சமூகத்தில் நிலவும் சில உண்மைக்குப்புறம்பான தகவல்கள்
திகில்களும் , மர்மங்களும் தாராளமாக கொட்டிக்கிடக்கும் இந்த பெர்முடா முக்கோணம் நோக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க உறுதியான தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தினால் மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்படுகின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக பல வதந்திகள் உருவெடுக்கத்தொடங்கியுள்ளன.
இவ்வாறான வதந்திகள் அவை தொடர்பான எண்ணங்களை மிகவும் வித்தியாசமான முறையில் ஏற்படுத்திவிடுவதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே பல புதிய கேள்விகளை ஏற்படுத்திக்கொண்டு மர்மங்களின் அளவையும் அதிகரித்து விடுவது தான் வேடிக்கையாக உள்ளது.
பெர்முடா முக்கோணத்தின் இரகசியம் தான் என்ன?
கேள்விப்படும் அனைத்து சம்பவங்களையும் திகில் மர்மம் மற்றும் அமானுஷ்ய விடயங்களின் கலவையாக எமது மனங்களில் எண்ணத்தை தோற்றுவிக்கும் இந்த புரியாத புதிரின் விடை தான் என்ன?
பொதுவாக மக்களால் அறியப்பட்ட மனித அறிவியல் அம்சங்களின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் பொய்யாக்கும் வகையில் மக்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளின் தோற்றத்திற்கு காரணமாக திகழும் இப் பெர்முடா முக்கோணம் தொடப்போகும் கரை தான் என்ன?
தொழில்நுட்ப வசதிகள் பலவற்றைக்கொண்ட பல கப்பல்களையும் பல விமானங்களையும் திடீரென மறையச் செய்த இம்முக்கோணம் தொடர்பான எனது முடிவை உங்களுக்குத்தெரிவிப்பதன் மூலம் கருந்துளை மற்றும் பிரபஞ்சத்தில் நிலையற்ற காலத்தன்மை பற்றிய விளக்கத்தினை உங்களுக்கு வழங்கலாமென எண்ணுகிறேன்.
தொடரும்.....
NICE.....
ReplyDeleteT.KIRUBA
THANKS... AND EXPECT THE SAME EVER....
ReplyDeleteநன்றாகவுள்ளது.
ReplyDeleteஉங்களது ஆராச்சி முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.