Skip to main content

MAAYA RAJJYAM 08

மறைந்த கப்பல்கள்

INSURGENT

ஆண்டு :- 1800
மாதம் :- 08

சம்பவம் :- பெர்முடா கடற்பகுதியில் 340 பயணிகளுடன் மறைந்து போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை


WASP

ஆண்டு :- 1814
மாதம் :- 10
திகதி :- 09

சம்பவம் :- பெர்முடா முக்கோணப்பகுதியில் 140 பயணிகளுடன் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை



ATLANTA

ஆண்டு :-1880
மாதம் :- 01

சம்பவம் :- இங்கிலாந்தைச் சேர்ந்த இக்கப்பல்கள் 290 பேருடன் இப்பகுதியினுள் காணாமல் போனது.

தேடுதல் முயற்சி :- இங்கிலாந்து அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது

தடயங்கள் :- எதுவும் இல்லை

USS CYCLOPS


ஆண்டு :- 1918
மாதம் :- 03
திகதி :- 04

கப்பல் விபரம் :- அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்தது. சுமார் 309 கடற்படை வீரர்களுடன் வர்ஜீனியாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டது.

சம்பவம் :- கப்பலிலிருந்த 309 பேருடன் பெர்முடா முக்கோணப்பகுதியை அடைந்தபோது மறைந்து போனது.

தேடுதல் முயற்சி :- அமெரிக்கா அரசாங்கத்தால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

RAIFUKU MARU


ஆண்டு :- 1925
மாதம் :- 04

கப்பல் வகை :- ஜப்பானிய சரக்கு கப்பல்
பணியாளர்களின் எண்ணிக்கை 38
கப்பலிலிருந்து வந்த இறுதிச்செய்தி
உதவி!!! உதவி !!! ஆபத்து ஈட்டி போல வந்து கொண்டிருக்கின்றது. சீக்கிரம் வாருங்கள். எங்களால் தப்பிக்கமுடியாது. காப்பாற்றுங்கள்.

சம்பவம்:- பஹாமசிற்கும் கியூபாவிற்கும் இடையில் காணாமல் போனது.

தடயங்கள் :- எதுவும் இல்லை

SAO PAULO



ஆண்டு :- 1951
மாதம் :- 10
திகதி :- 04

கப்பல் வகை :- இராணுவக்கப்பல்

சம்பவம் :- துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படும் 2 நீராவிப்படகுகளின் உதவியுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு நீராவிக்கப்பலின் பிணைப்பு அறுந்து போனது. மீண்டும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காக நீராவிக்கப்பல் பின்னோக்கி வந்தது.எனஜனும்  மற்றைய நீராவிக்கப்பலும் பெரிய கப்பலும் அதிலிருந்தவர்களும் காணாமல் போயினர்.

தடயங்கள் :-  எதுவும் இல்லை

மேலதிக தகவல் :- கப்பல் மறைந்த சமயம் அந்தப்பகுதியில் விசித்திரமான  வெளிச்சங்கள் தோன்றி மறைந்ததாக அப்போது பறப்பிலிருந்த விமானிகள் தெரிவித்தனர்.



அடுத்த பாகத்தில் மாய ராஜ்ஜியம் விழுங்கிய மனிதர்கள் பற்றி அலசுவோம்!!!!

மாயங்கள் தொடரும்...............
உங்கள் மாய ராஜ்ஜியத்தில்!!!!!

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!!!

Comments

  1. NICE... KEEP IT UP

    ReplyDelete
  2. eager to read more and more...
    fantastic.....
    im waiting to read the whole part....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...