Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்

விழிநிலை விம்பங்கள்...

இருண்ட பூமி ஒவ்வொருநாளும் பிறக்கிறது . கதிரவன் கதிர்கள் ஒவ்வொரு நாளையும் பசுமையாக்குகின்றன . சுட்டெரிக்கவும் தவறுவதில்லை . வேற்றுலகில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் கனவெனும் வாகனம் விட்டு இறங்கி பூவுலகை பார்க்கும் கோணங்கள் எத்தனை . ஒருவனுக்கு வெறுப்பாக இருக்கின்ற உலகம் இன்னொருவனுக்கு இனிமையாக இருக்கிறது . இன்னொருவனுக்கு விளையாட்டாக இருக்கிறது . மற்றொருவனுக்கு சூனியமாக இருக்கிறது .  ஒவ்வொரு மனிதனும் இறைநிலைக்குரிய சக்திகளை அடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவன் என்று ஆன்மீகவாதி   கூறுகிறான் . ஆனால் ஒவ்வொரு நாளையும் கடக்கும் சராசரி மனிதன் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது . அந்த நாளின் சவாலை முறியடிக்கத்தவறும் உள்ளங்கள் எத்தனை . சங்கடங்கள் , சந்தேகங்கள் , வெறுப்புகள் , துரோகங்கள் , விரோதங்கள் என்று எத்தனை பரிமாணங்களில் ஒரு உள்ளம் பயணிக்கவேண்டி இருக்கிறது . இத்தனைக்கும் கையில் கிடைக்கும் 1000 ருபாய் தாளினை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதது இன்றைய காலகட்டத்தின் துர்ப்பாக்கியநிலை தான் . நாளுக்கு நாள் ஓய்விற்கும் சராசரி மனிதனிற்குமான தொடர்ப...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

எழுந்த அறிவு - தமிழன் டா!!!

படப்பிடிப்பு தொடங்கிய கணத்தில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை தந்த படங்களில் ஏழாம் அறிவும் ஒன்றாய் இருந்தது. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் திரைப்படம் சார்பாக படக்குழுவினரால் வெளியிடப்படும் கருத்துகளும் சற்றே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவண்ணம் இருந்தன என்றால் மறுப்பதிற்கில்லை. குறிப்பாக கதாநாயகன் சூர்யா , போதிதர்மனாக காட்டப்படும் சில புகைப்படங்களும் சாதாரண எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே எமது எண்ணங்களை குவியச்செய்த வண்ணம் இருந்தன. முடிவில் படமும் வந்தது. பார்த்தோம். மேற்கொண்டு இதனூடே பயணிக்கும் முன்னர் சில விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இது “ ஏழாம் அறிவு ” எனும் திரைப்படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்பதிப்பின் உருவாக்கம் ஏழாம் அறிவின் பாதிப்பினால் தோன்றியது என்றே கூறவேண்டும். உலக இயக்கம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனது பாரம்பரியங்களாகட்டும் அவனது கலாசாரங்களாகட்டும் அவன் வாழ்ந்த விதிமுறைகளாகட்டும் அனைத்தும் தற்பொழுது பார்க்கும் பொழுது எம்மால் சற்றே “ எப்படி இதெல்லாம் இருந்தது ??!!” என்பது போன்ற கேள்விகளைச்சரங்களை மனதிலே எழுப்பிய வண்ணம் வேறு...

நிரலாக்க மொழிகள் (Programming Languages)

அனைவருக்கும் வணக்கம் இன்றைய உலகம் பல்வேறுபட்ட சிந்தனைகள் மற்றும் செயலாக்கங்கள் என்பவற்றின் முதலீட்டில் கணத்திற்கு கணம் அங்கீகரிக்கப்படும் கண்டுபிடிப்புகளுடன் வேகமாக வளர்ச்சி பெற்ற வண்ணம் உள்ளது . ஒவ்வொருநாளும் புதுப்புது அனுபவங்கள் அவற்றின் வாயிலாக புதுப்புது பரிமாணங்களுடன் மனிதனும் கால மாற்றத்திற்கு இசைவாக்கப்பட்டவனாய் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகிறான் . மாற்றங்களுக்கேற்ப மாறுபவன் எதிர்வரும் சூழலை சமாளித்தவண்ணம் எதிர்ப்படும் சவால்களை முறியடித்தவண்ணம் முன்னேறிக்கொண்டிருக்கிறான் . மாற்றங்களுக்கு முரணானவன் காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்படுகிறான் . இந்த உலகில் பல்வேறுபட்ட பாதைகளில் மாற்றங்களுடன் பலரும் பயணித்துக்கொண்டிருந்தாலும் தகவல் தொழில்நுட்பவியலுடன் தொடர்பு பட்டவர்கள் தமது வேலைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக அன்றாடம் உலகில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை அவதானித்துக்கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாதது . நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளில் நாட்டம் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக...