. (ஆதாரம் இல்லை. [காலம் திரும்பக்கூடியது என்பதற்கும் ஆதாரம் இல்லை] ஆனால் நம்பிக்கை இல்லை)

    உங்கள் நீண்டநாளைய தொடர் வெற்றிகரமாக முடிந்திருக்கின்றது. நேரத்தைப் பற்றியும் வேகத்தைப் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் கூறுங்கள். நானும் பதிலளிக்கிறேன்.

    நன்றி,
    அபராஜிதன்.

    ReplyDelete
  2. உங்கள் கட்டுரை மிக நன்றாக உள்ளது.

    என்னைப் போல ஆராய்ச்சி எண்ணம் உடையரவரா நீங்கள்!

    அன்புடன்
    எஸ்.கே

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி நண்பரே
    பல்கலைக்கழக அலுவல்கள் காரணமாக சீராக பதிவுகளை இட முடியவில்லை. முதலில் கூர்ப்பு தொடர்பாக விளக்கமாக பல பதிவுகளில் ஆராய்ந்து விட்டு இறுதியில் யார் ? இவர்கள் தொடருக்கான முடிவை வழங்கலாம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். எனினும் சீரான வேகத்தில் பதிவிட முடியாமல் இருந்ததால் ஆய்வினை விரைவாக முடிக்க நினைத்தே கூர்ப்பு பற்றிய விளக்கத்தை ஒரேயொரு பதிவில் தந்திருந்தேன். ஆக எனது பதிவிற்கு அவசியமான வகையில் மனிதர்கள் அடையும் கூர்ப்பு மாற்றம் எவ்வாறு நாம் அவதானிக்கும் விசித்திர உருவம் உடையதாக மாற்றமடைய வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்குவதற்கான அத்தியாவசிய இடைச்செருகலாகவே கூர்ப்பு பற்றிய பதிவை மிகச்சிறியதாக தந்திருந்தேன். எனினும் கூர்ப்பு தொடர்பாக தாங்கள் வழங்கிய தரவுகள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் எனது பதிவு கூர்ப்பை விளக்கும் தனி ஆய்வுத்தொடராக அமையவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து சில நாட்களில் பல்கலைக்கழக அலுவல்கள் காரணமாக தொடரை சீராக பதிவிட முடியாமல் போகும் என எண்ணுகிறேன். எனினும் விரைவில் எதிர்ப்பதிவுகள் உண்மையின் பக்கத்தில் வலம்வரும்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றிகள் நண்பர் எஸ்.கே அவர்களே...
    தங்களது வருகையும் பதிவுகளின் மீதான விமர்சனங்களும் தொடரும் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  5. @ரவிகரன்,

    நண்பர் ரவிகரன் அவர்களே, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. கூர்ப்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கு தேவைப்படுவது உண்மைதான். உங்கள் இத்தொடர் கூர்ப்பைத் தலைப்பாகக் கொண்டு எழுதப்படவில்லை என்பது உண்மைதான். உங்கள் வாதம் சரியே.. உங்கள் பல்கலைக்கழக வேலைகள் முடிந்தபின் எதிர்ப்பதிவுகளை இடவும். எதிர்ப்பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  6. தங்களுடைய வலைப்பூவின் வாசகனாகி விட்டேன். தமிழில் வலைபூவில் ஆராய்ச்சி கட்டுரைகள் மிகவும் குறை. குறை தீர்த்தமைக்கு நன்றி.

    கோகுல்

    ReplyDelete
  7. ஆருயிர் நண்பன் கோகுல்ராஜ் அவர்கட்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...