பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைகளுடன் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்……. கண்களைத் திறந்தபடியே…..
இங்கு கண்ணம்மா அணிவதற்கு ஓர் மாற்றுப்புடவை இல்லாது, வசிப்பதற்கு ஓர் வீடு இல்லாது, கதைப்பதற்கு ஓர் உறவு இல்லாது, நெஞ்சம் மகிழ ஓர் குடும்பம் இல்லாது, உண்பதற்கு ஓர் உணவில்லாது, தெருவோரத்தில் வீழ்ந்து கிடக்கிறாள் அடியற்ற மரம் போல………………!!!!!
பஸ் ஊரில் வந்து பஸ் தரிப்பிடத்தில் நிற்க, குமரேசன் கீழே இறங்கி, கண்ணம்மா வீழ்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கடைக்கு, தன் உயிரிலும் மேலான அக்காவிற்கு இனிய தின்பண்டங்களை வாங்கவென வந்து பொருட்களை வாங்கி தன் (பழைய) வீட்டை நோக்கி நகர்கிறான்.
வீழ்ந்து கிடந்த கண்ணம்மா அவ்வாறே தற்செயலாக அவனை நோக்குகிறாள். ஆம் ! ஆம் ! இத்தனை காலமாக தன் புண்பட்ட மனதில் சுமந்த அந்தக்குமரேசன் தான். கண்ணீர் அருவி போல் பாய மெல்ல மெல்ல எழுகின்றாள். அவனை நோக்குகின்றாள்……..!
“ஐயா ….. தம்பி….!!”
தன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்த குமரேசன் மெல்ல தன் தலையை திருப்பி கண்ணம்மாவை நோக்குகிறான். அவளை நோக்கி ஒரு பெருமூச்சு விட்டபடி வருகிறான். கண்ணம்மாவின் அருகே வந்து கையில் இருந்த பத்து ரூபாய் தாள்கள் இரண்டை எடுத்து, உருக்குலைந்த முகத்துடன் காணப்படுவது தன் அக்கா என அறியாது, இனங்காண முடியாது, அவளை தெருவோரப் பிச்சைக்காரி என தன்னை எண்ணி அவன் கை தனில் வைத்திருந்த அந்தக்காசுத்தாள்களை அவளிடம் அளித்துவிட்டு வீட்டை நோக்கி புறப்பட தயாரானான்.
Comments
Post a Comment