கண்ணம்மா
காரிருள் அகன்று சூரியன் கிழக்கு திசையில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தியவண்ணம் செங்கதிர்கள் கொண்டு ஒளிபரப்ப, குயில்கள் கீச்சிட, சேவல் கூவிட வழமை போல அன்றைய தினமும் உயிர் பெற்றது - அந்த ரம்மிய காலைப்பொழுதுடன்.....
பச்சிளங்குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்த கண்ணம்மாவையும் , அவளது தம்பி குமரேசனையும் நோக்கி அவர்களது தாயான செல்லம்மா, செல்லமாய், " கண்ணுக்குட்டி, குமரேசா எழும்புங்கோடா!!!, என்ர ச்செல்லங்களெல்லோ !!! பள்ளிக்கூடத்துக்கு போவோணும் இல்லயோ? எழும்புங்கோடா!!! , என்ர ராசாத்தியள்!!!" உள்ளத்தில் உள்ள அன்பு நிறைந்து ஒழுகிற்று என்று சொல்லும் அளவிற்கு பாசத்தை வாரி இறைத்து, தன் இரு கண்களென எண்ணி வளர்க்கும் அவள் புதல்வர்களை எழுப்பினாள். பிள்ளைகள் இருவரும் குளிக்கவென எடுத்த வைத்த வெந்நீர் அடங்கிய பானையை அவர்களிடம் கொடுக்கவும் செல்ல எரிச்சலுடன் தம் தாயின் முகம் பார்த்த மொட்டுக்கள், சிணுங்கிய வண்ணம் குளியலறை செல்ல அவர்கள் தலையை தடவிவிட்டு சமையலறை நாடினாள் செல்லம்மா.
செல்லம்மா- வீங்கிய கண்கள், ஒடுங்கிய கன்னங்கள், வட்ட முகம், பொதுநிறமேனி, அளவான கூந்தல், முலாம் பூசிய தோடுகள், மஞ்சள் கயிறாலான தாலி, சுட்டு விரல் அளவு கொள்ளும் சிவப்பு நிற பொட்டு கொண்ட ஒரு மாது.
தொடரும்......
தமிழ் மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteதொடரட்டும் உமது பயணம் !!!!
வாழ்த்துகள்!!!
eager to read the next part both in kannamma and maayarajjyam , gokul.....
ReplyDeleteதொடருங்கள்..நன்றாக இருக்கிறது..
ReplyDelete