சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.
இச்சம்பவமானது 2004/03/05 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே 10ம் திகதி செய்தி நிறுவனங்களுக்காக இந்த பறக்கும் தட்டு பற்றிய வீடியோக்கள் வெளியிடப்பட்டது. வினோதமான ஒளிரும் பொருட்களாக தென்பட்டவற்றில் சில கூரிய ஒளிரும் விளக்குகள் போலவும் இருந்தன. பொழுது சாயும் வேளையில் ஆகாயத்தில் தென்பட்ட இந்த பறக்கும் தட்டின் வேகம் திகைப்பூட்டும் விதமாக அதிவிரைவாக சென்று மறைந்தன. குறிப்பிட்ட நாளில் விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தல் காரர்களை பிடிப்பதற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விமானப்படை விமானிகளால் இந்த பறக்கும் தட்டு அகச்சிவப்பு சாதனங்கள் மூலம் படம் எடுக்கப்பட்டது.
2. வேற்றுக்கிரக வாசிகள் பற்றியவை
2006
இடம் :- ஃகொரண இலங்கை
அவதானித்தவர்கள் :- கிராமவாசி
கருத்து :- “நான் அந்தத்தெருவால் வந்தபோது 2 குள்ள உருவமானவர்களைக்கண்டேன். அருகில் வர அவர்களின் தோற்றம் இன்னும் தெளிவாக தெரிந்தது. ஒல்லிய உடம்பும் பெரிய தலையும் உடைய அவர்களுக்கு அருகில் செல்ல முயற்சித்தேன். ஆனால் அவர்கள் காட்டுப்பகுதியினுள் ஒடி தப்பிவிட்டனர். அவர்களின் உடல் நிறம் பொன் போன்று இருந்தது.”
குறிப்பு மேற்படி கிராமவாசி குறிப்பிட்ட நேரத்திற்கு சற்றுப்பின் அத்தோற்றத்தை உடையோரை அவதானித்ததாக காட்டில் விறகு பொறுக்கச் சென்றிருந்தோர் தெரிவித்தனர்.
2006
இடம் :- இலங்கை (தேவேந்திர முனையை அண்டிய கிராமம்)
அவதானித்த்வர்கள் :- பிரதேசவாசிகள் சிலர்
கருத்து :- குள்ளமான ஒல்லிய உடம்பும் பெரிய தலையும் கொண்ட 3 பேரை அவதானித்தோம். பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் எம்மை திரும்பிப்பார்த்தார்கள் நாங்கள் மயக்கமுற்றோம்.
1980களில்
இடம் :- கைதடி யாழ்ப்பாணம்
அவதானித்தவர்கள் :- பிரதேசவாசிகள் சிலர்
கருத்து :- ஒளிரும் பொருளிலிருந்து இறங்கிய அந்த உருவங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தார்கள். மெல்லிய உடல் உடையவர்களாகவும் பெரிய தலைகள் கொண்டவர்களாகவும் இருந்தனர்.
1954
இடம் :- அமெரிக்கா
அவதானித்தவர் :- கிராமவாசிகள்
கருத்து :- அவர்கள் 3 பேர் இருந்தனர். அருவருப்பான உடலமைப்பை கொண்டிருந்தனர். ஒல்லியாக இருந்தனர்.
பூமியில் உள்ள கருவிகளுக்கு கிடைத்த சமிக்ஞைகள்
“ஆசிசோ“ விண்ணியல் ஆய்வு மையத்தில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த அன்டனாவுடன் கூடிய பிரமாண்டமான தொலைநோக்கியில் ஒரு வானொலி சமிக்ஞை பதியப்பட்டது. இதே போன்று மேலும் பல தடவைகளும் சமிக்ஞைகள் பதியப்பட்டன.
இவற்றுள் ஒன்று ''SHHGGO2+149 '' எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த அலைவரிசையானது 1420 MHz வேகத்தில் பூமியை அண்மித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மேற்கூறப்பட்ட சமிக்ஞைகளும் வேற்றுக்கிரகங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பிரபஞ்சம் என்பது மிகவும் விரிந்தது. எண்ணில் அடங்காத நட்சத்திரங்களையும் அவற்றிற்குரிய கோள்கள், விண்கற்கள், வால்வெள்ளிகள் என்று வரையறுக்கப்படாத எல்லைகளைக் கொண்டும் காணப்படும் இந்தப்பிரபஞ்சத்தில் பூமியை ஒரு மிகச்சிறிய புள்ளியாக கருதலாம். இப்படிப்பட்ட ஒரு மிகச்சிறிய இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மால் நமது அறிவையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் கொண்டு அவற்றிலிருந்து வேற்றுக்கிரகவாசிகள் இருக்கமுடியாதென்று கூறுவது கிணற்றுத்தவளைகளின் மனநிலையையே நாம் கொண்டுள்ளோம் என்பதையே உறுதிப்படுத்தும். ஆகவே இவ்வாய்வின் அடுத்த கட்டங்கள் வேற்றுக்கிரகவாசி பறக்கும் தட்டுக்கள் ஆகியவை உண்மையானவை என்ற அடிப்படையிலேயே இருக்கும்.
தொடரும்................
Comments
Post a Comment