STAR TIGER
ஆண்டு :-1948
மாதம் :- 01
திகதி :- 29
பல்லாயிரக்கணக்கான மக்களை மறையச்செய்த மர்மங்களின் புகலிடமான பெர்முடா முக்கோணத்தின் பல கோரச்சம்பவங்களில் அமெரிக்க மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியலைகளைத் தோற்றுவித்த பெருமை இச்சம்பவத்திற்கு உண்டு எனலாம்.
சரியாக பெர்முடா தீவிற்கு வடகிழக்காக 380 கடல்மைல் தொலைவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது தொடர்பை ஏற்படுத்திய விமானி காலநிலை நன்றாக இருப்பதாகவும், குறிப்பிட்ட இடத்தை வந்தடைவதில் எந்தச்சிக்கலும் இல்லை என்று தெரிவித்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் அவருடைய தொடர்பு கிடைக்கவில்லை. ராடார் திரைகளிலிருந்தும் விமானம் மறைந்து போனது.
மறுநாள் காலையில் 30 விமானங்கள் 10 கப்பல்களுடன் கூடிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் நீண்ட நேரமாக மிகப்பெரிய கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் முயற்சியில் எதுவித தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயங்கள் தொடரும்!!!
உங்கள் உண்மையின் பக்கத்தில்!!!!
Comments
Post a Comment