Skip to main content

யார் ? இவர்கள் 04

3.குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல்.


எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாமென எண்ணுகிறேன்.


1. அவர்களின் கிரகத்தில் உள்ள உலோகங்கள் உள்ளடங்கலான மூலகங்கள் உறுதி, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை ஆகியவற்றை இயல்பாக மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்குமிடத்து அவர்களின் ஏனைய கிரகங்கள் மீதான பிரவேசம் சவால்கள், பிரச்சினைகளை குறைவாகவே உள்ளடக்கியிருக்கும்.

2. சூழலுக்கேற்ப ( பௌதிக நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ) உடலமைப்பை மாற்றக்கூடிய பரிமாண வளர்ச்சியை வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடைய கிரகத்தின் பௌதிக நிலையில் காணப்படும் வித்தியாசமான தன்மை காரணமாக கொண்டிருக்கலாம். எமது பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் எமது மக்களுக்கு திடீர் திடீரென தோற்றமளிப்பதும் அதேவேகத்தில் மறைந்து போவதும் இக்கருத்தை மேலும் வலியுறுத்துகின்றன.

3. எமது பூமியில் நாம் மூன்றுவகைப்பரிமாணங்களை மாத்திரமே கொண்டு இயங்குகிறோம். ஆனால் பூமியில் வசிப்பவர்களுக்கு புலப்படாத பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக வேற்றுக்கிரகவாசிகள் தமது இயக்கத்தை மேற்கொள்ளக்கூடிய திறனை கொண்டிருக்கக்கூடும். இவ்வாறான நிலை இருப்பதுவும் இவர்கள் எமது கண்களுக்கு திடீரென தோற்றமளித்தல், மறைதல் ஆகியவற்றிற்குரிய விளக்கமாக இருக்கும்.

4. பூமியலுள்ள எமக்கு

புலன்கள் :- கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்தல், மணத்தல்

பொறிகள் :- காது, மூக்கு, கண், நாக்கு, தோல்



ஆனால் அவ்வேற்றுக்கிரக வாசிகள் இவற்றில் மேலும் பலவற்றைக்கொண்டிருந்தால் எம்மால் அவற்றைக்கண்டுபிடிக்க முடியுமா? அவை எவை என்று ஊகிக்கவே முடியவில்லையே? எவ்வாறு தான் கண்டுபிடிப்பது?

அவர்களின் இனப்பெருக்க முறையானது மேற்குறிப்பிட்ட ஏனைய புலன்களின் ஒன்றை அடிப்படையாக்க்கொண்டு கூட அமையலாம்.


பறக்கும் தட்டுக்களை ஆக்கப்பயன்படும் உலோகங்களின் வேறுபட்ட இயல்புகளின் சாத்தியம்

1947ம் ஆண்டு தொழில் அதிபரும் விஞ்ஞானியுமான கென்னத் ஆர்னல்ட் என்பவர் தனது சொந்தவிமானத்தில் பறந்து சென்றார். வொஷிங்டன் அருகே ''காஸ்கட்'' மலைப்பகுதியில் அவர்விமானத்தை ஓட்டிச்சென்ற போது பறக்கும் தட்டு போன்ற பொருளை அவர் கண்டார். அது மணிக்கு சுமார் 1700 மைல் வேகத்தில் பறந்துசென்றதாகவும் குறிப்பிட்டார். விமானி கென்னத் மட்டுமன்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரும் இதை ரேடார் கருவி மூலம் பார்த்தனர். இது தவிர பொதுமக்கள் பலரும் பறக்கும் தட்டைப்பார்த்தனர்.

இச்சம்பவம் சார்ந்த படங்களே இப்பதிவில் இடப்பட்டுள்ளன.

தொடரும்..........

Comments

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

கண்ணம்மா 03

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டினுள் நுழைய, "டேய் கணேஸ்!! , டேய் கணேஸ்"   என்று உரக்கக் கேட்ட சத்தத்தை கேட்டதும் வீட்டினுள் சென்ற இருவரும் வெளியே விரைந்து அழைத்தவனைக் கண்டனர். அங்கு கணேசன், "ஆ,  கமலண்ணாவா, அண்ணா !!, என்ர நிலமய உங்களுக்கு என்னண்டு புரிய வைக்கிறது எண்டு தெரியாமலிருக்கு. அண்ணா இப்ப எங்கட் குடும்பம் சரியான கஸ்டத்துல இருக்குது . எப்பிடியும் இந்த மாதம் முடிய கிடைக்கிற சம்பளத்துல அஞ்சு பத்துண்டு ஒரு வருசத்துல கடன அடச்சிர்றண்ண". என விழி அருவி சொரிய மொழிந்தான். " இந்தச் சாட்டெல்லாம் எவ்வளவு நாளுக்குத்தான் சொல்லுவாய்? இதெல்லாம் என்னட்ட வச்சிருக்காத சரியோ!!!! நீ எல்லாம் ஒரு ஆம்பிள...... சொல்ல வெக்கமா இல்ல. அது சரி, மானம் , மரியாத, சூடு, சுறண... இதெல்லாம் இல்லாதவங்ககிட்ட வெக்கம் எங்கால இருக்கப்போகுது??!!. நான் மட்டும் உன்ர நிலயில இருந்திருந்தா நாக்க புடுங்கிக்கிட்டு செத்துப் போயிருப்பன்டா!!! நீ இதெல்லாம் இந்த உலகத்துல இருக்கிறதே வேஸ்ட் தூ...." என்று வெந்த புண்ணில் வேல் பாய்ந்த வலியை சொற்களால் கோர்த்துவிட்...

யார் ? இவர்கள் 01

முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் அறிவியல் உலகோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன. அறிவியலின் கழுத்தை அவ்வப்போது நெரிக்கும் இந்த மர்ம முடிச்சுக்கள் ஏன் நிகழ்கின்றன. என்பன புரியாத புதிர். அவிழ்க்கப்படாத இந்த சிக்கலான முடிவுகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று தான் U.F.O (UNIDENTIFIED FLYING OBJECTS ) எமக்கு “பறக்கும் தட்டுகள்” என்று பரிச்சயமானவை தான் இந்த “U.F.O” கள் காலங்காலமாகவே இந்தப்பறக்கும் தட்டுகள் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ளோரால் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. எனினும் மேற்படி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவதானித்தோரால் வெற்றிகரமாக ...