தொலைந்த விமானங்கள்
ஆண்டு :- 1945
மாதம் :- டிசம்பர்
திகதி :- 5
அதுவரை பெர்முடாமுக்கோணம் என்று அழைக்கப்பட்டதை பேய்முக்கோணமாக மாற்றிய பெருமை இந்த விமானத்திற்கே சாரும்.
அமெரிக்க விமானிகளின் குறிப்பிடத்தக்க 2500 மணித்தியாலய வான் பயண அனுபவம் மிக்க தேர்ச்சி பெற்ற லெப்டினண்ட் சாள்ஸ் கரொல் ரெய்லர். இவருடன் 14 விமானப்பயிற்சி மாணவர்களை உள்ளடக்கியதாக சுமார் 5 விமானங்களுடன் கூடிய Flight 19 என்கிற பிரிவினுடைய பயிற்சித்திட்டம் LAUDERDALE என்கிற இராணுவ தளத்தில் இருந்து ஆரம்பமானது. குறித்த ஒரு பயிற்சித்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது குறித்த நாளின் வானிலை தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னரே அது செயற்படுத்தப்படுவது வழமையாகும். அவ்வாறே ஆராய்ந்தபோது அன்றைய வானிலை மிகவும் நன்றாகவே காணப்பட்டது. வெற்றிகரமான முறையில் பயிற்சித்திட்டம் முடிந்து திரும்புவதற்கு சுமார் சில நிமிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே உலகையே உலுக்கிய அச்சம்பவங்கள் அரங்கேறின.
எப்போதும் விமான பயிற்சித்தி்டத்தில் விமானங்கள் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் விமானங்களுடன் தரை வானொலிக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்புகள் பேணப்படுவது வழமையான நடவடிக்கையாகும்.
அவ்வாறே இப்பயிற்சிதிட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் தலைமை விமானி ரெய்லரால் உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தன. பிற்பகல் 3.15 அளவிலும் செய்தியை எதிர்பார்திருந்த வேளையில் ரெய்லர் தொடர்பை ஏற்படுத்தினார்.
ரெய்லர் :- எங்களால் எதையும் பார்க் முடியவில்லை. நிச்சயமாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை
கட்டுப்பாட்டு நிலையம் :- நீங்கள் இப்போது எவ்விடத்தில் உள்ளீர்கள்?
ரெய்லர்:- எதையும் என்னால் கூறமுடியாது உள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை!!!
கட்டுப்பாட்டு நிலையம் :- விமானத்தை மேற்குத்திசையில் திருப்புங்கள்
ரெய்லர் :- எங்களுக்கு மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இந்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறமும் மாறிவிட்டது.
பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பிற்பகல் 3.30 அளவில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர் விமானத்தின் திசைகாட்டி முள் தாறுமாறாக சுற்றுகின்றது. தற்போது எங்குள்ளோம் என்று தெரியவில்லை.அறிவதற்கு முயற்சிக்கின்றோம். என்றார் சிறிது நேரத்தில் தொடர்பை ஏற்படுத்திய ரெய்லர் "நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெள்ளை நீரினுள் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார் அதன் பின்பு அவ்விமானத்திலிருந்து செய்திகள் எதுவும் வரவில்லை.
இதற்கிடையில் காணாமல் போனோரை தேடுவதற்காக எனும் Martin Mariner விமானம் அனுப்பப்பட்டது. சற்று நேரத்தில் தொடர்பு கொண்ட இவ்விமானத்தின் விமானி 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுவதாகவும் ,விமானம் தள்ளாடுவதாகவும் தெரிவித்தார். பின்னர் அவ்விமானமும் முன்னையதைப்போலவே ராடார் திரையிலிருந்து மறைந்து போனது. இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டு நிலைய வானொலியில் FT FT என்ற தெளிவில்லாத குரல் ஒலித்தது. இது Flight 19 இற்குரிய சங்கேத எழுத்துக்களாகும்.
இவ்வொலி
உண்மையிலேயே
அவ்விமானதிலிருந்து வந்திருக்குமானால் .......
மாயங்கள் தொடரும்.......
உங்கள் உண்மையின் பக்கத்தில் !!!!!
Comments
Post a Comment