பனாமா கால்வாயின் நீளத்தை கருதும் போது அது அண்ணளவாக 51மைல் தூரத்தினைக்கொண்டதாக அமைகின்றது. பனாமா கால்வாயினூடான பயணத்தை நோக்கும் போது முதலில் அத்திலாந்திக் கடலினூடாக நுழைந்து லைமன் விரிகுடாவில் அண்ணளவாக 7மைல் தூரம் கொண்ட கால்வாயினூடாக பயணிக்க வேண்டியிருக்கும். இந்த 7மைல் தூரக்கால்வாய் பனாமாய் கால்வாய் உருவாக்கத்திற்கென அடியில் உள்ள சேறு மற்றும் மண் என்பவற்றை அகழ்ந்து பயணத்திற்கென உருவாக்கப்பட்ட வழியாகும். இது முடிவடையும் இடத்தில் இருந்து அண்ணளவாக 11.5மைல் தூரத்தில் கட்டூன் அணைகள் உள்ளன. 3அணைகளை கொண்ட தொடரையே கட்டூன் அணைக்கட்டுகள் என்கிறோம். செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த அணைக்கட்டுக்களால் (பாரிய நீர்த்தொட்டிகள்) குறிப்பிட்ட கப்பல்கள் சுமார் 26மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு கட்டூன் வாவியினுள் செலுத்தப்படுகிறது. இதிலிருந்து 32மைல் அளவிலான தூரம் மேற்படி வாவியினுடாக பயணித்து கப்பல்கள் கம்போவா எனும் இடத்தை அடைகின்றன. அதிலிருந்து படிப்படியாக முன்று கட்டுக்கள் மூலம் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு பசுபிக் கடலை அடைகின்றன.
பனாமாக்கால்வாயினூடான பயணம் பற்றிய ஒரு குறிப்பினை மேலுள்ள பந்தி மூலம் அறியமுடிகிறது. இனி பனாமா கட்டுமானப்பணிகள் பற்றி நோக்குவோம்.
பனாமா கால்வாயின் கட்டுமானப்பணிகள் இரு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டம் 1881 முதல் 1888 வரையிலானதாகும். இந்தக்காலகட்டத்திற்குரிய பணிகள் பிரான்ஸ் நாட்டினால் லெசெப்ஸ் என்பவரின் தலமையின் கீழ் நடைபெற்றதாகும். பின்னர் அடுத்தகட்டம் 1904 தொடக்கம் 1914 வரையிலான காலகட்டத்தை அடிப்படையாக கொண்டது. இது ஒப்பந்த்தின் பின்னர் அமெரிக்க பொறியியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிளின் காலத்தினை குறிப்பதாகும்.
முதல் கட்ட கட்டுமானப்பணிகளின் கைச்சாத்து 1881ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மேற்படி செயன்முறைக்கு சுமார் 512 மில்லியன் பிரான்ஸ் பிராங்க் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டது. பின்னர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் துரித கதியில் இடம்பெறத்தொடங்கின. 1882ம் ஆண்டளவில் குலேபிராவில் மண்ணைத்தோண்டும் பணிகள் ஆரம்பமாகியது. .இந்நிலையில் அத்திலாந்திக்கடலிலிருந்து பசுபிக் கடலை நோக்கி வரும் வழியில் காணப்படும் பௌதிக தோற்றப்பாடுகள் ஆய்வுசெய்யப்பட்டன. வெறுமனே மண்ணைத் தோண்டி அதனூடாக கால்வாய் அமைப்பதன் மூலம் கப்பல்களை பயணிக்க வைக்கமுடியாதெனவும் கப்பல்களை உயர கொண்டுசெல்ல தொட்டிகள் போன்று சில அமைப்புக்களை அமைத்து அதன்மூலமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இயலும் எனவும் உணரப்பட்டது. இதற்கான பொருளாதார செலவுகள் மேலும் அதிகரிக்க காணப்படுவது மட்டுமல்லாது ஒரு பாரிய கப்பலை உயரத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் தொட்டியின் அளவும் மிகவும் இராட்சத அமைப்புடையதாக இருக்கவேண்டுமென்பதால் தீர்மானிக்கப்பட்ட செலவுத்தொகையை விட கட்டுமானச்செலவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபட்டது.
இது மட்டுமல்லாது பணிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கான இடவசதி மற்றும் அவர்களுக்கான மருத்துவ வசதிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாமையும் பாரிய குறையாகவே இருந்தது. மற்றும் நிலத்தை அகழ்வதற்கான உபகரணங்கள் பற்றாக்குறையும் கட்டுமானப்பணிகளின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகியது. இவ்வாறு ஏற்படும் பாரிய பின்னடைவுகளும் வேலையில் காணப்படும் தொய்வுகளும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அடியையும் முதலீட்டாளர்களுக்கு பாரிய இழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் கட்டுமானப்பணிகள் இடைவிடாது தொடர்ந்தன.
இந்நிலையில் அமெரிக்க அரசு பனாமா கால்வாய் கட்டுவதற்கான முயற்சிகளில் தனது ஈடுபாட்டைக்காட்டவே பிரான்ஸ் அரசு தனது உபகரணங்களையும் பல்வேறு பட்ட வரைபடங்களையும் அமெரிக்க அரசிற்கு விற்றது.
பனாமாக்கால்வாயின் மீள்கட்டுமானப்பணிகள் 1904ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கட்ட அமெரிக்க பணியாளர்கள் குலேபரா கணவாயினை அண்டிய பிரதேசத்தில் இருந்து தமது பணியினை 1904 நவம்பர் 11ம் திகதி ஆரம்பித்தனர். 1905ம் ஆண்டு டிசம்பர் மாத்த்தில் குலேபரா கணவாயில் வேலைசெய்வோரின் தொகை 2600 இனைத்தாண்டியது. பசுபிக் கரையோரம் அத்திலாந்திக் கரையோரம் என இருபகுதியாலும் கால்வாய் அமைப்பதற்கான பணிகளும் அதேநேரத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. குலேபரா உச்சியினை உடைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான தொன் டைனமெற்றுக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தக்காலகட்டத்தில் வேலையாட்களின் எண்ணிக்கை 70000 இனை தாண்டியது. மற்றும் உடைக்கப்பட்ட பகுதிகளினை அகற்றுவதற்கு 4000 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு செயன்முறைகள் அனைத்தும் வேகம் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.
தொடரும்.......
Very nice research !!! continue it. i want to know more about Bermuda triangle.
ReplyDeletethanks for the comments my dear friend. it would be nice if you left your name with your comment. i would like to know what further do you expect related bermuda triangle? because it was analised entirely through the "MAYA RAAJYAM"
ReplyDeleteAUTHOR - UNMAYINPAKKAM