விம்பம்
கல் கொண்ட மனிதன் இன்று பிரபஞ்சத்தையும் தாண்டி தனது எண்ண அலைகளை பரவவிட்டுக்கொண்டிருக்கிறான். மனிதனது சிந்தனாசக்தி வியாபித்திருக்கும் தன்மையானது காலத்துடன் அதிகரித்த வண்ணமே செல்கிறது.
இவ்வாறு மனிதன் தனது ஆற்றலைப்பயன்படுத்தி எவ்வளவு தான் உயர்ந்தாலும் அவை அனைத்தும் நன்மைக்குத்தானா என்ற வினாவின் மூலம் மனிதனது கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் சற்றே அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் தவறவில்லை.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவனது வாழ்வு காலம் நிறைவுறும் வரையான காலப்பகுதியை உற்றுநோக்கும் போது அவனது பண்புகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் அவனது கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான வேறுபாட்டைப்பொறுத்தே அவன் காலம் கடந்து வாழ்பவனா அல்லது கால ஒட்டத்தில் அடித்து செல்லப்படும் துரும்பாகிறானா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
உலகம் காணும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நோக்கும் போதும் அவற்றின் தோற்றத்திற்கான அடிப்படைக்காரணம் பண்புகுறைபாடு தான் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிதான் வருகிறது.
பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு பல்வேறு சமூகங்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் முள் படர்ந்த மரமொன்றின் கிளைகளை தகர்க்கிறதே தவிர அவற்றின் வேரை அறுப்பதில்லை. வேரறுக்கும் என்ற நம்பிக்கையுடன் எனது எண்ணத்தில் உதித்திருக்கும் கருத்துகளை உங்களுடன் பகிரலாம் என எண்ணுகிறேன்.
நன்றி.
Comments
Post a Comment